தமிழகத்தில் 9 மாவட்டங்களில், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு வரும் 22ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனையடுத்து 23ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. அதன் பிறகு 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். […]
