Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் பாதிப்புகள்… இதுவரை உறுதியான தொற்று… பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்..!!

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் புதிதாக 55 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 64 பேருக்கு நேற்று முன்தினம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி இந்த அதிகபட்சமாக 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அதன்பிறகு பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளதாக பரபரப்பு […]

Categories
உலக செய்திகள்

சீன அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய ஜனநாயக ஆர்வலர்.. 9 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

ஹாங்காங்கில், சீனாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஜனநாயக ஆர்வலருக்கு 9 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனா, ஹாங்காங்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், கடந்த வருடம் அங்கு சர்ச்சையான தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது. இச்சட்டம் ஹாங்காங்கினுடைய ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், இச்சட்டம், கடந்த வருடம் ஜூலை மாதத்தில் டாங் யிங் கிட் என்ற 24 வயதுடைய ஜனநாயக ஆர்வலர் மீது பாய்ந்திருக்கிறது. இவர் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பரவும் டெல்டா வைரஸ்… வெளியான தகவல்…!!

உலகிலேயே முதல்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் தீவிரமாக பரவத்தொடங்கியது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பல உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. தற்போது பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததன் காரணமாக மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றன. ஏனெனில் தற்போது மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதாவது டெல்டா ப்ளஸ் வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

விடாது பெய்த மழை…. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள்…. 14 பில்லியன் டாலர் சேதம்….!!

சீனாவில் பெய்த கனமழையால் 14 பில்லியன் டாலர் பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஹெனன் மாகாணத்தில் உள்ள அணைகள் மற்றும் பாலம் உடைந்ததால் 60 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஜென்ங்கோவில் பெய்த கனமழையால் 99 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜென்ங்கோவில் வாழ்ந்து வரும் மக்கள் இரயில் […]

Categories
உலக செய்திகள்

விலாங்கு மீனை ஆசனவாய்க்குள் திணித்த நபர்.. அதிர்ந்துபோன மருத்துவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!

சீனாவில் நபர் ஒருவர், மலச்சிக்கல் ஏற்பட்டதால், அதனை சரிசெய்ய 20 செ.மீ நீளம் கொண்ட விலாங்கு மீனை ஆசனவாயினுள் நுழைத்திருக்கிறார். சீன நாட்டின் Jiangsu என்ற மாகாணத்தில் இருக்கும் Xinghua என்ற பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு  மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளானார். எனவே, குடல் சீராக இயங்க, சுமார் 20 செமீ நீளம் கொண்ட விலாங்கு மீனை தன் ஆசனவாயினுள் திணித்துவிட்டார். அப்போது, எதிர்பாராமல் அந்த மீன் அவரின் அடிவயிற்றினுள் புகுந்துவிட்டது. எனவே கடுமையான […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப கவலையா இருக்கு…. சீனாவின் அதிரடி திட்டம்…. அச்சத்தில் உலக நாடுகள்…!!

ஆணு ஆயுத வலிமையை மேம்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கையானது உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகிலுள்ள சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் சீனாவும் இருந்து வருகிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இரு நாடுகளும் வணிகத்தில் அதிகளவு வரிகளை விதித்து உலகையே நடுங்க வைத்துள்ளன. இதனை தொடர்ந்து  சீனாவில் உகான் நகரில் கொரோனா வைரஸ் உருவாகியதாக அமெரிக்கா சந்தேகித்து வருகிறது. இதனை பற்றி அறிந்து கொள்ளவும் அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories
உலக செய்திகள்

பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சூறாவளி… பிரபல நாட்டில் பயங்கரம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீனாவில் இன்ஃபா சூறாவளி தாக்கத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் இன்ஃபா சூறாவளியால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டாவது முறையாக கடந்த திங்கட்கிழமை அன்று ஸீஜியாங் மாநிலத்தை இன்ஃபா அதிதீவிரமாக தாக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூறாவளியால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்ததோடு மின் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவையும் வேரோடு சாய்ந்துள்ளது. இதற்கிடையே பலத்த மழையும் பெய்துள்ளதால் ஜியாங்சு, ஸீஜியாங் ஆகிய மாநிலங்களில் […]

Categories
உலக செய்திகள்

அது எல்லாமே பொய்..! இந்திய மாலுமிகளுக்கு தடையில்லை… பிரபல நாடு வெளியிட்ட தகவல்..!!

சீனா இந்திய மாலுமிகளுக்கு சீன துறைமுகங்களில் தடை விதித்துள்ளதா என்பது குறித்த பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. அகில இந்திய மாலுமிகள் மற்றும் பொதுப் பணியாளர் சங்கம் சீன அரசு இந்திய மாலுமிகள் சீனாவுக்கு வரும் வர்த்தகக் கப்பல்களில் இருக்கக்கூடாது என அதிகாரபூர்வமற்ற தடையை விதித்துள்ளதாக தகவல் வெளியிட்டது. மேலும் சீனா தங்கள் துறைமுகங்களில் இந்திய மாலுமிகளுடன் வரும் கப்பல்களை நிறுத்துவதற்கு தடை விதித்தது. இதன் காரணமாக இந்தியர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் முக்கிய நகர் முழுக்க சூழ்ந்துகொண்ட புழுதிப்புயல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

சீனாவின் ஒரு நகரத்தில் முழுவதுமாக புழுதிப்புயல் சூழ்ந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் கன்சுவில் என்ற மாகாணத்தில் இருக்கும் கோபி பாலைவனத்தின் எல்லை பகுதியில் இருக்கும் டன்ஹீவாங் என்ற நகரத்தில் முழுவதுமாக புழுதிப்புயல் சூழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Sandstorm today, #Dunhuang #沙尘暴 #敦煌 pic.twitter.com/XDpyhlW0PV — Neil Schmid 史瀚文 (@DNeilSchmid) July 25, 2021 டன்ஹீவாங் நகரத்தில் இன்று திடீரென்று புழுதிப்புயல் உருவானது. இது சுமார் […]

Categories
உலக செய்திகள்

“அதற்கு நீங்கள் தான் காரணம்!”.. அமெரிக்காவை குற்றம் சாட்டும் சீனா.. இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல்..!!

அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் துணை வெளியுறவு துறை மந்திரியான, வெண்டி ஷெர்மன் 2 நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்பான, பேச்சுவார்தைக்காக சீனா பயணிக்கிறார். அதாவது அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்கு பின் நாட்டின் முக்கிய பிரதிநிதி சீன நாட்டிற்கு பேச்சுவார்த்தைக்காக சென்றிருப்பது இதுதான் முதல் தடவையாகும். அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உறவுக்கு பொறுப்பு சீன நாட்டின் துணை வெளியுறவு மந்திரி ஸீ […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அதிகரிக்கும் பாதிப்புகள்… தீவிரபடுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு 76-ஆக அதிகரித்துள்ளதாகவும் கிழக்கு நகரமான நாஞ்சிங்கில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட உடன் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டாக்ஸி சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு நாளைக்கு 5 என பதிவாகி வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 40 […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் உயிர் சேதம்…. வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்…. நீர்வளத் துறை அதிகாரிகளின் தகவல்…!!

சீனாவில் பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப் பாதிப்பினால் 75000 கோடி ரூபாய் பொருள்கள் சேதமடைந்துள்ளன. இந்த பேரிடரில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுதை அடுத்து அதில் 12 பேர் சுரங்கரயில் பயணிகள் ஆவர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இந்த கனமழையினால் 12.4 லட்சம் பேர் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து தாக்கும் பேரிடர்கள்… பிரபல நாட்டில் விமான சேவை ரத்து… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீனாவில் ஏற்பட்ட கனமழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள ஷெங்ஜோ என்ற நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த நகரமே நீரில் மூழ்கியதோடு, 50-க்கும் மேற்பட்டோர் இந்த பேரிடரில் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்த பாதிப்பானது சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்நாட்டின் ஷெஜியாங் மாகாணத்தில் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து வீசும் புயல்கள்…. சிக்கி தவிக்கும் மக்கள்…. பொது இடங்களுக்கு செல்லத் தடை…!!

சீனாவை டைபூன் இன் ஃபா புயலானது இன்று மாலை ஜெஜியாங் பகுதியில் தாக்கப்போவதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. சீனாவின் மத்திய பகுதியில் பெய்த கன மழையினால் ஹெனான் மாகாணம் பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் டைபூன் இன் ஃபா புயலானது கடலில் மையம் கொண்டுள்ளதால் ஜெஜியாங் பகுதியைத் இன்று மாலை தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் வேகம் மணிக்கு 155 முதல் 191 கிலோமீட்டரில் வீசக்கூடும். இதனால் கடலில் பெரும்  பேரலைகள் மற்றும் கன […]

Categories
உலக செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு பின்…. வெள்ளத்தினால் சூழ்ந்துள்ள நகரம்…. பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு…!!

சீனாவில் பெய்துள்ள வரலாறு காணாத மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோடிகணக்கில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையானது 100o ஆண்டுகளுக்கு பின் வரலாறு காணாத அளவிற்கு பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த வெள்ளத்தில் சுமார் 75000 கோடி அளவுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கனமழையினால் சுரங்கப்பாதைகள், […]

Categories
உலக செய்திகள்

இடிபாடுகளில் சிக்கி தவித்த தருணம்… தாய் செய்த தன்னிகரற்ற செயல்… பிரபல நாட்டில் சோகம்..!!

சீனாவில் தாய் ஒருவர் தனது குழந்தையை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று பெய்த கனமழையால் சீனாவில் தலைநகர் ஜெங்ஜோ கடுமையாக பாதிக்கப்பட்டதோடு 33 பேர் திடீர் வெள்ளம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே வெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற சீனா….!!!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு வழியாக 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். 2021- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்று சீனா அசத்தியுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.  துப்பாக்கிச்சுடுதல் […]

Categories
உலக செய்திகள்

24 மணி நேரத்திற்கு பிறகு… உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை… நெகிழ வைக்கும் வீடியோ காட்சி..!!

சீனாவில் பச்சிளம் குழந்தை ஒன்று 24 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை 33 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் Henan மகாணத்திலிருந்து வேறு இடத்திற்கு பாதுகாப்பு கருதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Henan மகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலையில் Xingyang என்ற நகரில் பச்சிளம் குழந்தை ஒன்று கட்டிட […]

Categories
உலக செய்திகள்

போர்க்கப்பல் வழங்கும் திட்டம்…. எச்சரிக்கை விடுத்த சீனா…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்…!!

ஆசிய கடலுக்கு 2 போர்க்கப்பல்களை அனுப்பிய பிரித்தானியாவின் செயலுக்கு சீனா வன்மையாக எச்சரித்துள்ளது. பிரித்தானியா நாட்டின் பாதுகாப்பு செயலாளர் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதில் இந்த வார தொடக்கத்தில் 2 போர்க்கப்பல்களை நிரந்தரமாக ஆசிய கடலுக்கு அளிக்கும் திட்டமாகும். இந்தத் திட்டமானது ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் அமெரிக்காவுடனான செயல்பாடுகளை ஆதரிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த செயலுக்காக பிரித்தானியாவை சீனா கடுமையாக எச்சரித்துள்ளது. அதில் “சீனாவைச் சுற்றியுள்ள கடலின் சர்வதேச சட்டத்தின் படி கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து சுதந்திரத்தை […]

Categories
உலக செய்திகள்

அதிபராக, முதல் தடவையாக திபெத் சென்ற ஜி ஜின்பிங்.. என்ன காரணம்..?

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், அதிபராக பொறுப்பேற்ற பின்பு முதல் தடவையாக திபெத்திற்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2011 ஆம் வருடத்தில் நாட்டின் துணை அதிபராக இருந்த சமயத்தில் திபெத்திற்கு சென்றிருக்கிறார். அதன்பின்பு சீன நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற பின்பு தற்போது தான் முதல் தடவையாக அங்கு சென்றிருக்கிறார். நாட்டில் திபெத் நகர் சர்ச்சை மிகுந்த பகுதியாக தான் பல வருடங்களாக உள்ளது. திபெத் அரசு தங்களை தனி ஆட்சி […]

Categories
உலக செய்திகள்

தோன்றிய நாட்டிலேயே தலை தூக்கியது கொரோனா.. 48 பேர் பாதிப்பு.. வெளியான தகவல்..!!

சீனாவில் சமீப தினங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கொரோனா தொற்று பரவியதால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. எனவே உலக நாடுகளில் தற்போது கொரோனா குறைய தொடங்கியுள்ளது. சில நாடுகள் கட்டுப்பாடுகளை நீக்கி, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார்கள். எனினும் கொரோனா முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில் தான். ஆனால் குறுகிய காலத்தில் அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியிருக்கிறது. நேற்று 48 நபர்களுக்கு பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை காப்பி அடிக்கும் சீனா…. எடுத்திருக்கும் புதிய முடிவு என்ன….? உளவுத்துறை அளித்த தகவல்..!!

இந்தியாவை போன்று சீனா தனது எல்லைப்பகுதியை பாதுகாப்பதற்கு திபெத்திய இளைஞர்களை பணியமர்த்த இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இந்தியா மற்றும் சீனாவிற்கு  இடையே 1962ல் போரானது நடைபெற்றது. இந்தப் போருக்குப் பின் மத்திய கேபினட் செயலாக்கமானது சிறப்பு முன்னணி படை என்ற ஒரு அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பில் இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய திபெத்தியர்கள், தலாய்லாமாவின் தலைமையிலுள்ள மாணவர்கள் இடம்பெற்றுவுள்ளனர். இவர்களுக்கு அமெரிக்க கண்காணிப்புத்துறையும், இந்திய ராணுவமும் பயிற்சி அளித்துள்ளனர். இந்த படையில் உள்ளவர்கள் மலைப்பிரதேச […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை… 33 பேர் உயிரிழப்பு… பிரபல நாட்டில் சோகம்..!!

சீனாவில் பெய்த கனமழையால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஐரோப்பியாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பெரும அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கனமழை பெய்துள்ளது. இதனால் பல நகரங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதற்கிடையே வெள்ளம், கனமழை ஆகியவற்றின் காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

சீனாவை புரட்டி போட்ட கனமழை …. வெள்ளத்தில் மிதக்கும் ஹெனான் …. மீட்பு பணிகள் தீவிரம் ….!!!

மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மத்திய சீன நாட்டில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. குறிப்பாக  ஹெனான் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அங்கு ஆண்டிற்கு சராசரியாக 60 சென்டிமீட்டர் மழை மட்டுமே பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தொடர்ந்து ஒரு மணி நேரம் 20 சென்டிமீட்டர் மழை […]

Categories
உலக செய்திகள்

இந்தியா தடை செய்த செயலிகள்.. சீன கல்வி நிறுவனங்களின் வலியுறுத்தல்.. இந்திய மாணவர்களின் கல்வி பாதிப்பு..!!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலிகளை சீனாவின் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துவதால் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சீனாவில் இருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயில்கிறார்கள். இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனாவினால் மாணவர்கள் நாடு திரும்பி விட்டனர். தற்போது இணைய வழி மூலமாக கல்வியை தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில், லடாக் எல்லையில் நடந்த மோதலுக்கு பின்பு 250 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதில் […]

Categories
உலக செய்திகள்

“சர்வதேச கடல் எல்லையில் போர்க்கப்பல்கள் நிறுத்தப்படும்!”.. – பிரிட்டன் அறிவிப்பு..!!

பிரிட்டன் அரசு ஆசிய-பசிபிக் சர்வதேச கடல் எல்லையில் போர்க்கப்பல்கள் இரண்டை நிரந்தர நிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறது. பிரிட்டனின் குயின் எலிசபெத் என்ற பெரிதான போர்க்கப்பல் வரும் செப்டம்பர் மாதத்தில் ஜப்பான் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளது. இதனையடுத்து இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. மேலும் இந்த வருட கடைசியில் கூடுதலாக இரண்டு போர்க்கப்பல் ஜப்பான் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டும் ஆசியா-பசிபிக் சர்வதேச கடல் எல்லையில் எப்போதும் நிரந்தரமாக நிற்கும் என்று டோக்கியோவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் நாடு சின்னாபின்னமாகும்.. சீன அரசு பகிரங்க எச்சரிக்கை..!!

சீனாவிற்கு எதிரான செயல்பாட்டில் தலையிட்டால் ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீசப்படும் என்று சீன அதிகாரிகள் காணொளி வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை எதிர்த்து ஜப்பான் அரசு ஒரு ராணுவ துருப்பை தைவான் நாட்டிற்கு அனுப்பினால் கூட ஜப்பான் ஒட்டுமொத்தமாக தகர்க்கப்படும் என்று காணொளி மூலமாக எச்சரித்துள்ளனர். சீன ராணுவம் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் ஒரு குழுவினர் இந்த காணொளியை உருவாக்கியுள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஜப்பான் நாட்டை எச்சரிக்கும் இந்த காணொளி வெளியிடப்பட்டது. இதற்கு மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

உலகின் அதிவிரைவான ரயில்…. சீனாவில் அறிமுகம்…. அசரவைக்கவும் சிறப்பம்சங்கள்….!!!!!

உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் தலைநகர் பீஜிங் முதல் ஷாங்காய் வரையில் இயக்கப்படுகிறது. புக்ஸிங் என்ற இந்த ரயிலானது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதன் மூலம் பீஜிங் முதல் ஷாங்காய் வரையிலான 1,250 கிலோமீட்டர் தூரத்தை 4 மணி 28 நிமிடங்களில் கடக்க முடியும். பயண நேரம் பெருமளவு குறைந்துள்ளது. பீஜிங் – ஷாங்காய் ரயில் சேவையை தினசரி சுமார் 5,05,000 பேர் பயன்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

BigAlert: சீனாவில் இருந்து பரவும் புதிய வைரஸ்….. உச்சக்கட்ட அதிர்ச்சி….!!!!

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த நாட்டின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், ரஷ்யா என்று உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடந்த 2020 முதல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடுமையான பொருளாதார சீரழிவுகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் புதியதாக குரங்கு பி என்ற வைரஸ் பரவல் ஏற்பட்டு வருகிறது.  குரங்குகளை தாக்கும் […]

Categories
உலக செய்திகள்

மகனை தேடி 5 லட்சம் கிமீ பயணம்…. நெஞ்சை உருக்கும் சம்பவம்….!!!!

கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன், வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது இரு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டான். போலீசார் அந்த கடத்தல்காரர்களை கைது செய்தனர். ஆனால், குவோ கேங்டாங்கின் மகனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் மகனை தானே தேடி கண்டுபிடிக்க முடிவு செய்த குவோ கேங்டாங், தன்னிடம் இருந்த பணத்தில் ஒரு பைக் வாங்கி, ஒவ்வொரு மாகாணமாக சென்று தேடினார். கையில் இருந்த மொத்த பணமும் […]

Categories
உலக செய்திகள்

“உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்!”.. இந்த இடங்களுக்கு செல்ல முடியாது.. சீன அரசு அறிவிப்பு..!!

சீன அரசாங்கம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத தங்கள் மக்கள், பொதுவெளிக்கு செல்லக்கூடாது என்று தடை விதிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. சீன அரசாங்கம், 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதை தடை விதிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் ஜூலை 23-ஆம் தேதிக்கு முன்பாக சுக்சியாங் நகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களும், முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமாவது போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திகொள்ளவில்லை, […]

Categories
உலக செய்திகள்

இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு..! தயாராக உள்ள பிரபல நாடு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் தற்போது சீனா இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் தீர்ப்புக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை மந்திரி கடந்த ஆண்டு சீனா-இந்தியா எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பின் உள்ள உண்மைகள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சீனா மீது இந்த பிரச்சனையில் குற்றம் சுமத்த முடியாது என்றும் கூறியுள்ளார். அதேசமயம் இந்த எல்லைப் பிரச்சனையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு சீனா தயாராக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த கட்டிடம்…. 17 பேர் பலியான சோகம்… தகவல் வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்…!!

தங்கும் விடுதி தீடிரென இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் சுஹாவ் நகரில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த தங்கும் விடுதி நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த விடுதியில் உணவு அருந்த வந்தவர்கள் மற்றும் தங்கியிருந்தவர்கள் என 23 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
உலக செய்திகள்

40 ஆப்பிரிக்க நாடுகள்…. தடுப்பூசிகளை தானம் செய்யும் சீனா…. உள்நோக்கத்தை உடைத்த ஜெர்மனி….!!

சீனா கொரோனா தடுப்பூசிகளை தானம் செய்வது அரசியல் சம்மந்தப்பட்ட விஷயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் என்று ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை சுமார் 40 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா வழங்கி வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதனை சீனா எந்தவித உள்நோக்கத்தோடும் செய்யவில்லை என்றும் அறிவித்திருந்தது. ஆனால் சீனாவின் Xinjiang ல் நடைபெற்றுவரும் மனித உரிமை குறித்த விஷயங்களில் உக்ரைன் நாடு தலையிடுவதை நிறுத்தாவிட்டால் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாட்டிற்கு தரமாட்டோம் என்று உக்ரைன் நாட்டை மிரட்டியதாக சீனாவின் மீது […]

Categories
உலக செய்திகள்

தந்தையின் பாசப் போராட்டம்…. 24 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!

காணாமல் போன மகனை 24 வருடங்களாய் தேடி அலைந்த தந்தைக்கு கிடைத்த வெற்றிக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சீனாவிலுள்ள ஷாண்டோங் மாகாணத்தில் 1997ஆம் ஆண்டு வீட்டின் முன் ஜின்ஷேன் என்ற  2 வயது சிறுவன் ஒருவன் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது ஜின்ஷேனை கடத்தல் கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. இதனை அடுத்து அந்த சிறுவனின் தந்தை குவோ கேங்டாங் பல இடங்களில் அவனை தேடியுள்ளார்.  ஜின்ஷேன் கிடைக்கவில்லை என்பதால் அவனின் தந்தை குவோ கேங்டாக் சோர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“ஆத்திரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை நிறுத்துங்கள்!”.. சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை..!!

அமெரிக்க அரசு, தென்சீன கடலில் ஆத்திரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை சீனா நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன அரசு, தென் சீனக்கடலின் பல தீவுகளுக்கு உரிமை கொண்டாடுகிறது. எனினும் வியட்நாம்,  தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள், அவை தங்களுடையது என்று கூறுகிறது. இதனால் இந்த நாடுகள் மற்றும் சீனாவிற்கு இடையில் பல வருடங்களாக சண்டை ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த பிரச்சனையில், சீனாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது. தென்சீனக்கடலில் கடல்சார் உரிமைகள் குறித்து கடந்த […]

Categories
உலக செய்திகள்

“என்னையா ஏமாத்துற” காதலனை பழிவாங்க …. காதலி எடுத்த விநோத முடிவு …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் ….!!!

முன்னாள் காதலனை பழிவாங்க இளம்பெண் செய்த செயலால் போலீசில் மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சீன நாட்டில் ஜெஜியாங் நகரை சேர்ந்த இளம்பெண் Lou என்பவர் Zhu என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில் திடீரென்று காதலன் Zhu இருவரும் பிரிந்து விடலாம் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட காதலி Lou அதிர்ச்சியடைந்தார். ஆனால் காதலன்  Zhu வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவது இளம்பெண்  Lou-க்கு  தெரிய வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் மிக பிரபல ஹீரோ…. அதிரடி அறிவிப்பு….!!!!

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம் உள்ளதாக திரைப்படங்களில் தனது சாகசத் திறமையினால் உலகம் நெடுகிலும் அதிக அளவில் ரசிகர்களை வென்றுள்ள நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். 67 வயதாகும் ஜாக்கி சான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்து வருகிறார். ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த, அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைபடுத்தியது. இதை எதித்து, ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக, நடிகர் ஜாக்கி சான் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் தலைக்காட்டும் கொரோனா.. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்..!!

சீனாவில் சமீப நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவியது. ஆனால் சீனா, சில மாதங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவத்தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் 57 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் […]

Categories
உலக செய்திகள்

சீன நாட்டு தேசியக்கொடியுடன் நாணயம் வெளியிட்ட இலங்கை.. வெளியான காரணம்..!!

இலங்கை அரசானது, சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்காக அந்நாட்டின் தேசிய கொடியுடன் ஒரு நாணயத்தை வெளியிட்டிருக்கிறது. இலங்கை மற்றும் சீன நாடுகளுக்கு இடையே தூதரக உறவு உருவாகி 65 வருடங்கள் நிறைவானது. இதனை நினைவு கூறும் வகையிலும், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி 100ஆவது வருடத்தை நிறைவு செய்ததற்காகவும், இலங்கையின் மத்திய வங்கி, 1000 ரூபாய் நாணயத்தை  வெளியிட்டிருக்கிறது. இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் சீனா மற்றும் இலங்கை நாடுகளின் தேசியக் கொடிகள் […]

Categories
உலக செய்திகள்

10 வருட போராட்டம்… “நான் என்னோட வீட்ட தரமாட்டேன்”… சாலை அமைக்க இடம் கொடுக்காத பெண்… பின்னர் நடந்த அதிசயம்…!!!

சீனாவில் நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஒரு பெண் இடம் தராத காரணத்தினால் அந்த பெண்ணின் வீட்டை சுற்றி சாலை அமைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நாம் வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு சென்றோம் என்றால் சாலைக்கு இரண்டு புறங்களிலும் பெரிய வளாகங்கள், வீடுகள், கடைகள் என பலவிதமான கட்டிடங்கள் இருக்கும். ஆனால் சீனாவில் உள்ள குவாங்சோ என்ற பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்காக அந்நாட்டு அரசானது தனியார் நிறுவனம் ஒன்றிடம் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனமும் அங்கு சாலை அமைப்பதற்காக, […]

Categories
உலக செய்திகள்

10 வருடங்களாக அடம்பிடித்து சாதித்த பெண்.. பிரபலமான வீடு..!!

சீனாவில் ஒரு பெண், 10 வருடங்களாக தன் வீட்டை விட்டுக்கொடுக்காமல் அரசின் திட்டத்தையே மாற்ற செய்துவிட்டார். சீனாவில் ஒரு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் பெண் உரிமையாளரான Liang என்பவர் தன் வீட்டை காலி செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். அந்த இடத்திற்கு மாற்றாக இழப்பீட்டு தொகை அளிப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறியது. அதற்கும் அவர் உடன்படவில்லை. சுமார் பத்து வருடங்களாக அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் வீட்டை […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதன் முறை.. செயற்கை கருவூட்டல் முறையில் குரங்குகள் வளர்ப்பு..!!

உலகிலேயே முதன்முறையாக ஃபிராங்கோயிஸ் இன குரங்குகள் செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கப்பட்டு, தற்போது அவை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஃபிராங்கோயிஸின் லங்கூர்ஸ் எனப்படும் குரங்கு இனங்கள் அரிதான வன விலங்குகள் பட்டியலில் இருக்கிறது. இந்த வகை குரங்குகள் சோங்கிங், கியுஸூ மற்றும் வியட்நாமின் வடக்குமலை பகுதி போன்ற பகுதிகளில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் உலக அளவில் முதன்முதலாக செயற்கை கருவூட்டல் முறையில் இந்த வகை குரங்கை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இந்த குரங்குகள் தற்போது நல்ல […]

Categories
உலக செய்திகள்

இதை முழுமையாக முடிச்சிட்டோம் …. சீன விண்வெளி வீரர்களின் வெற்றி பயணம் ….!!!

சீன விண்வெளி வீரர்கள் தங்களது முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியுள்ளனர் . சீனா தனது புதிய விண்வெளி நிலையமான Tiangong  எனும் விண்வெளி தளத்தை அமைக்க கடந்த ஜூன்16ம் தேதி 3 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியது. இதில் புதியதாக கட்டப்பட்டு வரும் Tiangong என்ற விண்வெளி நிலையம் அதனுடைய சுற்றுவட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதிகாலை விண்வெளி நிலையத்தில் இருந்த 2 வீரர்கள் தங்களுடைய முதல் விண்வெளி பணியை  தொடங்கினர். […]

Categories
உலக செய்திகள்

எந்த நாட்டவரும் எங்களை அடிமைப்படுத்த முடியாது…. அடக்க நினைப்பவர்களை இவ்வாறு எதிர்கொள்வோம்- சீனஅதிபர் ஜி ஜின்பிங்….!!

சீன அதிபர் ஜின்பிங் தனது கட்சியின் நூற்றாண்டு விழாவில் சீன நாட்டின் சிறப்பு குறித்தும் எதிர்கால நம்பிக்கை குறித்தும் உரையாற்றினார். சீனாவின் தியானன்மென் கேட் சதுக்கத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கட்சியின் தலைவரும், அந்நாட்டு அதிபருமான ஜி ஜின்பிங் தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங் சீனாவை எந்த நாட்டவரும் அடிமைப்படுத்த முடியாது என்றும் அவ்வாறு அடிமைப்படுத்த நினைப்பவர்களை 140 கோடி மக்கள் […]

Categories
உலக செய்திகள்

சீனாவிடம் மோதினால் மண்டை உடைபடும் – ஜிங்பிங் எச்சரிக்கை…!!!

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைநகர் பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் அதிபர் ஜின்பிங் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “சீனாவின் இறையாண்மை பாதுகாக்கப்படும். அதே நேரத்தில் சுமூகமான அமைதியையும் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவை அவமதிக்கவோ, நிர்பந்திக்கவோ முயன்றால் உருக்கால் ஆன மாபெரும் சுவற்றுடன் மோதி மண்டையை உடைத்துக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று சீன அதிபர் ஜின்பிங் எச்சரித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து பேசிய அவர், சீன ராணுவத்தின் வலிமையை பெருக்கவும், […]

Categories
உலக செய்திகள்

நாங்க நோயை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம்….. 70 வருஷம் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி …. உலக சுகாதார நிறுவனம் பாராட்டு ….!!!

 70 வருடங்களாக போராடி மலேரியா காய்ச்சல் நோயை முற்றிலுமாக ஒழித்துள்ள சீனாவை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் பாராட்டியுள்ளார் . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனா வெளியிட்ட அறிவிப்பு ஒன்று உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் கடந்த  1940 ஆம் ஆண்டிலிருந்து சீனாவில் பாதிப்பை ஏற்படுத்திய மலேரியா காய்ச்சலால் ஆண்டுக்கு சுமார் 3 கோடி பேருக்கு மேல் பாதிப்புக்கு ஆளாகினர். […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவின் நிலை.. வெளியான தகவல்..!!

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் சீனாவில் உள்ள வூஹான் என்ற நகரத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதன் பின்பு படிப்படியாக உலக நாடுகள் முழுவதிலும் பரவியது. கொரோனா பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இருக்கிறது. எனவே உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பல நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் 18 நபர்களுக்கு கொரோனா தொற்று.. பிற நாட்டை சேர்ந்தவர்கள்.. அரசு வெளியிட்ட தகவல்..!!

சீனாவில் பிற நாட்டைச் சேர்ந்த 18 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. அதன்பின்பு சீனா, கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் அங்கு கொரோனா தொற்று பரவ தொடங்கியிருப்பதாக தகவல் வெளியானது. நேற்று ஒரே நாளில் நாட்டில் 18 நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் பிற நாட்டை சேர்ந்தவர்கள் என்று சீன அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இது […]

Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் பாதுகாப்பானது.. வெளியான தகவல்..!!

சீனாவில் சுமார் 550 நபர்களுக்கு கொரோனாவாக் தடுப்பூசி அளித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் “தி லான்செட்” என்னும் தொற்றுநோய் ஆராய்ச்சி இதழ், கொரோனாவாக் தடுப்பூசி தொடர்பில் ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் சினோவாக் தயாரித்த கொரோனாவாக் தடுப்பூசி பாதுகாப்புடையது என்று தெரிவித்துள்ளது. இத்தடுப்பூசி 3 லிருந்து 17 வயது வரை உள்ளவர்களுக்கு மற்றும் இளம் வயதினருக்கும் வலிமையான ஆண்டிபாடி சக்தியை ஏற்படுத்தியிருக்கிறது . இதனை 550 நபர்களுக்கு செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு 2 டோஸ்களும் […]

Categories

Tech |