Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் பாலியல் குற்றவாளி…. அவருடைய இடம் சிறைச்சாலை…. ஜோதிமணி காட்டம்….!!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் குற்றவாளி என்றும் அவர் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார். அண்மையில் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த சீமான், ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? அவர் ஒரு ராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்து உள்ளார். ராகுல் காந்தி தனது தந்தையை கொலை செய்த குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருவள்ளுவர் ஏன் இறந்தார் தெரியுமா?…. காரணம் இதுதான்…. போட்டுடைத்த சீமான்….!!!!

13 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், குஜராத் பிரதமராக இருந்த மோடி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போரை நிறுத்தக்கோரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ராஜபக்சே ஒரு இனப்படுகொலையாளன் என்பதைப்போல கோத்ரா சம்பவத்தில் மோடியும் ஒரு இனப்படுகொலையர் தான். பிரதமர் நரேந்திர மோடி திடீர் என்று வந்து இரண்டு திருக்குறள் பேசியவுடன் […]

Categories
மாநில செய்திகள்

ராஜபக்சேவுக்கு இந்தியாவுல…. எந்த மூலையிலும் அடைக்கலம் கொடுக்காதீங்க…. சீமான் வலியுறுத்தல்…!!!!

நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “இலங்கையில் நிலவியுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து இனப் படுகொலையாளார்களான ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டு, அவர்களது வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் தீவைத்து எரிக்கப்படும் காட்சிகள் தினசரி வெளியாகி வருகிறது. சிங்கள இனவாதம் மற்றும் பௌத்த மதவாதம் இணைந்து தமிழ் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அதன் விடுதலையைத் தகர்த்து, அதற்காகப் போராடிய […]

Categories
அரசியல்

‘மின்தடை….. சொகுசு பங்களா”….. ட்விட்டரில் மல்லுக்கட்டும் சீமான், செந்தில்பாலாஜி….!!!!

திமுகவின் ஓராண்டு சாதனை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக விமர்சித்த நிலையில் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி அதிமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பலரும் முக ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் திமுக அரசின் இந்த ஓர் ஆண்டு ஆட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்திய பிரச்சனையான […]

Categories
அரசியல்

அரசின் அலட்சியமே காரணம்…. சீமான் கண்டனம்…!!!!!!

மதுரையில் கழிவுநீர் தொட்டியை சீரமைக்கும் போது பணியாளர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மதுரையில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கிய 3 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்ததும்  அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அதில் ஒருவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்பது மேலும் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அது நம்ம தம்பி தான்….! கேஜிஎப் ராக்கி பாய் மாதிரி சொல்லுங்க… உதாரணம் காட்டிய சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கேஜிஎப் நடிச்ச யாஷ் என்ற நடிகர் சொல்றாரு…. நான் கன்னடம் என்பதில் பெருமை என்கிறாரே. பெருமைக்குரிய கன்னடன்  என்று தானே சொல்கிறார்கள். அது மாதிரி நான் தமிழன் என்பதை பெருமை என்று சொல்ல வேண்டியதுதானே.  அது ஒரு சின்ன புள்ள நம்ம  தம்பி,  அவருக்கு தெரியல. அதனால அதை விட்டுடனும். எல்லாத்தையுமே விமர்சிக்கனும் என்கிற நோக்கத்திலேயே இருந்தீங்கன்னா அதுவே ஒரு நோயாகி விடும். தொடர்ச்சியாக எதையாவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியை பேசிய இளையராஜாவை விமர்சிக்க வேண்டாம் – சீமான் ஆதரவு …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஐயா இளையராஜா ஒப்பிட்டு பேசியது, அவருடைய தனிப்பட்ட விருப்பம். தனிப்பட்ட கருத்து. அந்த கருத்தை நாம் ஏற்கின்றோமா…. எதிர்க்கிறோமா…. என்பது வேற.  அதற்காக அவரை விமர்சித்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் இதைவிடையெல்லாம் மோடி அவர்களை புகழ்ந்து பேசியவர்கள் தான்  ஐயா இளையராஜாவை திட்டுகின்றார்கள். இதை விட மோடி அவர்களை பெருமையாக பேசிய தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்களே….  அவர் மாதிரி ஒரு தலைவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புகழ்ந்து பேசுனா விருது கொடுப்பாங்க – பாஜகவை நக்கலடித்து, விமர்சித்த சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசிய இனத்துக்கு என்று ஒரு தேசம் வேண்டும் என்று சிந்தித்த பெருந்தமிழர், அதற்காகவே நாம் தமிழர் என்ற அரசியல் பேரியக்கத்தை தொடங்கி, அயர்லாந்தில் ஐரிஷ் ….. நாங்கள் ஐரிஷ் மக்கள் என்கின்ற அமைப்பை தொடங்கி அவர்கள்,  தங்களுக்கென்று தனி நாடு கேட்டுப் போராடிய போது,  அவர்கள் டெய்லிமிரர் என்கின்ற ஒரு இதழை நடத்தினார்கள். அங்கே படிக்க சென்ற நம்முடைய ஐயா சி பா ஆதித்தனார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலி சான்றிதழ் கொடுத்து வேலை…. உடனே பணிநீக்கம் செய்க…. சீமான் வலியுறுத்தல்….!!!!

போலி சான்றிதழ் மூலமாக தமிழர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து மோசடியில் ஈடுபட்ட வடமொழித்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “தமிழகத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ்களை தந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. சுமார் 200 வடமாநிலத்தவர்கள் அஞ்சல் ஊழியர் பணி, சிஆர்பிஎஃப் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் போலி சான்றிதழ்களை தந்து பணியில் சேர்ந்துள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி தந்தால்…. கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும்… சீமான்….!!!

ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று அமித்ஷா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஏ.ஆர்.ரகுமானின் லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு பேசுபொருளாகியுள்ளது. “இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசன் பாடலை பதிவிட்டவர், இந்தித் திணிப்புக்கு எதிராக தன்னுடைய குரலை கொடுக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் […]

Categories
அரசியல்

ஒருபோதும் இது நடக்காது!…. “தமிழக மக்கள் எதிர்த்து நிப்பாங்க”…. சீமான் எச்சரிக்கை….!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி மொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமித்ஷாவின் கருத்துக்கு கடும் கண்டனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியைத் திணித்து, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா? …. சீமான் கண்டனம்….!!!!

இந்தியைத் திணித்து இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், ”ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில் அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது, இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் சட்ட ஒழுங்கு சீரழிவு…. தடுக்க இதை பண்ணுங்க…. சீமான்…..!!!!!

தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் அதிகரித்துவரும் சட்ட ஒழுங்கு சீரழிவினைத் தடுப்பதற்கு உள் நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தமிழகத்தில் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அதை தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“2022 குற்றவியல் நடைமுறை அடையாள சட்டவரைவு”…. கண்டனம் தெரிவித்த சீமான்…..!!!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, தனி மனிதரின் அடிப்படை உரிமைகளை அடியோடு மறுத்து நாட்டு மக்களைத் திறந்த வெளி கைதிகளாக மாற்ற இயலும் “குற்றவியல் நடைமுறை அடையாள சட்டவரைவு 2022 யை” மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இதையடுத்து குடிமக்களின் உயிரியல் தகவல்களைத் திரட்டிப் பாதுகாக்கப்படுவதன் வாயிலாக மீண்டும் நவீன குற்றப் பரம்பரையினரை உருவாக்க முயலும் என்பது பா.ஜ.க அரசின் செயல் எதேச்சதிகாரப் […]

Categories
அரசியல்

மத்திய அரசை காரணம் காட்டி…. சொத்து வரியை உயர்த்தகிறீர்களா?…. எந்தவகையில் இது நியாயம்…. சீமான் கேள்வி….!!!

மத்திய அரசை காரணமாக வைத்து சொத்து வரியை தமிழக அரசு உயர்த்துவதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “திமுக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளது பெரும் கண்டனத்துக்குரியது. முந்தைய அரசு 100% விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தியதை கண்டித்து போராட்டம் நடத்தி விட்டு தற்போது 150 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தி உள்ளது எவ்வகையில் ஏற்புடையது. தற்போதைய சொத்து வரி […]

Categories
அரசியல்

திடீரென மயங்கி விழுந்த சீமான்….!! போன் மூலம் நலம் விசாரித்த எடப்பாடி…!!

சென்னை திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு வீடுகளை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சீமான் அங்குள்ள மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சீமான் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திடீரென மயங்கி விழுந்த சீமான்…. செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு….!!!!

செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்கள் சீமானுக்கு உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது […]

Categories
மாநில செய்திகள்

பரபரப்பு…. செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த சீமான்…!!

சென்னை திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்தார். திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கிருக்கும் குடியிருப்பை அப்புறப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.. அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுதற்காக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு வந்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தார்.. சந்திப்பு முடிந்த பிறகு திடீரென மயக்கமடைந்து சரிந்தார். உடனடியாக தொண்டர்கள், காவல்துறையினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு…. சீமான் கண்டனம்….!!!!

நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனுடன் சேர்த்து சமையல் சிலிண்டர் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவுக்கு எச்சரிக்கை!…. அடுத்த 2 வருடங்களில் இது நடக்கும்…. சீமான் சொன்ன பகீர் தகவல்….!!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “இவர்கள் ரூ.5,000 கோடி வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் செலவிடுகிறார்கள். ஆனால் தற்போது முதல்வர் ரூ.6,500 கோடி முதலீடு கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார். லுலு மார்கெட் முதலீடே அன்னிய முதலீடு. வட இந்தியர்கள் தான் லுலு மார்கெட் முழுவதும் வேலை செய்ய போகிறார்கள். பின்னர் வட இந்தியர்களே இங்குள்ள நிலைபாடுகளையும், அரசியலையும் தீர்மானிப்பார்கள். இது முழுக்க முழுக்க பேராபத்தை நோக்கி தான் செல்லும். துபாய்க்கு […]

Categories
அரசியல்

பாஜகவுக்கு எச்சரிக்கை எடுத்த சீமான்…!! செம கடுப்பான அண்ணாமலை…!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கையை வாட்டி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியும், அன்றாடப் பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. நாட்டு மக்களின் துயரம் துடைக்காத சிங்கள அரசாங்கத்தை கடுமையாக கண்டிக்கிறேன். நாட்டு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தமிழக மக்களை எவ்வாறு துன்புறுத்துவது, எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது என […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சீமானை நான் அவமதித்தேனா?”… அவதூரை மறுத்த பிரபல இயக்குனர்…!!!

சீமானை அவமதித்ததாக ரவிக்குமார் மீது அவதூறு பரவி வந்த நிலையில் அதை மறுத்துள்ளார் ரவிக்குமார். பிரபல இயக்குனரான ரவிக்குமார் “இன்று நேற்று நாளை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்நிலையில் சீமானை அவமதித்து பேசியதாக இணையத்தில் தகவல் வெளியாகி வந்த நிலையில் அதை மறுத்து ட்விட்டரில் ரவிகுமார் கூறியுள்ளதாவது, “நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியது இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக […]

Categories
அரசியல்

நான் ஒன்றும் பாஜகவின் “பி டீம்” அல்ல…. புலம்பி தள்ளிய சீமான்…!!!

சென்னையிலுள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளது. தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்து தரவில்லை. திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளும் இத்தனை ஆண்டு காலமாக நாட்டை ஆட்சி செய்து மோசமான நிலைக்கு தான் தள்ளி இருக்கின்றன. பணம் இருப்பவர்கள் தான் ஜெயிக்க முடியும் என்றால் இங்கு […]

Categories
அரசியல்

“சீமானுக்கு ஸ்டாலின் வைத்த ஆப்பு…!!” ஓ இதனாலதான் மனுஷன் இப்படி கொந்தளிக்கிறாரா…!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பொருத்தவரை யாருடனும் கூட்டணி போடமாட்டார். தனியாகத்தான் இருப்பார் . அதேபோல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்து தள்ளுவார். கடந்த சில நாட்களாக சீமான் திமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். “நல்லாட்சி என்பது சட்ட விதிகளை மதிப்பது தான் உங்கள் ஆட்சியை நல்லாட்சி எனக் கூறாதீர்கள்,” எனக் கூறினார். அதோடு “ஆட்சி கையில் இருக்கும் காரணத்தால் என் தம்பிகளை கடத்தி […]

Categories
அரசியல்

“திமுக குடும்பத்துக்கு திகார் தான் அப்புறம் களி தான்…!!” வேற லெவலுக்கு இறங்கிய சீமான்….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது அதில் உரையாற்றிய சீமான் கூறியதாவது, “மக்களை நம்பித்தான் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். ஆளும் கட்சி தான் உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. அவ்வாறு வெற்றிபெறும் […]

Categories
அரசியல்

“திமுகவினர் வேட்பாளர்களை கடத்துகிறார்கள்…!!” சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “மக்களை நம்பித்தான் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். ஆளும் கட்சி தான் உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. அவ்வாறு வெற்றிபெறும் பட்சத்தில் அது மக்களின் முடிவாக இருக்க வேண்டும் அல்லது சர்வாதிகார போக்காக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டது […]

Categories
அரசியல்

“ரஜினி, விஜயை வைத்து என்னை எதிர்க்கிறார்கள்…!!” சீமான் அதிரடி பேட்டி….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தேர்தல் பரப்புரையற்றினார். அதில் அவர் கூறியதாவது, “கூட்டணி எங்களது கோட்பாடு இல்லை. கொள்கை தான் எங்களுடைய கோட்பாடு. பாஜக,திமுக, அதிமுக காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் எங்களுக்கு கூட்டணி இல்லை. நட்புறவும் இல்லை .தனியாகத் தான் இருப்பேன் தோற்கடித்தால் பரவாயில்லை. பாஜகவை என் கட்சியுடன் ஒப்பிட வேண்டாம் அவர்கள் மதத்தை வைத்து […]

Categories
அரசியல்

8″ மாதத்தில் 8,000 கோடி ஊழல்…” திமுக மீது சீமான் பரபரப்பு புகார்….!!

திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் 8,000 கோடி ஊழல் செய்துள்ளதாக சீமான் பரபரப்பாக பேசியுள்ளார் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் திமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்களில் 8000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக பரபரப்பு […]

Categories
அரசியல்

ஈழத்தாயகத்தை சேர்ந்த மீனவர்களை விடுவிக்க வேண்டும்…. சீமான் கோரிக்கை…!!!

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள் 4 பேரை விடுவிக்க சீமான் வலியுறுத்தியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி ஈழத்தாயகத்தின் முகமது ரியாஸ், முகமது ரிஸ்கான், முகமது கைதர் மற்றும் முகமது கலில் ஆகிய மீனவர்கள் 4 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்து இரண்டு மாதங்களை தாண்டி சிறையில் அடைத்து வைத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் […]

Categories
அரசியல்

நீங்களே இப்படி பண்ணலாமா….? டெபாசிட் தொகை உயர்வு….. திரும்ப வாபஸ் வாங்குங்க…. சீமான் வலியுறுத்தல்….!!

உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள டெபாசிட் தொகை உயர்வை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று நேர்காணல் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் […]

Categories
அரசியல்

கட்டண உயர்வு….. “இதெல்லாம் ரொம்ப ஓவருங்க!”…. தேர்தல் ஆணையத்தின் மீது சீமான் ஆவேசம்…!!!!

நகராட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக சீமான் பேட்டியளித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று நேர்காணல் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் டெபாசிட் தொகையை […]

Categories
அரசியல்

“அவங்களையும் கொஞ்சம் பாருங்க”….! இல்லனா போராட்டம் நடத்துவோம்…. சீமான் நெருப்பு பறக்க பேச்சு….!!!!

கள் விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க கோரி சீமான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கி கள் இறக்குவதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் 100 இடங்களில் கள் இறக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். அதற்கு நான் முழுமையான ஆதரவை தருகிறேன். கள் ஒரு […]

Categories
அரசியல்

தமிழக அரசை வெகுவாக பாராட்டுகிறேன்…. ஆனா இதையும் செய்யுங்கள்…. -சீமான்…!!!

உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தாம்பரம், சென்னை போன்ற மாநகராட்சிகளை ஆதித்தொல் குடிகளுக்கும், பெண்களுக்கு முழுவதுமாக 11 மாநகராட்சிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசை வரவேற்கிறேன். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள உழைக்கக்கூடிய ஆதித்தொல் குடிகள் மற்றும் பல காலமாக சமமான வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் […]

Categories
அரசியல்

செருப்பை காட்டிய சீமான் கைதா….? பழைய வழக்குகளை தூசி தட்டி…. நெருப்பு பறக்கும் தமிழக அரசியல்….!!!!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்திய போலீசார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் மற்றும் சதா ஆகியோர் தன்னை […]

Categories
அரசியல்

“இதெல்லாம் இவங்க மட்டும் தா செய்வாங்க”…. இது ஒரு பயங்கரவாதம்…. எரிமலையாக வெடித்த சீமான்…!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பாஜக மிரட்டல் விடுத்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் டிவியில் சிறுவர்கள் இருவர், மன்னர் மற்றும் அமைச்சர் வேடமிட்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். இது தற்போது நடைபெற்றுவரும் ஆட்சி குறித்து பேசுவது போல் இருந்தது. இதனால் ஜீ தமிழ் டிவி மீது அடக்குமுறைகள் திணிக்கப்படுவதாக நாம் தமிழர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ஒரு பிரபலமான […]

Categories
அரசியல்

“உயிர்பலிகள் அதிகரிக்கிறது!”…. தமிழக அரசே இவ்வளவு மெத்தனம் வேண்டாம்…. பொங்கிய சீமான்…..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், உயிர்ப்பலிகள் அதிகரிப்பதால், இணையதள சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழகத்தில் மீண்டும் இணையதள சூதாட்டத்தால் உயிர்ப்பலிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது கடும் அதிர்ச்சி மற்றும் வேதனையை தருகிறது. திமுக அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழியில் நடக்கும் சூதாட்ட விளையாட்டுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்போம் என்று அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வரை அதற்குரிய எந்தவித […]

Categories
அரசியல்

கருத்துக் கேட்புக் கூட்டம்…. நானே வரேன்….. “அப்ப நாளைக்கு ஒரு நல்ல சம்பவம் காத்திருக்கு”….!!

சென்னை அருகே அனல் மின் நிலையம் துவங்குவதற்கு முன் நடைபெறவிருக்கும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்களில் ஒருவனாக பங்கேற்க உள்ளதாக சீமான் கூறியுள்ளார். சென்னை அருகே ஏற்கனவே அனல்மின்நிலையம் உள்ள நிலையில் புதிதாக அனல் மின் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு புவியியல் வல்லுனர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே எண்ணூரில் புதிதாக அனல் மின் நிலையம் தொடங்கினால் அது சென்னைக்கு மிகுந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அனைத்து தரப்பு மக்களும் கூறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு எதிராக கருப்பு கொடி..? சீமான் சொன்னது சரி..! வைகோ அதிரடி

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு நேரில் சந்தித்து தான் வற்புறுத்த வேண்டும். நீட் விலக்கில் நாம் வெற்றி பெற முடியும். ஏற்கனவே 16 உயிர்கள் பரிபோயிருக்கின்றன. மருத்துவத் துறையிலே இந்தியாவில்  சிறந்து விளங்குவது தமிழ்நாடுதான். ஆகையினாலே இந்த அடிப்படையில் நீட் பிரச்சினையில் மத்திய அரசு தன்னுடைய போக்கை….  தன்னுடைய விடாப்பிடியாக இருக்கின்ற விடா கண்டன் போக்கை கைவிட்டு தமிழ்நாட்டு பிரச்சனையிலே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. நாங்கள் […]

Categories
அரசியல்

“கட்சி நிர்வாகி மீது பாய்ந்த குண்டாஸ்”…. இது திட்டமிட்ட சதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி…. கொந்தளித்த சீமான்….!!!!

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்திருக்கிறார். யூடியூபரான சாட்டை துரைமுருகன், இணையதளங்களில் வதந்தியை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் தமிழ்தேசிய ஊடகவியலாளராக இருக்கும் சாட்டை துரைமுருகன் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண் சாமியார் என்றால் கெட்டவரா…? காயப்படுத்தாதீங்க…. அன்னப்பூரணிக்கு சீமான் சப்போர்ட்…!!!!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அன்னபூரணி என்ற பெண் திடீரென்று தான் ஆதி பராசக்தியின் அவதாரம் என்று திடீர் பெண் சாமியாராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் இவர் குறித்து பல கருத்துக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நம்மாழ்வார் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அன்னபூரணி பெண் என்றால் அவரை திரும்ப […]

Categories
மாநில செய்திகள்

“மாசற்ற மண்ணுரிமைப்போராளி ஐயா நல்லக்கண்ணு”…. சீமான் ட்வீட்டரில் வாழ்த்து….!!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தன்னுடைய 97வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என்று அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரின் பிறந்தநாளையொட்டி சென்னை தி நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்று அவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது ட்விட்டர் “பக்கத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் இதை மாற்றுவேன்…. சீமான் புதிய அதிரடி….!!!!

சமீபத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும், தமிழ்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவிப்பதாகவும், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முழு தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் தற்போதுள்ள தமிழ் தாய் வாழ்த்தில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் அனைவரும் பாட வேண்டும் என்ற கோரிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“என்னை வெறி பிடித்தவனா மாத்திடாதீங்க”… மேடையில் செருப்பை காட்டிய சீமான்…. பெரும் பரபரப்பு….!!!!

சமூக வலைத்தளங்களில் தன்னை விமர்சித்தவர்களை சீமான் தனது காலணியை  உயர்த்திக்காட்டி பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்துல் ரவுப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 26-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, மாரிதாஸ் கைது செய்யப்பட்டது குறித்து நான் கூறிய கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருவதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் மேடையிலேயே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெய்பீம் சர்சை தேவையற்றது…! தூக்கி வீசிட்டு போயிறணும்…. சீமான் நச்சு பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், ஜெய்பீம் படத்தில் மதம் எல்லாம் கிடையாது, ஜெய்பீம் என்பது ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள், இருளர், குறவர்கள், ஆதிகுடி மக்கள் இவர்களை போன்று காடுகளில் வாழுகின்ற பழங்குடி மக்கள் நம்ம மக்கள். அவர்களுடைய வலி அது வந்து சாதிய மோதல் கிடையாது, ஒரு சாதி இன்னொரு சாதி ஓடுக்குகிறது என்று கிடையாது, அதிகாரம் ஒடுக்குகிறது என்பதுதான் அந்த படம் சொல்கிறது. அதிகாரம் ஒடுக்குகிறது, காவலர்கள் வந்து நீங்கள் வெளியில் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சரியாக செய்த ஸ்டாலின்…! வாழ்த்தி, பாராட்டும் சீமான்…. மகிழ்ச்சியில் திமுகவினர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பள்ளியில் பாலியல் மாணவி உயிரிழந்ததற்கு முதல்வர் வீடியோ வெளியிட்டதற்கு அந்தப் பொறுப்பு அவசியம் தான், அதை நாம் மதிக்க வேண்டும், அவர் சொல்கிறார் நான் முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகும் சொல்கிறேன் என்று, அது எல்லாரும் வருத்தம் இருக்கிறது. இன்னும் பிள்ளைகளால் வந்து தேர்வில் தோற்று போவதையே தாங்குகின்ற முதிர்ச்சி இருக்க மாட்டேங்குது, இது வந்து மிகப் பெரிய மன உளைச்சலில் இருக்கும். சமூகத்தை வந்து தேர்வில் தோற்றுப் போகிற பிள்ளைகள் நீட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை பேசுனது இருக்கு…! உன்னை நம்ப முடியாது ராஜா… பாஜகவை சீண்டும் சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேளாண் சட்டம் திரும்ப பெற்ற பின்பும் விவசாயிகள் போராட்டம் நடத்தியது குறித்து பேசிய அவர், திரும்ப போராட வேண்டுமென்றால் நான் தானே போராடுகிறேன், நீங்க இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருக்கின்ற அருமை சகோதரர் அண்ணாமலை அவர்கள் பேசிய பேச்சை நீங்கள் பாக்குறீங்களா ? 500 ஆண்டுகள் ஆனாலும் ஒரு கமாவை  கூட நாங்கள் மாற்ற மாட்டோம், பயப்படுவதற்கு காங்கிரஸ் கிடையாது, பிஜேபி என்று பேசினது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிட் அடிக்க கொடுக்குறாங்க…! தாய் மொழியே தெரில… ”போ” அப்படினு சொல்லணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் வந்து ஆளுநரை சந்தித்து இருக்கிறார் நீட் தேர்வை பற்றி இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீட் தேர்வு தொடர்பாக சந்தித்தார் என்று யார் சொன்னது ? நீட்டை தான் அவர்கள் நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.  மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் கொடுத்து, அப்படி கொண்டு வந்துட்டீங்க. ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி நாங்கள் வந்தால் நீட்டை  எப்படி நீக்குவது என்று எங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்டனத்திற்குரியது…! இன்று யானை சாவு…. நாளை நாம் தான்…. சீமான் பாய்ச்சல்…!!!

பிரபாகரனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் மாவீரர் நாள் விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நகர்ப்புற உறுப்பினர்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் வழக்கம்போல தனித்து போட்டியிடுவோம். இந்தியாவில் பேரிடர் மேலாண்மை, நீர் மேலாண்மை என்பது இல்லை. யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்ததன் பலன்தான் இன்று கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ளது. இப்படி யானைகளின் வழித்தடங்களை அழித்து விடுதி கட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொந்தமா ஒரு வீடு கூட இல்லைன்னு சொன்னீங்களே…. அப்ப இது என்ன…? சீமானை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்…!!!

மனைவி பெயரில் கொடைக்கானலில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக்கொண்டு தனக்கு ஒரு சொந்த வீடுகூட இல்லை என்று சீமான் பேசி வருவது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீமான் அனைவரையும் கவர வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரபரப்பாகப் பேசி அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்வார். சில சமயங்கள் அவர் பேசுவது அவருக்கு சிக்கலாக அமைந்துவிடும். நெட்டிசன்கள் இவர் பேசும் வீடியோக்களை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்து வருவார்கள். இந்த சூழலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெய் பீம் திரைப்படம்…  சீமான் அளித்த விளக்கம்… தமிழக அரசு அதிர்ச்சி…!!!

ஜெய்பீம் படத்திற்கு சீமான் ஒரு விளக்கம் அளித்துள்ளார். இது திரைத்துறையில், தமிழக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் உருவப்படத்தை திறந்து வைத்த சீமான், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஆண்டுதோறும் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. இதற்கு மாற்று தீர்வு இல்லை. இதனை ஏன் இதுவரை யாரும் சரி செய்யவில்லை. மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள […]

Categories

Tech |