ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் விசைப்படகுகளில் சீன எஞ்சின் பொருத்தப்பட்டு இருப்பதால் நடவடிக்கை எடுக்குமாறு நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் மீன்பிடித் தொழில் தான் பிரதான தொழிலாக இருந்து வருகின்றது. இங்கே நாட்டுப்படகு, விசைப்படகு, பைபர் படகு உள்ளிட்டவை பாம்பன் பகுதியில் இயங்கி வருகின்றது. இந்நிலையில் விசைப்படகில் அதிக குதிரை திறன் கொண்ட சீன இன்ஜின்களை பொருத்த நடவடிக்கை எடுத்து வருவதால் அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு நாட்டுப்படகு […]
