Categories
உலக செய்திகள்

இந்தியாவின் எதிர்ப்பை மீறி… இலங்கைக்கு வரும் சீன கப்பல்…. வெளியான தகவல்…!!!

இலங்கையின் கோரிக்கையை மீறி, சீன நாட்டின் கப்பல் ஹம்பந்தோட்டா என்னும் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா தங்களின் யுவான் வாங்-5 என்னும் போர்க்கப்பலானது, இலங்கை நாட்டின் தென் பகுதியில் இருக்கக்கூடிய ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வரவுள்ளது என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அந்த கப்பல் இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, செயற்கைக்கோள் தகவல்களை திரட்டுவது குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் என்று கூறியது. ஆனால், சீனாவிலிருந்து வரும் அந்த கப்பல், உளவு […]

Categories
உலக செய்திகள்

எங்கள் சுதந்திரத்தை காப்போம்… யாருக்கும் அஞ்சவில்லை… -தைவான் வெளியுறவுத்துறை மந்திரி…!!!

தைவான் மற்றும் சீன நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சீன அரசு, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக் கொண்டிருக்கிறது. எனவே இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சனையில் அமெரிக்கா, தைவான் நாட்டிற்கு ஆதரவாக உள்ளது. இந்நிலையில் தைவான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜோசப் வூ தெரிவித்திருப்பதாவது, எங்கள் நாட்டிற்கு யாரை வரவேற்க வேண்டும் என்பதை சீனா தீர்மானிக்க முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறார். மேலும், தைவான் நாட்டை […]

Categories
உலக செய்திகள்

900 வருடங்கள் பழமைவாய்ந்த மரபாலம் எரிந்து நாசம்…. பிரபல நாட்டில் பதற்றம்….!!!!

சீன நாட்டின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங்வம்சம் ஆட்சி செய்த (960-1127) காலக் கட்டத்தில் மரத்தில் உருவாகிய நீண்ட மரப் பாலம் ஒன்று எழுப்பப்பட்டது. இது 98.3 மீட்டர் நீளம் உடையது. இந்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த மரப் பாலம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி நடந்தது. சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

போர் பயிற்சியில் ஈடுபடும் சீனா…. முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதாக தைவான் அறிவிப்பு…!!!

சீனா தங்கள் நாட்டின் நீர்ச்சந்தையில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது தங்கள் மீது மேற்கொள்ளவுள்ள தாக்குதலுக்கான ஒத்திகையாக இருக்கிறது என்று தைவான் கூறியுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் சபாநாயகர் தைவான் நாட்டிற்கு செல்ல சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி அவர்கள் தைவான் நாட்டிற்கு சென்றனர். இந்நிலையில், இதனை கண்டிக்கும் விதமாக தைவான் தீவை சுற்றி சீனா போர் பயிற்சி அளித்து வருகிறது. இது பற்றி தைவானின் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, […]

Categories
உலகசெய்திகள்

“என்னுடைய பயணத்தை ஒரு சாக்காக பயன்படுத்திய சீனா”…. நான்சி பேச்சு….!!!!!!!!

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு எதிராக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் பல்வேறு தடைகளை விதித்திருப்பதாக  தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சீனாவின் கடுமையான  மிரட்டலுக்கு மத்தியில் கடந்த 2ம் தேதி இரவு தைவான் தலைநகர் கைபேவுக்கு சென்ற நான்சி அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து அமெரிக்காவின் உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளார். இது சீனாவிற்கு அமெரிக்கா மீது கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் தைவானை சுற்றிலும் சீனா முற்றுகையிட்டு தைவான் நாட்டின் வடகிழக்கு மற்றும் […]

Categories
அரசியல்

வலிமை பெறும் வான்படை…. இந்திய விமானப்படையில் இணையும்…. 3 ரஃபேல் போர் விமானங்கள்…..!!!!!!!

சீனாவுடனான எல்லை பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள்  இந்திய விமானப்படையில் இணையயை இருக்கிறது. கிழக்கு லடாக்கில் சீனாவிற்கும் இந்தியாவிற்குமான எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி இந்தியா மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை பெற இருக்கின்றது. பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேசன் உருவாக்கிய 17 ரபேல் போர் விமானங்களை ஜூலை 29 மற்றும் செப்டம்பர் 10ஆம் தேதிகளில் […]

Categories
உலக செய்திகள்

தைவானை சுற்றி வளைத்து போர்ப்பயிற்சி…. படையெடுக்கப் போகின்றதா பிரபல நாடு….?

சீனாவில் கடந்த 1949 இல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பின் தைவான்  தனி நாடாக உருவாகியுள்ளது. ஆனாலும் தைவான்  தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜிம் ஜம்பிங் தலைமையிலான சீன அரசு தெரிவித்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படைபலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகின்றது. மேலும் தைவான்  எல்லைக்குள் அவ்வபோது சீனா  போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அதே […]

Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டை தனிமைப்படுத்துவதா?… ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்… -நான்சி பெலோசி…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி, தைவானை தனிமைப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று சீனாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். சீன நாட்டிலிருந்து தைவான் தனிநாடாக பிரிந்து விட்டது. எனினும், சீன அரசு தங்களுடன் அந்நாட்டை சேர்த்துக் கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  சீனா, வலுக்கட்டாயமாக தைவானை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. நாங்கள் தைவான் நாட்டிற்கு  ராணுவ அடிப்படையில் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தார். இதனால், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த ஆயுதம் வழங்கிய பிரபல நாடு…. வெளியான வீடியோ காட்சி….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இந்த போரினால் உக்ரைனின் சில கிராமங்கள் நாசமாகி கிடந்தது. இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த போரை கடுமையாக எதிர்க்கும் அந்த நாடுகள் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதன்படி போலந்து சுய இயக்க […]

Categories
உலக செய்திகள்

எதிர்ப்பை மீறிய தைவான்…. அடுக்கடுக்கான தடைவிதித்த சீனா…. வெளியான தகவல்….!!!!

2ஆம் உலகப்போருக்கு பின் சீனாவிடமிருந்து பிரிந்துசென்ற தைவான், தன்னை ஒரு சுதந்திர நாடாக கூறிவருகிறது. எனினும் சீனாவானது, தைவான் தங்களது நாட்டின் ஒருபகுதி எனகூறி சொந்தம் கொண்டாடுகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சிபெலோசி தைவானுக்கு போக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இதனால் கடுமையாக எதிர்த்த சீனாவானது, நான்சிபெலோசி தைவான் சென்றால் அமெரிக்கநாடு அதற்குரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்தது. இருந்தாலும் சீனாவின் எதிர்ப்பு மற்றும் மிரட்டலை மீறி நான்சிபெலோசி தைவான் சென்றார். இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

“சீனா ரஷியாவுக்கு உதவ கூடாது”…… ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. போரை கடுமையாக எதிர்க்கும் அந்த நாடுகள் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் சீனா போர் தொடங்கிய நாள் முதல் ரஷ்யாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா…. பிரபல நாட்டில் 498 பேருக்கு தொற்று உறுதி….!!!!!!!!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான்  நகரில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா தொற்று  நோய் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா  தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு  கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 393 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

எங்கள் உதவி இல்லாமல் போரில் ஜெயிக்க முடியாது….. சீனாவுக்கு ஆதரவு கொடுக்கும் ரஷ்யா….!!!

சீனாவுக்கு ரஷ்யா ஆதரவு கொடுக்கும் என ரஷ்ய நாட்டைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார். இதனால் சீனா அமெரிக்காவின் மீது கடும் கோபத்தில் இருக்கும் நிலையில் தற்போது தைவான் மீது போர் தொடங்குவதற்கும் சீனா தயாராக உள்ளது. இந்நிலையில் சீனா தைவானுக்கு எதிராக போர் தொடுக்கும் என்றால் ரஷ்யா சீனாவுக்கு ஆதரவு கொடுத்து போரில் உதவி செய்யும் என ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

சீனா மழலையர் பள்ளியில் திடீர் கத்திக்குத்து தாக்குதல்…. 3 பேர் பரிதாப பலி…. சோகம்….!!!!

சீனாவிலுள்ள தனியார் மழலையர்பள்ளி ஒன்றில் இன்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 6 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தென் கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணம் அன்ஃபு கவுண்டியிலுள்ள தனியார் மழலையர் பள்ளியில் இத்தாக்குதல் அரேங்கேறியுள்ளது. இன்று காலை சுமார் 10 மணியளவில் முகமூடி மற்றும் தொப்பி அணிந்த நபர் ஒருவர் திடீரென பள்ளிக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. சந்தேகத்துக்குரிய அந்நபர் லியு (48) எனவும் தலைமறைவாக […]

Categories
உலக செய்திகள்

“நான்சி பொலேசி தைவானுக்கு போக உரிமை இருக்கு”…. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து வருபவர் நான்சி பொலேசி. இவர் அரசுமுறை பயணமாக மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் மலேசியா வந்தடைந்த நான்சிக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நான்சி சிங்கப்பூர் அதிபர், பிரதமரை சந்தித்தார். இந்த நிலையில் ஆசிய பயணத்தின் ஒருபகுதியாக நான்சி பொலேசி இன்று இரவு தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தைவான் போகும் நான்சி அந்நாட்டு அதிபர் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் உளவு கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி…. இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கும் சீனா….!!!!!!

அம்பத்தோட்ட துறைமுகத்தில் சீனாவில் உளவு கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கருமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து கோத்தபய ராஜபக்சே, மகேந்திர ராஜபக்சே அதிபர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கோத்தபய நாட்டை விட்டே ஓடிவிட்டார். இந்த நிலையில் இலங்கைக்கு ஏற்கனவே கடன் மேல் கடன் கொடுத்து இங்குள்ள அம்ப  தோட்டத்து துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்திருக்கின்ற சீனா இங்கிருந்து இந்தியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சீனாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா…. 541 பேருக்கு தொற்று உறுதி….. வெளியான தகவல்….!!!!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று அந்த எண்ணிக்கை சற்று […]

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லைப்பகுதியை ஆக்கிரமிக்க…. சீனா மேற்கொள்ளும் திட்டம்…!!!

சீன அரசு இந்தியாவின் எல்லை பகுதியில் ஆதிக்கத்தை அதிகரிக்க திபெத்தியர்களை கட்டாய குடியேற்றம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, இமயமலை பகுதியில் சுமார் 624 வீடுகளை கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், வரும் 2030 ஆம் வருடத்திற்குள் திபெத்தின் தன்னாட்சி பகுதியில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட திபெத்திய மக்களை வெளியேற்ற தீர்மானத்திருக்கிறது. சுற்றுச்சூழலை காப்பதற்காக கடல் மட்டத்திலிருந்து சுமார் 4800 மீட்டர் உயரத்தில் வாழும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதாக சீனா தெரிவித்தது. எனினும் அதற்கான அறிவியல் […]

Categories
உலக செய்திகள்

தொலைபேசியில் கலந்துரையாடிய… ஜோபைடன் – ஜி ஜின்பிங் நேரில் சந்திக்க முடிவு…!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு இடையே சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன்  நேற்று தொலைபேசியில் இரண்டு மணிநேரங்கள் பேசியதாக தகவல் வெளியானது. இதில் இருவரும் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது, உக்ரைன் போர் போன்ற […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சீனாவில் கொரோனா…. 564 பேருக்கு தொற்று உறுதி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று 626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 455 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஆண்ட் நிறுவனத்தின்….. பங்குகளை விற்க முடிவு?….வெளியான பரபரப்பு தகவல்….!!!

சீனாவை சேர்ந்த முன்னணி ஆன்லைன் நிறுவனம் அலிபாபா இதனுடைய தலைவர் ஜாக் மா ஆவார். சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாக தனதாக்கிக் கொண்டதன் மூலம் அலிபாபா ௪௨௦ பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது. இதன் மூலம் ஜாக் மாவும் சீனாவின் பெரிய பணக்காரனாக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவை உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு தொழில்களிலும் விரிவுப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமா ஜாக் மாவுக்கும் சீன அரசுக்கும் இடையே வார்த்தை […]

Categories
உலக செய்திகள்

4 பேருக்கு கொரோனா பாதிப்பு…. மில்லியன் மக்களை அடைத்து வைத்த சீன அரசு… கடுமையான ஊரடங்கு…!!!

சீன நாட்டின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு தொடங்கி இருப்பதால் கடும் கட்டுப்பாடுகளை விதித்த அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை குடியிருப்பிற்குள் சிறை வைத்திருக்கிறது. சீன நாட்டின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாது. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் முழுமையாக குணம் பெறும் வரை அந்நகரில் இருந்து வெளியேற முடியாது. பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் – ஜி ஜின்பிங் ஆலோசனை…. 2 மணி நேரங்கள் தொலைபேசியில் உரையாடல்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் தொலைபேசியில் இரண்டு மணி நேரங்கள் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் வெள்ளை மாளிகை, ஜனாதிபதி ஜோ பைடனுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு நாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணி நேரங்களாக தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். அப்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு, சர்வதேச அரசியல் தொடர்பில் இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

குடியரசு தலைவருடன் பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது…… அதிபர் ஜன்பிங்க் கருத்து…!!!!!!!!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் இணைந்து பணியாற்ற சீன தயாராக இருக்கிறது என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான மற்றும் நிலையான உறவு இந்தியா – சீனா இடையே அடிப்படை நலன்களுக்கு உதவுகின்றது என அவர் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

பிரபல நாடு….. சொந்த விண்வெளி நிலையத்திற்கு ஆய்வுக்கலம் அனுப்பியது…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான முதல் ஆய்வகக் கழகத்தை அந்நாடு வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தியது. அதனைத் தொடர்ந்து பிரமாண்டமான லாங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் ‘வென்டியன்’ என்ற பெயரிட்டுள்ள அந்த ஆய்வுக் கழக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனையடுத்து தியாங்காங் விண்வெளி நிலையத்தின் மையக் கலகமான தியான்ஹேவுக்கு இடர்க்கால மாற்றாகவும் மற்ற நேரங்களில் சக்தி வாய்ந்த ஆய்வாக்கமாகவும் வென்டியன் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த ஏப்ரலில் தியான்ஹே மையக் […]

Categories
உலக செய்திகள்

5-ஆவது மேடையிலிருந்து விழுந்த குழந்தை… கடவுள் போல் காப்பாற்றிய நபர்… குவியும் பாராட்டுக்கள்…!!!!

சீன நாட்டில் இரண்டு வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாம் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில் ஒரு நபர் பாதுகாப்பாக பிடித்துள்ளார்.  சீன நாட்டின் சேஜியாங் மாகாணத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 5- ஆம் மாடியிலிருந்து குழந்தை ஒன்று தவறி கூரையின் மேல் விழுந்திருக்கிறது. அதிலிருந்து கீழே விழும் போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு நபர் 2 கைகளையும் விரித்து குழந்தை விழாதவாறு பாதுகாப்பாக பிடித்து விட்டார். குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு விட்டது. எனினும் […]

Categories
உலக செய்திகள்

வங்கியில் பணம் எடுப்பதற்கு தடை….. பீரங்கிகளோடு நிற்கும் ராணுவத்தினர்…. பொதுமக்கள் கடும் அதிர்ச்சி….!!!

பிரபல நாட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுப்பதற்காக தெருக்களில் ராணுவத்தினர் பீரங்கிகளோடு நிறுத்தப்பட்டுள்ளனர். சீன நாட்டில் உள்ள ஹேனான் பகுதியில் பேங்க் ஆப் சீனாவின் கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கு தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக்குள் பணத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப் படாததால், ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக மக்கள்‌ போராட்டத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதி தெருக்களில் […]

Categories
உலக செய்திகள்

சீனா: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. 943 பேருக்கு தொற்று பாதிப்பு…. வெளியான தகவல்….!!!!

கொரோனா வைரஸ் சீனாவின் உகான்நகரில் முதல் முறையாக பரவியதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு இருந்து உலகம் முழுதும் பரவி வரலாறுகாணாத தாக்கத்தினை கொரோனா வைரஸ் ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலகநாடுகள் தற்போது படிப்படையாக தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனநாட்டில் சென்ற சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று முன்தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு விரைவில் சீனா அனுமதி….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது நாட்டில் கொரோனா பாதிப்பு பூஜ்ய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதை சீனா நிறுத்தியது. அதுமட்டுமில்லாமல் தனது நாட்டில் படித்து வந்த வெளிநாட்டு மாணவர்களையும் வெளியேற்றினர். இதனால் இந்தியாவை சேர்ந்த 23 ஆயிரம் மாணவர்கள் உள்ளிட்ட 5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களின் கல்வி இரண்டு ஆண்டுகளாக […]

Categories
உலக செய்திகள்

இறந்த கொசுவின் டிஎன்ஏ முடிவு…. மாட்டி கொண்ட திருடன்…. அதிரடி காட்டிய சீன போலீசார்….!!!!

சீனாவில் குற்றம் நடைபெற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த கொசுவின் இரத்தத்தை ஆய்வு மேற்கொண்டு திருடனை காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவமானது நடந்துள்ளது. சீனாவின் புஜியான் மாகாணத்தில் புஜோ எனும் இடம் இருக்கிறது. இங்கு சென்ற சில நாட்களுக்கு முன் பூட்டிகிடந்த வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கைவரிசை காட்டி விலை மதிப்புமிக்க பொருட்களை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் திருட்டு நடந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் கதவானது உள்புறமாக பூட்டப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வெளுத்து வாங்கும் வெயில்…. 90 கோடி பேர் பாதிப்படைய வாய்ப்பு…. மக்களுக்கு எச்சரிக்கை….!!!

வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீனா நாட்டில் கொரோனா பெருந்தொற்றினால் ஏராளமான மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், கடந்த மாதம் 13-ஆம் தேதியிலிருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் மக்கள் மீண்டும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்போது உள்ள வெப்பத்தின் தாக்கம் ஆனது கடந்த வருடங்களை விட அதிக அளவில் இருப்பதாகவும், வருகிற ஆகஸ்ட் 2-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் எனவும் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சீனாவில்…. வேகமெடுக்கும் கொரோனா…. 580 பேர் பாதிப்பு….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உலகின் முதல் கொரோனா தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் உகன் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு  உலகம் முழுதும் பரவி பெரிய அளவு தாக்கத்தை கொரோனா தொற்று ஏற்படுத்தியது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

லடாக் எல்லைக்கு அருகே சுற்றுப்பயணம் சென்ற சீன அதிபர்…. இராணுவ வீரர்களுக்கு பாராட்டு…!!!

சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங் மூன்று நாட்கள் சுற்று பயணமாக லடாக்கின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு சென்றிருக்கிறார். இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது. சீனா, அருணாச்சல பிரததேசம் எங்களுடையது என்று கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், எல்லைப் பகுதிகளில் அடிக்கடி பிரச்சனையை செய்து வருகிறது. இந்திய தரப்பிலிருந்தும் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய நாட்டின் லடாக் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சீன நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“பொருளாதாரத்தில் வீழ்ச்சியை சந்தித்த பிரபல நாடு”…. வெளியான தகவல்…. பின்னணி என்ன….?

சீனாவில் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் பொருளாதாரம் பெருமளவில்  வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பொருளாதாரம் 0.4% வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அந்த நாட்டில் கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்காக ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமுடக்கம் நீண்ட காலம் அமல்படுத்தியிருந்தனர். நீண்டதொரு பொதுமுடக்கத்திற்கு பின் கடந்த மே மாதம் தான் மீண்டும் தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இருக்கிறது. மேலும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகின்ற போது தொழில் நிறுவனங்கள் மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

நெருப்பிலும் உருகாத ஐஸ்கிரீம்…. விலை எவ்வளவு தெரியுமா?…. “WOW” சொல்ல வைக்கும் புதிய தயாரிப்பு…!!!!

சீனாவை சேர்ந்த சைஸ்கிரீம் என்ற ஐஸ்கிரீம் நிறுவனம் நெருப்பிலும் உருகாத வித்தியாசமான ஐஸ்கிரீம் ஒன்றை தயாரித்துள்ளது. இது ஒரு பக்கம் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தாலும் மற்றொரு பக்கம் இதில் அதிக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும்,இதன் விலை அதிகமாக தான் இருக்கும் எனவும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. விலை மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அந்த ஐஸ்கிரீம் விலை 66 சீன யுவான், அதாவது இந்திய ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

ஒரு நபருக்காக 3 லட்சம் மக்களை தனிமைப்படுத்தும் சீனா… மக்கள் அவதி…!!!

சீன நாட்டின் ஒரு நகரில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுமார் 3.2  லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது உலக நாடுகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் அந்நாட்டில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் நகரம் முழுவதும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி அனைத்து மக்களையும் அரசு பரிசோதிக்கிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில், சீன நாட்டின் வுகேங்க் என்னும் நகரத்தில் ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே, சுமார் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மக்கள் போராட்டம்…. எதற்கு தெரியுமா?…. வன்முறையில் ஈடுபட்ட போலீஸ்..!!!

சீனா ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கில் வைப்புத் தொகையை திடீரென முடக்கி விட்டதாக கூறப்படுகிறது. அதாவது அங்குள்ள 4 வங்கிகள் மொத்த 5.8 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை முடக்கி விட்டதாகவும், இதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களின் பணத்தை திருப்பி தர வலியுறுத்தி தலைநகர் ஜெங்சோவில் உள்ள சீன மத்திய வங்கியின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

2023ம் ஆண்டு மக்கள்தொகை….. சீனாவை மிஞ்சி வரும் இந்தியா….. ஐ.நா வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

2023 ஆம் ஆண்டுகுள் உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் நாம் சீனாவை மிஞ்சி விடுவோம் என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது . கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கணக்கீட்டின்படி உலக மக்கள் தொகை 500 கோடியாக அதிகரித்தது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐநா இதை கடைப்பிடித்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 33 வயது இளைஞருக்கு…. பெண் உறுப்பா?…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

சீனாவில் சென் லீ(33) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு வயிறு வலி மற்றும் சிறுநீரில் ரத்தமும் வந்துள்ளது. இவர் வயதுக்கு வந்தபோது சீரற்ற சிறுநீர் வெளியேற்றம் இருந்துள்ளது. இதற்காக அதனை சரி செய்யும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு 20 ஆண்டுகளாக அவருக்கு சில அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனால் அப்பன்டிஸ் எனப்படும் குடல்வால் அறுவை சிகிச்சையும் அவர் செய்து கொண்டார். இந்நிலையில் சென்னுக்கு பெண்களுக்கான பாலியல் குரோமோசோம்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

ஷாங்காய்: சுட்டெரிக்கும் வெயில்….. வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை…..!!!!

சீனாவின் ஷாங்காய்நகரில் சில நாட்களாகவே வெப்பநிலையானது அதிகமாக இருகிறது. இந்நிலையில் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் மாகாணத்தின் சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. ஷாங்காய்நகர் ஜூலை 5 முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு மிகஅதிக வெப்பநிலையைக் காண்கிறது. மேலும் இங்கு கடும் வெப்பநிலை அதிகரித்து வருவதால் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. கடுமையான வெப்பத்தை சமாளிக்கவும், வெப்பதாக்குதலை தவிர்க்கவும் நண்பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்கும்படி குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. புதியதாக 420 பேருக்கு பாதிப்பு…. லீக்கான தகவல்…..!!!!

உலகில் முதன் முறையாக கொரோனா வைரஸ் சீன நாட்டின் உகான் நகரில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது. அங்கு இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தடுப்பூசி உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலகநாடுகள் இப்போது படிப்படையாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனநாட்டில் சென்ற சில மாதங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் ஆகிய […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவமே….! ஆணுக்கு மாதவிடாய்…… 20 ஆண்டுகளாக இப்படியா….. வினோத சம்பவம்….!!!!

சீனாவை சேர்ந்த 33 வயதான ஒரு நபருக்கு 20 ஆண்டுகளாக மாதவிடாய் பிரச்சனை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவதாக கூறி மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அவருக்கு மருத்துவர்கள் பலகட்ட சோதனை செய்து பின்னர் குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன் முடிவில் உயிரியல் ரீதியாக அவர் பெண்ணாக இருக்கிறார் என்று அதிர்ச்சி தகவல் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது. […]

Categories
உலக செய்திகள்

“உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்” பிரதமர் மோடிக்கு சீனா கண்டனம்…!!!

சீன நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் திபெத் இருக்கிறது. இந்தப் பகுதியில் ஆன்மீக தலைவரான தலாய்லாமா என்பவர் வசித்து வருகிறார். இவரை சீனா பிரிவினைவாதி என்று குற்றம் சுமத்தியுள்ளதோடு, அவரை ஆதரிப்பவர்களையும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆன்மீக தலைவர் தலாய்லாமா தன்னுடைய 87-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு  வாழ்த்து கூறினார். இதன் காரணமாக பிரதமர் மோடியை சீனா விமர்சித்துள்ளது. இது தொடர்பாக சீன நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை வைரஸ் பாதிப்பு…. கொரோனா பரிசோதனைகள் தீவிரம்… வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் பரிசோதனையானது தீவிர படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று  இன்று வரை உலக அளவில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவல் காரணமாக சீனாவில் உள்ள மெக்காவ், ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் அமுலில் இருக்கிறது. இந்நிலையில் பீஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் புதிய பாதிப்புகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் வேலை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க பயனர்களின் தரவுகள் வெளியாகிறதா?… மறுக்கும் டிக் டாக் நிறுவனம்…!!!

அமெரிக்க மக்களின் தரவுகளை வெளியிடுவதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டப்பட்டதை டிக் டாக் நிறுவனம் மறுத்திருக்கிறது. சீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்களிடையே டிக் டாக் செயலி அதிக பிரபலமடைந்திருக்கிறது. எனினும் பயனர்களின் தரவுகள் வெளியிடப்படுவதாக அந்த செயலி மீது குற்றச்சாட்டு இருந்தது. எனவே, இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் டிக் டாக் செயலி சில கட்டுப்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் டிக் டாக் செயலி மீது […]

Categories
உலக செய்திகள்

இரண்டு வருடங்களுக்கு பின்…. சர்வதேச விமான போக்குவரத்தை அனுமதிக்கும் சீனா…!!!

சீன அரசு மீண்டும் சர்வதேச விமான சேவையை அனுமதித்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கான விமான சேவை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சீன நாட்டில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. எனவே, அந்நாட்டில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் இங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் சர்வதேச நாடுகளுக்கான விசா தடையானது, கடந்த மாதத்தில் நீக்கப்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளின் மாணவர்களும் […]

Categories
உலக செய்திகள்

நிலவு எங்களுக்கு தான்…. நாசாவின் குற்றச்சாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு…!!!

நிலவை கைப்பற்றுவார்கள் என்று தங்கள் மீது குற்றம் சாட்டியிருந்த நாசாவின் கருத்தை சீனா மறுத்திருக்கிறது. நிலவை ஆய்வு செய்வதில் சீன அரசு அதிகமாக கவனம் செலுத்தி கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பக்கூடிய திறன் வாய்ந்த ராக்கெட்களை சீனா ஏவும் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்னிலையில், இது பற்றி நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் தெரிவித்ததாவது, சீனா, சந்திரனில் இறங்குவது குறித்து நாம் வருத்தப்பட வேண்டும். இது தற்போது எங்களுக்கானது. நீங்கள் வெளியே இருக்க வேண்டும். சீனா, […]

Categories
உலக செய்திகள்

தென் சீன கடலில் ஏற்பட்ட கடும் புயல்…. இரண்டாக பிளந்த கப்பல்… 27 பயணிகள் மாயம்…!!!

சீன நாட்டின் ஹாங்காங் பகுதியில் பயணித்த கப்பல் ஒன்று இரண்டாக பிளந்து போனதில் 27 பேர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் ஹாங்காங் மாகாணத்தில் ஒரு கப்பல் 30 நபர்களுடன் சென்றுள்ளது. கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த கப்பல் திடீரென்று கடும் புயலில் சிக்கியது. இதனால், கப்பல் இரண்டாகப் பிளந்ததில் பயணிகள் 30 பேரும் கடலுக்குள் விழுந்து விட்டனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து, அந்த பகுதிக்கு சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

எதிர்ப்புக்கு மத்தியில் மியான்மர் வந்தார்…. சீனா வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி….!!

மியான்மர் நாட்டில் உள்ள இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின் முதல் முறையாக சீன நாட்டின் வெளியுறவு துறை மந்திரியான வாங் யி வருகை தந்துள்ளார். இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக  எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். சீன நாட்டின் தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம், மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஏர்பஸ் நிறுவனத்தின் விமானங்கள்…. சீனாவின் முடிவால் அமெரிக்கா ஏமாற்றம்…!!!

நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு ஏர்பஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து சீன நாட்டைச் சேர்ந்த பிரபலமான 3 நிறுவனங்கள் விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி 292 விமானங்களை 37 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. இந்த விமானங்களை சீனாவைச் சேர்ந்த Shenzhen Airlines And China eastern, Air China, China Southern ஆகிய நிறுவனங்கள் வாங்க இருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க நாட்டில் உள்ள போயிங் நிறுவனம் மிகப்பெரிய ஏமாற்றத்தை […]

Categories

Tech |