செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும், அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட, இந்திய அரசாங்கத்தால் தேச விரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட PFI ஐ ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து இவர்கள் பேசி வருகிறார்கள். எனவே இந்த இரண்டு இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். […]
