Categories
மாநில செய்திகள்

தம்பி தங்கப்பாண்டி திடீர் இறப்பு…. விரைவில் நீதி கிடைக்கணும்…. சீமான் வலியுறுத்தல்….!!!!

அருப்புக்கோட்டை அருகில் செம்பட்டியைச் சேர்ந்த தம்பி தங்கப்பாண்டி காவல்துறை விசாரணையின் போது இறந்த நிகழ்வு அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கணவர் தங்கபாண்டியை இழந்து இருகுழந்தைகளோடு தவித்து வரும் தங்கை கோகிலாதேவிக்கும், பெற்றோருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன் என கட்சியின் மூத்தத் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். காவல் துறை விசாரணையின் போது இறந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அக்.1 வர தான் டைம்”அதுக்குள்ள நீங்க அனுமதி கொடுக்கல…. நானே திறந்திருவேன்…. திமுக அரசுக்கு சீமான் சவால்…..!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி மாநகரத்தின் மையப் பகுதியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவரின் சிலையை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காதது மாபெரும் கண்டனத்திற்குரியது. நடிப்பின் பல்கலைக்கழகமாக விளங்கிய ஒரு மாபெரும் கலைஞரின் திருவுருவ சிலையை திறக்க அனுமதி கிடைக்காத […]

Categories
மாநில செய்திகள்

“நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் திமுக பச்சைத்துரோகம்”….. சீமான் கண்டனம்….!!!!

நளினி, ரவிச்சந்திரன் விடுதலைக்கு எதிரான திமுக அரசின் நீதிமன்ற நிலைப்பாடு, ஏற்கவே முடியாத பச்சைத்துரோகம் என சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கினுள் சிக்குண்டு இருக்கும் அக்கா நளினி மற்றும் தம்பி ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழக அரசு முன்வைத்த வாதமானது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தருகிறது. தம்பி பேரறிவாளன் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற வழக்கில், ஆளுநர் என்பவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் அருகே சாதி ஆணவப் படுகொலை…!!

நாகர்கோவில் அருகே வேறு சாதி பெண்ணை காதலித்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாக கூறி சடலத்தை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரும் காட்டுப் புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மக்களின் உயிரோடு விளையாடுவதா…? – சீமான் கேள்வி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு சீமான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். முன்கள பணியாளர்கள் செய்த பணியால் நோய் பரவல் […]

Categories

Tech |