Categories
உலக செய்திகள்

‘யாருக்கும் தீங்கு விளைவிக்காது’…. ஆக்கஸ் கூட்டணிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்…. கருத்து வெளியிட்ட பாதுகாப்பு நிபுணர்….!!

முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மைக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து ‘ஆக்கஸ்’ என்னும் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டாண்மையானது இந்தோ- பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்ககம் மற்றும் அவர்களின் அதிகமான ராணுவ ஊடுருவலை தவிர்த்து அதனை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று மூன்று நாடுகளும் தெரிவித்துள்ளன. மேலும் இந்த பாதுகாப்பு கூட்டாண்மை சீனா உட்பட எந்தவொரு உலக நாடுகளுக்கும் பாதிப்பை விளைவிக்காது என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

“விண்வெளியில் ஆய்வு மைய கட்டமைப்பு பணிகள் நிறைவு!”.. 90 தினங்கள் கழித்து பூமி வந்தடைந்த சீன விண்வெளி வீரர்கள்..!!

சீனாவைச் சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள், விண்வெளியில் ஆய்வு மைய கட்டமைப்பு பணிகளை முடித்துவிட்டு 90 தினங்கள் கழித்து பாதுகாப்பாக பூமி வந்தடைந்துள்ளார். சீன அரசு தங்களுக்கென்று சொந்தமாக விண்வெளியில் ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது. வரும் 2020ஆம் வருடத்திற்குள் இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கான கட்டமைப்பு பணிகளை முடித்து, பயன்படுத்தும் வகையில் உருவாக்க சீனா முடிவெடுத்துள்ளது. இந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு, “தியான்ஹே” என்று பெயரிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், சுற்றுவட்ட பாதையில், இந்த விண்வெளி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை.. சீனா வெளியிட்ட தகவல்..!!

சீனாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், அதன் பின்பு படிப்படியாக உலக நாடுகளில் பரவ தொடங்கியது. எனினும் சீனா கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட்டது. அதன்பின்பு, தடுப்பூசி செலுத்தும் பணி, உலக நாடுகளில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இதனால், பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று குறைந்து மக்கள், இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம் தெரியுமா..? 3 குழந்தை பெற்றால் ஊக்கத்தொகை… பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு..!!

சீனாவில் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை மற்றும் பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது. சீனா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கி வருகிறது. அதேசமயம் சீனாவில் 50 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகை குறைய தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா தற்போதைய சீனாவின் மக்கள் தொகையை முந்திவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சீன அரசு தன் நாட்டு மக்களிடம் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் சீன […]

Categories
உலக செய்திகள்

அதிகாலையில் உணரப்பட்ட நிலநடுக்கம்…. சேதமடைந்த வீடுகள்… பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு….!!

அதிகாலையில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. சீனாவில்  சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கமானது பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தினால் லுக்சியான் கவுன்டி பகுதியில் உள்ள புஜி டவுன்சிப்பில் என்னும் கிராமத்தில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

வெறும் 10 மாதம்…. முழுமையான தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 70% மக்கள்…. தகவல் வெளியிட்ட சீனா….!!

சீனாவிலுள்ள மொத்த மக்கள் தொகையில் வெறும் 10 மாதத்தில் சுமார் 70 சதவீதம் பேர் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் மருத்துவ கவுன்சில் செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்ட சீன நாட்டின் மருத்துவ கவுன்சில் செய்தித்தொடர்பாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. தகவல் வெளியிட்ட புவியியல் ஆய்வு மையம்…. இரண்டு பேர் பலி…!!

சீனாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சீன நாட்டில் லூசோ என்ற பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து  […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தோன்றிய கொரோனா…. உலகளவில் ஏற்படுத்திய பாதிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகளவில் சுமார் 22,723,109 நபர்களை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் பல கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் கொரோனா குறித்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணியினை தீவிரமாக நடத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா உலகளவில் 22,723,109 நபர்களை பாதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி உலகளவில் உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

3000 ஆண்டுகள் பழமை…. கண்டுபிடிக்கப்பட்ட முகமூடி…. கலாச்சார பாரம்பரிய நிர்வாகத்தினர் அறிவிப்பு….!!

மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க முகமூடி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள குவாங்கன் பகுதியில் இருக்கும் சான்சிங்டி இடிபாடுகளிலிருந்து தங்க முகமூடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முகமூடியானது மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். மேலும் இது 37.2 சென்டி மீட்டர் அகலமும் 16.5 சென்டிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இதனை தென்மேற்கு பகுதியில் கண்டுபிடித்ததாக சீனாவின் கலாச்சார பாரம்பரிய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இதன் எடையானது 100 கிராம் ஆகும். குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

இந்த அமைப்பிற்கு எதிர்காலம் கிடையாது…. முக்கிய நாடுகள் பங்கேற்கவுள்ள கூட்டம்…. எதிர்ப்பு தெரிவித்த சீனா…!!

இந்தியா உட்பட 4 முக்கிய நாடுகள் கலந்து கொண்டு வருகின்ற 24 ஆம் தேதி அமெரிக்காவில் வைத்து நடைபெறவுள்ள குவாட் என்ற அமைப்பின் கூட்டத்திற்கு சீன அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட 4 முக்கிய நாடுகள் கலந்துகொண்ட குவாட் என்ற அமைப்பின் கூட்டம் அமெரிக்காவில் வருகின்ற 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்வாறு நடைபெறும் கூட்டத்திற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அதாவது சீன நாட்டின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் 4 முக்கிய […]

Categories
உலக செய்திகள்

இப்படி கூட செய்வார்களா….? குழந்தைகளுக்கு செலுத்தப்படும் ஊசி…. பெற்றோர்கள் பின்பற்றும் புதிய முறை….!!

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் திறமையானவர்களாக வளர வேண்டும் என்பதற்காக புதிய வளர்ப்பு முறையை பின்பற்றுகின்றனர். உலகில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் திறமையாக வளர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஒரு சிலரோ அதனை தங்களது குழந்தைகளிடமே வெளிப்படையாக கூறுவதுண்டு. இந்த நிலையில் சீனாவில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் எல்லா துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அதாவது சிக்கன் வளர்ப்பு என்னும் புதிய முறையை பின்பற்றியுள்ளனர். ஆனால் இந்த […]

Categories
உலக செய்திகள்

தாயினால் ஏற்பட்ட விபரீதம்…. நடக்க முடியாமல் போன மகள்…. மருத்துவர் கூறிய காரணம்….!!

தாயின் பேச்சுக்கு மறுவார்த்தை கூறாமல் உடற்பயிற்சி செய்த மகளுக்கு விபரீதம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஜென்ஜியாங் மாகாணத்தில் இளம் பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். அந்த இளம் பெண் தனது மகள் மற்றவர்களைப் போல உயரமாக வளர வேண்டும் என்பதற்காக நாள்தோறும் அவரை ஸ்கிப்பிங் போடும்படி கூறியுள்ளார். அந்த சிறுமியும் தாயின் பேச்சுக்கு மறுவார்த்தை சொல்லாமல் தினமும் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். இதனையடுத்து சில நாட்கள் கழித்து அந்த சிறுமி தனது முழங்கால் வலிப்பதாகக் […]

Categories
உலக செய்திகள்

பூமியை கண்காணிக்க…. விண்ணில் செலுத்தப்பட்ட ‘காபென்5-02’…. சீனாவின் புதிய முயற்சி….!!

பூமியை கண்காணிப்பதற்காக செயற்கைக்கோள் ஓன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது பூமியில் நடப்பவற்றை கண்காணிப்பதற்காக புதிய செயற்கைக் கோள் ஒன்றை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது. அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என அந்நாடு அறிவித்துள்ளது. மேலும் விண்ணில் செலுத்தப்பட்ட அந்த செயற்கைக் கோளின் பெயர் ‘காபென்5-02′ ஆகும். இதனையடுத்து அந்த செயற்கைக்கோள் பூமியின் உருண்டையான வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளின்  கண்காணிபுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக சீனா […]

Categories
உலக செய்திகள்

மிகவும் வெப்பமான காலநிலை…. கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…. குறைந்த அளவே பெய்த மழைப்பொழிவு….!!

சீனாவில் தற்போது நிலவி வரும் மிகவும் வெப்பமான காலநிலையால் சுமார் 60 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது. சீனாவில் நடப்பாண்டில் சென்ற ஆண்டைவிட 14% குறைவாகவே மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து சீன நாட்டில் மிகவும் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. இவ்வாறு சீனாவில் நிலவி வரும் மிகவும் மோசமான காலநிலையால் சுமார் 60 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது. அதோடு […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு வியாதியா….? தீவிர பரிசோதனை செய்த மருத்துவர்கள்…. வெளிவந்த ஆச்சரியமூட்டும் விஷயம்….!!

சீனாவில் ஒரு பெண் தூக்கமின்மை நோயினால் இருக்கிறார் என்பதை பரிசோதனையின் மூலம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி ஜானிங். இவர் தன்னுடைய ஐந்து வயதிலிருந்து ஒருமுறை கூட தூங்கியதில்லை என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். இதற்கிடையில் அவருக்கு தூக்கமின்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இவரை சோதிக்க முயன்றுள்ளனர். ஆனால் சோதிக்க முயன்ற அனைவரும் இரவில் தூங்கி போயுள்ளனர். குறிப்பாக லி ஜானிங் […]

Categories
உலக செய்திகள்

பதவியேற்ற சில தினங்களில் ஜெர்மன் தூதர் மரணம்.. வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவல்..!!

சீன நாட்டிற்காக, ஜெர்மனியின் தூதராக பதவியேற்ற அதிகாரி சில தினங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டிற்காக, ஐரோப்பிய நாட்டின் தூதராக கடந்த ஆகஸ்ட் மாத கடைசியில் தான் ஜான் ஹெக்கர் என்ற அதிகாரி பதவியேற்றார். இந்நிலையில், பதவியேற்ற சில தினங்களிலேயே அவர் திடீரென்று உயிரிழந்ததாக ஜெர்மன் வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, ஜெர்மனி வெளியுறவுத்துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சீன நாட்டிற்கான, ஜெர்மன் தூதரின் திடீர் உயிரிழப்பு எங்களை வருத்தமடையச் செய்கிறது. […]

Categories
உலக செய்திகள்

தைவான் வான்எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன விமானங்கள்.. வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு..!!

தைவான் அரசு, சீன விமானப்படையை சேர்ந்த விமானங்கள் தங்களின் வான் எல்லைக்குள் புகுந்ததாக குற்றம் சாட்டியிருக்கிறது. சீனா மற்றும் தைவான் நாடுகள் கடந்த 1949ஆம் வருடத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு தனித்தனி நாடுகளாக பிரிந்தது. எனினும் சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. மேலும் தேவை ஏற்படும் பட்சத்தில் படை பலத்துடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று மிரட்டல் விடுத்து வருகிறது. மேலும், தைவானை முழுமையாக கைப்பற்றுவதற்கும் சீனா முயற்சி […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களின் கூட்டாளி யார் தெரியுமா…? இதோ…. வெளியான முக்கிய தகவல்….!!

சீன அரசாங்கம், ஆப்கனை கைப்பற்றிய பயங்கரவாதிகளின் மிகவும் நெருக்கமான கூட்டாளி என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் அமைக்கும் அரசாங்கத்திற்கு சீனா தங்களது ஆதரவை அளித்துள்ளது. இந்நிலையில் சீன அரசாங்கம் தங்களது மிகவும் நெருக்கமான கூட்டாளி என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் தலிபான்கள் கைப்பற்றிய ஆப்கனிலுள்ள சுரங்கங்களை சீனாவின் உதவி கரத்துடன் […]

Categories
உலக செய்திகள்

சீனா தான் எங்களின் முக்கிய கூட்டாளி..! தலிபான்கள் முக்கிய அறிவிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

தலிபான் பயங்கரவாதிகள் சீனாவை தங்களது முக்கிய கூட்டாளியாக கருதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதோடு தற்போது சீனா தங்களின் முக்கிய கூட்டாளி என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். மேலும் பொருளாதார ரீதியாக ஆப்கானிஸ்தானை வலுபடுத்துவதற்கு சீனா தங்களுக்கு உதவும் என்று நம்புவதாக கூறிய தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் சீனா தங்களின் முக்கிய கூட்டாளி என்றும் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் நிதி வழங்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் சீனா தயாராக உள்ளது […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் அடுத்தடுத்த முயற்சிகள்… நிக்கி ஹாலி பரபரப்பு பேட்டி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி சீனா இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்துவதாகவும், ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி செய்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய நட்பு நாடுகளை அணுகி ஜோ பைடன் நிர்வாகம் ஆதரவை உறுதிபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் பிரபல நாடு…. அடுத்ததாக குறி வைக்கப்பட்ட வடக்கு மாகாணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

சீனா உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உலகம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா துடிக்கிறது. இதனையடுத்து சீனா அதற்கான வேலைகளையும் செய்து வருகின்றது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸை சீனாதான் உலகம் முழுவதும் பரப்பியுள்ளது என்று அமெரிக்கா போன்ற பல நாடுகளின் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அது நிரூபிக்கப்படவில்லை. இதனிடையே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை இருக்கிறது. அதாவது இந்தியாவின் அண்டை நாடு இலங்கை […]

Categories
உலக செய்திகள்

“சீனா அனுப்பிய தடுப்பூசிகள் நிராகரிப்பு!”.. ஏழை நாடுகளுக்கு அனுப்ப வடகொரியா பரிந்துரை.. WHO வெளியிட்ட தகவல்..!!

உலக சுகாதார மையம், வடகொரிய அரசு, சீனா அனுப்பிய 30 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டிற்கு அனுப்புமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறது. ஐ.நா. வின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, உலக அளவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்புங்கள் என்று வடகொரியா கூறியதாக தெரிவித்திருக்கிறார். அதற்கு முன்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட கோவேக்ஸ் திட்டத்தில், சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரிய […]

Categories
தேசிய செய்திகள்

கையெறி குண்டுகளுடன்… பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது…!!!!

சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளுடன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த போலீசார் சரூப் சிங் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை செய்ததில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தீவிர செயல்பாட்டில் இருந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட பி-85 வகை இரண்டு கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம், மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில டிஜிபி தெரிவித்தார்.

Categories
உலக செய்திகள்

‘3 மணி நேரம் மட்டுமே அனுமதி’…. ஆன்லைன் விளையாட்டு…. கட்டுப்பாடு விதித்த சீனா அரசு….!!

இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட வேண்டும் என்று சீனா அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. உலக அளவில் அனைத்து குழந்தைகளும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டனர். இதனால் அவர்களின் மனநலமும் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக பல்வேறு செய்திகளின் மூலம் அறிகிறோம். இந்த நிலையில் சீனாவில் 18 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாகமான நேரங்கள் ஆன்லைன் விளையாட்டுக்களில் செலவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் […]

Categories
உலக செய்திகள்

தைவான் ஜலசந்தி வழியே சென்ற அமெரிக்க போர்க்கப்பல்கள்.. கடுமையாக எதிர்க்கும் சீன அரசு..!!

சீன அரசு அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், தைவான் ஜலசந்தியில் செயல்பட்டு வருவதை கடுமையாக எதிர்த்துள்ளது. சீனா மற்றும் தைவான், நாடுகள் கடந்த 1949-ஆம் வருடத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு பிரிந்து விட்டது. எனினும் சீன அரசு, தைவான், தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் படைகளை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்க மாட்டோம் என்றும் மிரட்டல் விடுக்கிறது. மேலும், தைவான் ஜலசந்தி வழியே சர்வதேச படைகள் இயங்குவதற்கு சீனா எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை.. பாட புத்தகங்களில் அதிபரின் அரசியல் வாழ்க்கை அறிமுகம்..!!

சீன நாட்டின் பள்ளி கல்லூரிகளின் பாட புத்தகத்தில் நாட்டின் அதிபரான ஜின்பிங்கின் அரசியல் வாழ்க்கை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங், நாட்டை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனரான மாவோ சேதுங்கிற்கு அடுத்து மிகப்பெரிய சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். மேலும், தொடர்ச்சியாக இரண்டாம் தடவை அதிபர் பதவியில் நீடித்து வருகிறார்.  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருக்கும், இவர் சமீப வருடங்களாக இக்கட்சியை மேலும் வலிமையாக்கவும், வருங்காலத்தில் கட்சியின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் பல […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம் தெரியுமா..? தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்கும் சீனா… வெளியான பரபரப்பு பின்னணி..!!

சீன அரசு ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள உலோக வளங்களை வெட்டி எடுப்பதில் ஆர்வம் காட்டுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசு தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் உலோக வளம் ஆப்கானிஸ்தானில் நிரம்பி இருப்பது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் விலை உயர்ந்த மற்றும் அரிதான உலோகங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்த உலோகங்கள் மின்சார கார்களுக்கான ரீசார்ஜ் பேட்டரிகள், உயர்தொழில்நுட்ப ஏவுகணை வழிகாட்டு சாதனங்கள், ஐபோன், […]

Categories
உலக செய்திகள்

இனி 3 குழந்தைகள்…. அபாயத்தை உணர்ந்த சீனா…. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா….!!

சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வது தொடர்பாக மக்கள் தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தில் செய்யப்பட்ட சட்டத்திருத்த மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 1976 முதல் 2016 வரை அனைவரும் ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் நடைமுறையில் இருந்துள்ளது. இதனால் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வாலிபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதோடு மட்டுமின்றி சீன அரசாங்கம் ஒரு அபாய எச்சரிக்கையும் உணர்ந்துள்ளது. அதாவது இவ்வாறு இளம் வயதினரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே […]

Categories
உலக செய்திகள்

செயலிழந்த வைரஸில்…. தயாரிக்கப்படும் தடுப்பூசிகள்…. ஆய்வு நடத்திய ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள்….!!

செயலிழந்த வைரஸை கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் அதிக நன்மையை தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். உலக அளவில் மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செயலிழக்கப்பட்ட வைரஸை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியானது ஆபத்தை தரும் என்பதை விட அதிக நன்மையையும் தருவதாக ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ‘கொரோனா வேக்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் முகவாதத்தினால் மிகக் குறைந்த அளவிலே […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க தயார்.. 2 நாடுகளின் அதிரடி அறிவிப்பு.. வெளியான தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு, ஆதரவு தெரிவிப்பதோடு நட்பு ரீதியாக உறவை ஏற்படுத்திக் கொள்ள தயார் நிலையில் உள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், நாட்டை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். எனவே நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி, பதவி விலகியதோடு காபூல் நகரிலிருந்து வெளியேறி வேறு நாட்டிற்கே சென்றுவிட்டார். எனவே தலிபான்கள், காபூல் நகரையும் கைப்பற்றி, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி மாளிகை உட்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி […]

Categories
உலக செய்திகள்

இருப்பிடத்தை மறந்த யானைக்கூட்டம்.. ஒரு வருடமாக 500 கி.மீ பயணம்.. பல கோடி ரூபாயை இழந்த வனத்துறை..!!

ஜிஷுவாங்பன்னாவில் ஒரு யானை கூட்டம் கடந்த ஒரு வருடமாக ஏறக்குறைய 500 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி திரிந்து விட்டு தற்போது தான் சொந்த இடத்திற்கு திரும்ப தொடங்கியுள்ளது. சீன நாட்டின், ஜிஷுவாங்பன்னா என்ற மிகப்பெரிய விலங்கு காப்பகத்தில் சுமார் 300 யானைகள் இருக்கிறது. இவை ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவை. இதில் 14 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், காப்புக்காட்டை விட்டு வெளியேறியது. எனவே, பல பத்திரிகைகளில் கடந்த ஒரு வருடமாக தலைப்பு செய்தியாக அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய, […]

Categories
உலக செய்திகள்

உளவு பார்த்த தொழிலதிபர்…. தண்டனை அளித்த சீனா நீதிமன்றம்…. மேல்முறையீடு செய்யும் கனடா தூதரகம்….!!

சீனாவில் உளவு பார்த்த குற்றத்திற்காக தொழிலதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் Michael Spavor ஆவார். இவர் சீனாவில் உளவு வேலை செய்ததாகவும் மாநில ரகசியங்களை மற்ற நாடுகளுக்கு வழங்கியதாகவும் Michael க்கு அந்நாட்டு  நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் 11 ஆண்டுகள் கழித்த பின்னர் நாடு கடத்தப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்கனவே கனடா நாட்டைச் சேர்ந்த Lloyd Schellenberg- என்பவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

Categories
உலக செய்திகள்

உலகை திரும்பிப் பார்க்க வைத்த யானைக்கூட்டம்…. போர் அடித்ததால் மனிதர்கள் இருப்பிடத்திற்கு வந்திருக்கும்…. வெளியான புதிய தகவல்கள்….!!

சீனாவில் Xishuangbanna என்ற வன பகுதியிலிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி 16ஆசிய யானைகள் Pu’er என்ற நகரத்தை நோக்கி தங்களது பயணத்தை துவக்கியது. இதனிடையே Yuxi  என்ற நகரத்தை சென்றடைந்த யானைகள் சுமார் ஆறு மணி நேரம் நகரத்தை சேதப்படுத்தி சுமார் 760,000 பவுண்டுகள் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து யானைகளை கட்டுக்குள் கொண்டுவர அவசர சேவை அதிகாரிகள், காவல்துறையினர், 120 வாகனங்கள் ஆகியவை சென்றது. மேலும் ட்ரோன்கள் மூலமும் யானையை கண்டறிந்து […]

Categories
உலக செய்திகள்

இந்த ஆண்டு குறைந்தது…. சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை…. அறிக்கை வெளியிட்ட இந்திய அமைச்சர்….!!

சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை இந்த ஆண்டில் குறைந்துள்ளதால் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் மக்களவையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா நாட்டின் வர்த்தக பற்றாக்குறையானது சீனாவுடன் இந்த ஆண்டில் குறைந்துள்ளதால் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பாட்டீல் மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் இந்தியாவிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி 1675 கோடி டாலராகவும் , 2019-20 ஆம் […]

Categories
உலக செய்திகள்

வெறும் 35,000 ரூபாயில் மின்சார ஸ்கூட்டர்…. ஹோண்டா நிறுவனம் வெளியீடு….!!!

சீனாவில் ‘U-be’ என்ற மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரூ.35,000மதிப்பிலான இந்த ஸ்கூட்டரில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். சிறுவர்களையும் முதியோர்களையும் மனதில் வைத்து உருவாகியுள்ள இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே செல்லக்கூடியது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும் இந்த வாகனம் இந்தியாவில் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது எப்போது இந்தியாவில் வெளியிடப்படும் என்று மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Categories
உலக செய்திகள்

சீனாவின் வூஹான் நகரில் கட்டுப்பாடுகள் தீவிரம்.. உலக சுகாதார மையத்தின் கோரிக்கை..!!

சீனாவில் டெல்டா வைரஸ் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில், டெல்டா வகை மாறுபாடு அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் உள்ள 15 மாகாணங்களில் 500 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நாஜிங்கில் விமான நிலையத்தின் துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், வூஹான் நகரில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்நகரம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில், இந்திய மாணவர் மர்ம மரணம்.. வெளிநாட்டு மாணவர் கைது.. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்..!!

இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர், சீன பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில் அங்கு, மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் இருக்கும் கயை என்ற மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் அமன் நாக்சென், சீன நாட்டின் தியான்ராஜ் நகரத்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். கொரோனா தொற்று பரவ தொடங்கியவுடன் சீனாவில் தங்கியிருந்த இந்திய மக்கள் சுமார் 23,000 பேர், அவரவர் சொந்த ஊருகளுக்கு சென்றுவிட்டனர். எனினும், ஒரு சில […]

Categories
உலக செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா…. மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்…. உகானில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்….!!

உருமாறிய கொரோனா வைரஸானது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை சீனா அரசு எடுத்து வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரத்தில் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து வைரஸானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் மறுபடியும் உருமாறிய டெல்டா வகை வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை அன்று உகான் மாகாணத்தில் புலம்பெயர்ந்த ஏழு தொழிலாளர்களிடையே வைரஸ் தொற்றானது உறுதி […]

Categories
உலக செய்திகள்

“அனைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை!”.. எந்த நகரில்..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சீன நாட்டின் வூஹான் நகரில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் உள்ள வூஹான் நகர், உலகம் முழுக்க பிரபலம். ஏனெனில் அங்கு தான் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாத இறுதியில்  முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்பு நாடு முழுவதும் பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவியது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

OMG… விரைவில் முழுஊரடங்கு… சீனாவில் வெளியான அதிர்ச்சி செய்தி…!!!

சீனாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த தொற்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. அதிவேகமாக பரவி இந்த தொற்று காரணமாக பல உலக நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்திக்க தொடங்கின. இதேபோல இந்தியாவும் கொரோனா தொற்று காரணமாக பல உயிரிழப்புகளை சந்தித்தது. ஒன்றரை ஆண்டுகளாக தொற்றின் […]

Categories
உலக செய்திகள்

சீனா வுகான் ஆய்வகத்தில் தான் கொரோனா தோன்றியது…. ஆதாரங்களும் இருக்கிறது…. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்கா….!!

சீனா வுகான் நகரின் ஆய்வகத்தில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க குடியரசு கட்சி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் ஏராளமான பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே உலகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19.95 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க குடியரசு கட்சியின் தலைவர் வெளியுறவு குழு பிரதிநிதி கொரோனா […]

Categories
உலக செய்திகள்

அறையில் கிடந்த இளைஞர்…. மரணத்தில் மர்மம்…. மத்திய அரசிடம் வலியுறுத்தல்….!!

சீனாவில் படித்து வந்த  இளைஞரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பீகார் மாநில முதல்வர் கூறியுள்ளார்.  இந்தியாவில் பீகார் மாநிலத்தில்உள்ள  கயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான அமன் நாகேசன். இவர் சீனாவில் டியான்ஜின் பகுதியில் உள்ள  பல்கலைக்கழகம் ஒன்றில் வணிக நிர்வாகம் பற்றிய படிப்பை பயின்று வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக 23,000 மாணவர்கள் இந்தியா திரும்பிய போது சிலர் மட்டும் அங்கேயே தங்கி இருந்துள்ளனர். அதில் அமனும் ஒருவர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல்…. மூடப்படும் பொது இடங்கள்…. தீவிர நடவடிக்கையில் சீனா அரசு….!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து வைரஸ் ஆனது உருமாறி பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உருமாறிய வைரஸான டெல்டா வகை பாதிப்பு சீனாவில் 18 மாகாணங்களில் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களில் 27 நகரங்களில்  355 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெய்ஜிங், ஜியாங்சு, சிச்சுவான் போன்ற  நகரங்கள் அடங்கும். இந்த […]

Categories
உலக செய்திகள்

மிகவும் அழகான இரட்டைக் குட்டிகள்…. கடனாக பெறப்பட்ட ராட்சத பாண்டா…. மிருகக்காட்சி சாலை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்….!!

சீனாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு கடனாக கொடுக்கப்பட்ட பெண் ராட்சத பாண்டா தற்போது ட்வின்ஸ் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது. சீன நாட்டின் தேசிய சின்னமாக கருதப்படும் அதிகாரமற்ற பாண்டா கரடிகளை வணிக அடிப்படையில் அனைத்து நாடுகளுக்கும் கடனாக வழங்கி வருகிறது. அதன்படி பிரான்ஸ் நாட்டிற்கும் Huan Huan என்னும் பெண் கரடியையும், Yuan Z என்னும் ஆண் கரடியையும் 10 வருடங்களுக்கு சீனா கடனாக கொடுத்துள்ளது. இந்நிலையில் Huan Huan என்னும் அந்த பெண் கரடி பிரான்ஸிலுள்ள பியூவல் மிருகக்காட்சிசாலையில் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு!”.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 302-ஆக அதிகரிப்பு..!!

சீன நாட்டில் சமீபத்தில் கனத்த மழை பொழிந்ததில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில்  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 302-ஆக அதிகரித்திருக்கிறது. சீனாவில் இருக்கும் ஹெனான் என்ற மாகாணத்தில் கடும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்ட வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கையும் 302 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மாகாணத்தில் பொழிந்த கனத்த மழை கடந்த ஆயிரம் வருடங்களில் பொழியாத அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளத்தில் மாட்டி உயிரிழந்தவர்களில் 14 நபர்கள் சுரங்க ரயில் […]

Categories
உலக செய்திகள்

டெல்டா மாறுபாடு பரவல்… பிரபல நாட்டில் கடும் கட்டுப்பாடுகள்… வெளியான முக்கிய தகவல்..!!

சீனாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் டெல்டா வைரஸால் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தற்காலிகமாக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து தலைநகர் பெய்ஜிங்கிற்கு செல்லும் ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் விமான சேவைகளும் யாங்சோவின் கிழக்கு நகரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீனா முழுவதும் தொற்று பாதிப்பு பரவலாக அதிகரித்துள்ளது. மேலும் தொற்று பரவும் பகுதிகளை தடமறிதல் செயலிகளை பயன்படுத்தி கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வந்த கொரோனா வைரஸ்…. பரிசோதனை தீவிரம்…. பயணிகள் வருவதற்கு தடை….!!

டெல்டா வகை வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை சீனா அரசு அமல்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரசினால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படைந்துள்ளனர். இதனை அடுத்து தொற்று பரவலானது சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இருந்தாலும் அதன் வீரியம் குறையவில்லை. மேலும் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

300 க்கும் மேலான பாதிப்பு…. இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம்…. அச்சத்திலிருக்கும் சீனா….!!

இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றமான டெல்டா வைரஸ் தற்போது சீனாவிலுள்ள 18 மாவட்டங்களில் பரவி கடந்த 10 நாட்களில் 300 க்கும் அதிகமான நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இவ்வாறு பரவிய கொரோனா வைரஸ் இந்திய நாட்டிலும் அதிகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் முதன்முதலாக இந்தியாவில் கொரோனா வைரஸின் உருமாற்றமான டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனாவின் உருமாற்றமான டெல்டா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் பாதிப்புகள்… பிரபல நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தடை… வெளியான முக்கிய தகவல்..!!

சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அந்நாட்டில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவிற்கு தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சுமார் லட்சக்கணக்கான மக்களுக்கு தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்நாட்டில் புதிய பயண தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு தொற்று […]

Categories
உலக செய்திகள்

2027-க்குள் சீன இராணுவம் உலகிலேயே சிறந்ததாக மாற வேண்டும்.. அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தல்..!!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரும் 2027ஆம் வருடத்திற்குள் சீன நாட்டின் ராணுவம் அமெரிக்க நாட்டிற்கு சமமாக உலகின் சிறந்த ராணுவமாக மாற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சீன நாட்டின் ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவினரிடம் அதிபர் நேற்று கலந்துரையாடியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சீன நாட்டின் ராணுவம் தோன்றி 94வது வருட விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக, இராணுவத்தினர், துணை இராணுவத்தினர், அதிகாரிகள், ஆயுத படையினர், காவல்துறையினருக்கு என் […]

Categories

Tech |