நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து அவற்றை பாதுகாக்க முனைப்போடு செயல்பட்டு வரும் நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் நலனை புறந்தள்ளி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் அழுத்தம் கொடுப்பது நேர்மையான அதிகாரியை பந்தாடும் தமிழ்நாடு […]
