Categories
உலக செய்திகள்

மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்….!! மக்களை வலியுறுத்தும் சீன அரசு…!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு நகரம் முழுவதும் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பரிசோதனை செய்த மக்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. அதோடு நகரம் முழுவதும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு அறிவிப்பு தொடரும் எனவும் மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்….!! வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி…!!

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று காலை திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இபின் நகரின் சிங்வென் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவாகியிருக்கலாம் என சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக சாலையோரங்களில் கட்டிடங்கள் வைத்திருப்பவர்கள் அலறியடித்து ஓடும் காட்சி வெளியாகியுள்ளது. நடுக்கத்தால் மண்சரிவு ஏற்படும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

சீனாவில் பயங்கரம்…. கைதிகளுக்கு நடக்கும் கொடூரம்… உயிருடன் வெட்டி எடுக்கப்படும் இதயம்…!!!

சீன நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகள் உயிரோடு இருக்கும்போது  இதயம் வெட்டப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஒரு பல்கலைக்கழக அமைப்பு நடத்திய ஆய்வில், சீனா முழுக்க சுமார் 56 மருத்துவமனைகளில் கைதிகள் உயிரோடு இருக்கும் போது அவர்களின் இதயம் வெட்டி எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகள், உயிருடன் இருக்கும்போதே அவர்களின் இதயத்தை மருத்துவர்கள் எடுத்து விடுகின்றனர். அதன்பிறகு, இதயம் தானம் செய்யப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றாமல் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. ஷாங்காய்க்கு சென்ற ராணுவ வீரர்கள்…. வெளியான தகவல்……!!!!!

சீனாவில் முதல் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவின் மிகப் பெரிய நகராமான ஷாங்காயில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 2.6 கோடி மக்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் உதவி செய்வதற்காக 2000 ராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் நபர்கள் ஷாங்காய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரேநாளில் 13 ஆயிரம் நபர்களுக்கு […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே…! உலகம் முழுவதும் 49.15 கோடியை தாண்டிய கொரோனா…. வெளியான தகவல்….!!

சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49.15 கோடியை தாண்டியுள்ளது. சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியினை மிகத்தீவிரமாக செலுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,15,64,095 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு இருக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் […]

Categories
உலக செய்திகள்

நான் தேர்தலில் போட்டியிட போவதில்லை…. அதிரடி கொடுத்த ஹாங்காங் தலைவர்….!!

ஹாங்காங் நகரில் வருகின்ற மே 8 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று அதன் தலைவர் கூறியுள்ளார். சீனாவின் ஆளுகையிலிருக்கும் ஹாங்காங் நகரின் தலைவராக கேரி லாம் உள்ளார். இந்த நகரிலுள்ள பொதுமக்களை நாடுகடத்த அனுமதிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனையடுத்து ஒருகட்டத்தில் அனைவரும் லாம் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஹாங்காங் நகரில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற […]

Categories
உலகசெய்திகள்

இதான் ரிவெஞ்சுங்குறது…. சீனாவை மிரட்டும் கொரோனா…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா?…!!

சீனாவில் கடந்த ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த ஒரேநாளில் கொரோனாவால் 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி கொரோனா பாதிப்பு குறித்த அறிகுறிகள் எதுவுமின்றி 7788 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…!!!! ஷாங்காய் நகரில் வசிக்கும் 2.60 கோடி மக்களுக்கு கோவிட் பரிசோதனை…!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் அங்கு வசிக்கும் 2 கோடியே 60 லட்சம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சீனா அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சீனாவில் நேற்றைய நிலவரப்படி சுமார் 9 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சீன அரசாங்கம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ மருத்துவர்கள் மற்றும் ராணுவ படையினரை ஷாங்காய் நகருக்கு அனுப்பி அங்குள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2129 பேருக்கு கொரோனா வைரஸுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலமாகவும் பரவி வருவதாக தெரிவித்த நிலையில் அந்நாட்டு அரசு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சீனாவில் கடந்த 24 மணி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு உதவியா அவங்க வர மாட்டாங்க…. பிரபல நாடு எச்சரிக்கை……!!!!!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா உள்ளதாக பரவலாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் பேசியதாவது ரஷ்யா தனது ஆக்ரோஷமான போக்கை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இதனிடையில் சீனா மற்றும் ரஷ்யா அண்டைநாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்க்கின்றன. ஆகவே இந்தியா மீது சீனா மீண்டும் அத்துமீறி தாக்குதல் மேற்கொண்டால் அப்போது […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து ஏற்படும்….!! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் கருத்து…!!

ரஷ்யாவிற்கு உதவினால் சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து வரும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவை கண்டித்து மேற்கத்திய நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இந்த சர்வதேச தடைகளை நீக்க ரஷ்யாவிற்கு உதவும் பட்சத்தில் சீனாவின் நற்பெயருக்கு ஆபத்து வரும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்… 49,000 துண்டுகளாக உடைந்த விமானம்….132 பேர் உயிரிழப்பு…!!!!!

சீனாவில் நடுவானில் இருந்து பறந்து கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.  இதில் விமானம், 49,117 சிறிய துண்டுகளாக சிதைவடைந்துள்ளது. சீனாவில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம், கடந்த 21ம் தேதி 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி புறப்பட்டது. அப்போது வுஜோ நகரில் உள்ள தெங்சியான் கவுண்டியில் உள்ள மோலாங் கிராமத்திற்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து மலைக்குன்றுகளின் […]

Categories
உலகசெய்திகள்

இந்த பேச்சு வார்த்தை அதிகாரப்பூர்வமானதே…. இந்தியா சீனா எல்லை பிரச்சனை…. சீனாவின் கருத்து…!!!!

சீன எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள  பேச்சுவார்த்தை  மிகவும் ஆக்கப்பூர்வமானது என சீனா கருத்து தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ செய்தி தொடர்பாளர் உ கியான் நேற்று பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன தரப்பிலிருந்து இந்தியா கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது என இந்தோ, பசுபிக் விவகாரங்களுக்கு அமெரிக்க துணை பாதுகாப்பு மந்திரி ஏலி ராட்னர்  கூறியிருக்கிறாரே ? என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு சீன ராணுவ அமைச்சக […]

Categories
உலக செய்திகள்

இது எல்லாம் தவறு…. கதவுகளை மூடி கொண்டு ஆஸ்திரேலிய பெண் செய்தியாளரிடம் விசாரணை…. என்ன காரணம்…,?

சீன கோர்ட்டில் கதவுகளை மூடிக்கொண்டு ஆஸ்திரேலியா செய்தி நிபுணரிடம் ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. சீனாவில் அரசு ஊடகமான ‘சி.ஜி.டி.என்’ செய்தி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் சீன பெண்ணான செங் லீ . இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சீன காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர்  வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அரசின் ரகசியங்களை சட்ட விரோதமாக வினியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அவரது கைது நடவடிக்கையில் நீதியின்அடிப்படை தர நிலைகள் நிறைவேற்ற […]

Categories
உலக செய்திகள்

4-ஆம் அலையில் சிக்கிய சீனா…. மிகப்பெரிய நகரத்தில் முழு ஊரடங்கு அமல்….!!!!

சீன நாட்டின் மிகப்பெரிய நகரான ஷாங்காயில் இருக்கும் அதிகமான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஜிலின் என்ற வட கிழக்கு மாகாணத்திலும் புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, ஷாங்காய் நகரில் அதிகமான பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் என வெளி நபர்களுடன் தொடர்பில் இருக்க […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவிற்கு உதவினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்…. ஜோ பைடன் எச்சரிக்கை…!!!!!

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்கள சந்திப்பில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு உதவினால் சீனா கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர் ரஷ்யாவிற்கு சீனா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர நடுநிலை வகிக்க வேண்டும்… இம்ரான் கான் கருத்து…!!!!

சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர நடுநிலை வகித்து சமாதானம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் முஸ்லிம் நாடுகளின் 57 உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் குழு கலந்துகொள்ளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நாற்பத்தி எட்டாவது அமர்வில் சிறப்பு விருந்தினராக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா […]

Categories
உலக செய்திகள்

விபத்துகுள்ளான சீன விமானம்…. 2 நாட்கள் கடந்தும்…. கேள்விக்குறியான பயணிகள் நிலை….!!!

விபத்து நடந்து சுமார் 2 நாட்கள் கடந்த நிலையில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாநிலத்திலிருந்து போயிங் 737-800 விமானம் 132 பேருடன் குவாங்சு மாநிலத்துக்கு சென்றது. அப்போது எதிர்பாரத விதமானக விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பதால் அதில் பயணம் செய்தவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் தெற்கு சீனாவில் நடைபெற்ற இந்த விபத்தை குறித்து […]

Categories
உலக செய்திகள்

சீனா: கொரோனா வைரஸ் எதிரொலி…. 23,000 இந்திய மாணவர்களின் கல்வி?…. லீக்கான தகவல்…..!!!!!!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவம் படித்து வரும் 23 ஆயிரம் இந்திய மாணவர்களின் கல்வியானது கேள்விக் குறியாகி இருக்கிறது. கொரோனா எனும் கொடிய வைரஸ் முதன் முதலில் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் பயனாக கொரோனா சற்று சீரடைந்து வந்தது. இந்நிலையில் […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா … சீனாவின் பிரபல பூங்கா மூடல்… வெளியான அறிவிப்பு…!!!!

சீனாவில் கொரோனா  தொற்று காரணமாக டிஸ்னி  பொழுதுபோக்கு பூங்கா காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொரோனா  வேகம் எடுக்க தொடங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய நகரமான ஷாங்காய் நகரிலும் தற்போது கொரோனா  வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் அங்கு இதுவரை ஊரடங்கு  அமல்படுத்தப்படவில்லை. அதேசமயம் முடிந்தவரை மக்கள் […]

Categories
உலக செய்திகள்

விபத்துக்குள்ளான சீன விமானம்…. தலைகீழாக விழுந்த விமானம்…. நெஞ்சை பதற வைக்கும் காணொளி….!!

சீனாவில் உள்ள குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 123 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஈஸ்டர்ன் நிறுவனத்தின் விமானம் குவாங்ஸி அருகே அமைந்துள்ள மலை பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 123 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விமானம் கீழே தலைகீழாக சுழன்று வரும் காட்சியும் விமானம் விழுந்த இடத்தில்  காட்டு தீ ஏற்பட்டு  கடுமையான புகை எழுந்ததும் அனைவரையும் பதைபதைக்க வைத்தது. இந்த காட்சிகள் அனைத்தும் உள்ளூர் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பயங்கரம்… மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானம்…. 132 பயணிகள் பலி…!!!

சீன நாட்டில் 132 பேருடன் சென்ற போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் உள்ள ஈஸ்டன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்குரிய போயிங் 737 விமானம் குன்மிங்  நகரத்திலிருந்து குவாங்சு நகரத்திற்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில், விமான ஊழியர்களுடன் சேர்த்து சுமார் 132 பேர் இருந்தார்கள். விமானம், ஷூவாங் மாகாணத்தின் வுசோ  நகருக்கு அருகே இருக்கும் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென்று விமானம் மலையில் மோதி, விபத்துக்குள்ளானது. அதனைத்தொடர்ந்து பயங்கர […]

Categories
உலக செய்திகள்

லட்சக்கணக்கான மக்களை அடைத்து வைக்கும் சீனா…. முழு ஊரடங்கு அமல்…!!!

சீனா, அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. சீன நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் தற்போது வரை இல்லாத வகையில் கொரோனா கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, லட்சக்கணக்கான மக்களை வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என்று கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் ஜிலின் மாகாணத்தில் சுமார் 4.5 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இந்நகரில் இன்று இரவிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாகாணத்தில் சாங்சுன் நகரில் சுமார் 9 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பயங்கரம்…. மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானம்…. கேள்விக்குறியான பயணிகள் நிலை…!!!

சீன நாட்டில் சுமார் 133 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மலையில் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீன ஈஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குரிய போயிங் 737 வகை விமானமானது குன்மிங் நகரத்திலிருந்து வுஜோ நகரத்திற்கு சுமார் 133 பயணிகளுடன் புறப்பட்டு சென்றிருக்கிறது. விமானம் குவாங்சி என்ற மாகாணத்தின் மலைப்பகுதியில் சென்ற சமயத்தில் திடீரென்று மலை மீது மோதியது. இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே, மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்: மீண்டும் முழு ஊரடங்கு அமல்?… பிரபல நாட்டில் அதிரடி உத்தரவு….!!!!!

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் 45 லட்சம் மக்கள்தொகை உள்ள நகரத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் முதன் முறையாக கொரோனா தொற்று வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றால் பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தொற்று பரவல் தற்போது சீரடைந்து வந்தது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன நாட்டின் வட கிழக்கு பகுதியிலுள்ள ஜிலியன்நகரத்தில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஒரு வருடத்திற்கு பிறகு…. பதிவான கொரோனா உயிர்ப்பலி…!!!

சீனாவில் ஒரு வருடத்திற்கு பின் முதல் தடவையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் முதல் முறையாக கடந்த 2019-ஆம் வருடத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலக நாடுகள் முழுக்க பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவில் பல மாதங்களாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் ஒரு வருடம் கழித்து நேற்று கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 4 லட்சம் பேர் பாதிப்பு… தென்கொரியாவில் அசுர வேகமெடுக்கும் கொரோனா…!!!

தென் கொரியாவில் ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் சமீபத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் சீனாவில் 5280 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவை அடுத்து தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக நான்கு லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா…? சுகாதாரத்துறை புதிய விளக்கம்…!!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடுமா என்கிற  கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான்  தொற்று காரணமாக கொரோனா 3 ம் அலையின்  தாக்கம் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு  போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டது. இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா  பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள்  அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும்  பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது சீனாவின் உருமாற்றம் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! மீண்டும் முழு ஊரடங்கு…. வீடுகளில் முடங்கிய “1.7 கோடி மக்கள்”….!!

சீனாவில் கடந்த சில தினங்களாகவே அதிகரித்துவரும் ஓமிக்ரான் தொற்றால் 5280 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவில் கடந்த சில தினங்களாகவே தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வரும் ஓமிக்ரான் தொற்று அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மார்ச் 14 ஆம் தேதி மட்டும் சீனாவில் ஓமிக்ரான் தொற்றால் 5280 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் சீனாவின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஹென்சன் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிக கடுமையான ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

“இதுவரை இல்லாத ஓன்று”… தீவிரமாக பரவும் ஓமைக்ரான்… பிரபல நாட்டில் கடும் நெருக்கடி…!!!!

சீனாவில் வேகமாக பரவும் ஓமைக்ரான்  வைரஸ் காரணமாக 3 கோடி பேர் வீடுகளில் முடங்கிக் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் உகான்  மாகாணத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா  வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் நோய்தொற்று நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பின் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு  தற்போது படிப்படியாக குறைந்து இருக்கிறது. இந்நிலையில் சீனாவில்கொரோனா   பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.மேலும்  அந்நாட்டிலுள்ள 19 […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு….! ரஷ்யாவிற்கு உதவி செய்தால்…. சீனாவுக்கு இதுதான் கதி…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!!

ரஷ்யாவிற்கு உதவி செய்தால் உலக நாடுகளிலிருந்து சீனா தனித்து விடப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை இத்தாலி தலைநகர் ரோமில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அதில் “ஜேக் சல்லிவனிடம் ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்க நினைப்பதை மாற்றிக்கொள்ளுங்கள். ரஷ்யாவை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. ரஷ்யாவிற்கு உதவுமா சீனா….? எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!!

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சீனாவிடமிருந்து அதனை வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சீனாவிடமிருந்து வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரஷ்யா உக்ரைனில் போர் தொடங்கி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் சில வகையான ஆயுதங்கள் இல்லாமல் இருக்கிறது. மேலும் அமெரிக்கா ரஷ்யாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

மறுபடியுமா?…. புதிய வைரஸ் பரவி இருப்பதை மறைக்கும் சீனா?…. உலக நாடுகள் கேள்வி…..!!!!!!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா தொற்றை குறைக்க போராடி வந்தது. இந்தநிலையில் சீனா கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன்பின் சீனாவில் மறுபடியும் கொரோனா வைரஸ் தலைக்காட்டத் தொடங்கியது. தற்போது அங்கு கடந்த சில தினங்களாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி இன்றைய நிலவர அடிப்படையில் இதுவரையும் இல்லாத அளவுக்கு சுமார் 3,400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா…. ஒரே நாளில் இவ்வளோ பாதிப்பா?…. திணறும் மக்கள்…!!!

சீனாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,393 பேருக்கு கொரோனா வைரஸ்  பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கி உள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனாவில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலமாக தான் கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேசிய சுகாதார ஆணையம் […]

Categories
உலக செய்திகள்

பதவிக்காலம் முடிகிறது…. சீன பிரதமர் லி கெகியாங் ஓய்வு பெறுகிறார்…. வெளியான தகவல்…!!!

சீனாவின் பிரதமரான லி கெகியாங் இந்த வருடத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். சீனாவில் கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து லி கெகியாங் பிரதமராக இருக்கிறார். இவரின் இரண்டாவது 5 ஆண்டு பதவிக்காலமானது இந்த வருடத்தில் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரதமர் லி கெகியாங் இந்த வருடத்துடன் தன் பதவிக் காலம் முடிந்து தான் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதிபர் ஜின்பிங்கிற்கு பின் அதிகாரமுடைய தலைவராக அறியப்பட்ட லி கெகியாங், நாடாளுமன்றத்தில் நேற்று சீன நாட்டின் அதிபராக எனக்கு […]

Categories
உலக செய்திகள்

போர் பதற்றத்தில் உள்ள உக்ரைனுக்கு “நிவாரண பொருட்கள்”…. உதவிக்கரம் நீட்டிய சீனா….!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா நடுநிலை நிலைப்பாட்டை கொண்டு இருக்கிறது. அதுமட்டும்மல்லாமல் பேச்சுவார்த்தை வாயிலாக பிரச்சினைக்கு தீர்வுகாண இருதரப்பையும் சீனா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கூறியபோது “உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் உட்பட 50 லட்சம் யுவான் (இந்திய […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மிரட்டும் கொரோனா….! “2 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் இவ்வளோ பாதிப்பா”…. திணறி வரும் சீனா….!!!

சீனாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.  சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி கடந்த ஒரே நாளில் மட்டும் 214 பேரை கொரோனா பாதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இதுதான். இந்த […]

Categories
உலக செய்திகள்

பேச்சுவார்தையால் மட்டுமே தீர்க்க முடியும்…. உக்ரைன் பிரச்சனை குறித்து சீனா கருத்து…!!!

சீன அரசு, உக்ரைன் நாட்டின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்கனுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, உக்ரைன் பிரச்சனை சிக்கலாக இருக்கிறது. போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எந்த நடவடிக்கையையும் சீனா எதிர்க்கிறது. உக்ரைன் நாட்டின் இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும். நிலைமையை சரி செய்வதற்காகவும், […]

Categories
உலக செய்திகள்

பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடங்க விழா…. உக்ரைன் வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு…!!!

பெய்ஜிங் குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொண்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சீனத் தலைநகரான பீஜிங்கில், இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம்  4-ந் தேதி அன்று தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது. அதனையடுத்து, குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. தற்போது ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

“எங்களை நீங்கள் போட்டியாக நினைக்க வேண்டாம்”…. அமெரிக்காவுக்கு பிரபல நாடு வலியுறுத்தல்….!!

அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியை போட்டியாக கருத வேண்டாம் என்று சீன பத்திரிக்கையாளர் ஜான் யேசுய் கூறியுள்ளார்.  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களால் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா சீனாவின் வளர்ச்சியை போட்டியாக கருத வேண்டாம் என்று சீனா கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக சீன நாடாளுமன்றத்தின் பத்திரிக்கையாளர் ஜான் யேசுய் கூறியதாவது. “சீனாவின் வளர்ச்சியை ஒரு சாக்காக பயன்படுத்தியும், போட்டியாளராக நினைத்துக் கொண்டு இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும் சிதைப்பது […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் போர்!”…. படுகாயமடைந்த சீன மாணவர்… சீன அரசு வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக சீன வெளியுறவு துறை அமைச்சரான வாங் வென்பின் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, உக்ரைன் நாட்டில் இருக்கும் சீன தூதரகம் காயமடைந்த அந்த நபருடன் தொடர்பில் இருக்கிறது. அவர் […]

Categories
உலக செய்திகள்

“நாங்களும் கண்டிக்கிறோம்”…. பொருளாதார தடை…. பிரபல நாட்டின் அறிவிப்பு….!!

ரஷ்யா மீது போடப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து உள்ளது. இதனால் கனடா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளனர். மேலும் ரஷ்ய வங்கிகள் சில பெரும்பாலான சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தும் கட்டணம் முறையான ‘ஸ்விப்ட்’  அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா பொருளாதார தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது பொருளாதார தடை நடவடிக்கைகளுக்கு சீனாவும் […]

Categories
உலக செய்திகள்

இது சாத்தியமா … ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள்…. சாதனை படைத்த பிரபல நாடு ….

சீனா நேற்று ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது. சமீப காலமாக விண்வெளித் திட்டதின் மூலம் சீனா பல்வேறு சாதனைகளை படைத்து வந்துள்ளது. அந்தவகையில் நேற்று ஒரே ராக்கெட்டில் 22 செயற்கை கோள்களை விண்ணுக்கு  அனுப்பி உள்நாட்டு சாதனை படைத்துள்ளது. தெற்கு சீனாவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 11.06 மணிக்கு  மார்ச் 8 ம் தேதி ராக்கெட்டில் 2 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து செயற்கைக்கோள்கள் […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் தலை தூக்கும் கொரோனா” …. 239 பேருக்கு தொற்று உறுதி… பிரபல நாட்டில் பரபரப்பு ….!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 239 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி  செய்யப்பட்டுள்ளது. உலகின் முதன் முதலில்  கொரோனா தொற்று  சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுடன்  போராடிக் கொண்டிருந்த நிலையில் சீனா கட்டுக்குள் வந்துவிட்டது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா  தலை காட்டத் துவங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக அங்கு  தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீனாவில் ரிலீஸ் ஆகும் கனா…. மகிழ்ச்சியுடன் பதிவை வெளியிட்ட…. பிரபல நடிகர்….!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கனா திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது என பதிவிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து நடித்த திரைப்படம் கனா. இப்படத்தின் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். இவர் கபாலி திரைப்படத்தின் நெருப்புடா பாடல் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து கனா திரைப்படத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் கனா திரைப்படத்தின் அறிமுக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த புரொடக்ஷன் மூலம் தயாரித்தார். […]

Categories
உலக செய்திகள்

இவங்க ஒத்துழைப்பு தரலைனா…. இதுதான் நடக்கும்…. இந்தியா, சீனாவிற்கு எச்சரிக்கை விடும் ரஷ்யா….!!!

அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுப்பதால் 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா மற்றும் சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளி துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ரஷ்ய விண்வெளி துறையை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்ளுமா…? உற்று நோக்கி வரும் சீனா… காரணம் என்ன…?

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருப்பதை தொடர்ந்து, அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்று சீனா கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பது, வருங்காலத்தில் சீனாவும் தைவான் மீது போர் தொடுப்பதற்கான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தைவான் நாட்டின் மீது சீனா போர் விமானங்களை அனுப்புவது வருத்தமளிக்கும் நிலையை உண்டாக்கியிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்கா தங்கள் படைகளை அனுப்பும் பட்சத்தில் தைவான் நாட்டிற்கும் நாளை இதே நிலை ஏற்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்…. சீனா கருத்து….!!

உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங், பீஜிங் நகரில் உள்ள நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனின் நிலைமையை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமை எல்லை மீறி போய் விடாமல் தடுக்க அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் […]

Categories
உலக செய்திகள்

“ராணுவ தளவாடங்களை பலபடுத்தனும்”…. அமீரக பாதுகாப்பு அமைச்சகம் பிரபல நாட்டுடன் மேற்கொண்டஒப்பந்தம்….!!!

நாட்டின் ராணுவ தளவாடங்களை பலப்படுத்தும் விதமாக நவீன ரக போர் விமானங்களை வாங்குவதற்கு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அமீரகம் சார்பில் ஏற்கனவே அமெரிக்காவுடன் நவீன போர் விமானங்கள் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ராணுவ தளவாடங்களை பலப்படுத்தும் விதமாக நவீன ரக போர் விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அமைப்புடன் […]

Categories
உலக செய்திகள்

போர் கப்பலிலிருந்து லேசர் தாக்குதல்…. குற்றம் சாட்டும் பிரபல நாடு….!!!

கடற்பகுதியை கண்காணிக்கும் விமானத்தை சீனா போர் கப்பலிலிருந்து லேசர் தாக்குதல் நடத்தயுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பகுதியை கண்காணிப்பு விமானம் கண்காணித்துக் கொண்டு இருந்துள்ளது. அப்போது சீனா போர் கப்பலிலிருந்து அந்த விமானத்தை நோக்கி லேசர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில் “இந்த தாக்குதல் ஒரு தீவிரமான பாதுகாப்பு பிரச்சினை என்றும் அபாயகரமானது. மேலும் தொழில் முறையிலான […]

Categories

Tech |