Categories
உலக செய்திகள்

மிகப்பழமையான தொல்பொருட்கள் மறுசீரமைப்பு….. ஆவலுடன் பார்க்கும் சீன மக்கள்….!!

சீன நாட்டின் ஒரு அருங்காட்சியகத்தில் நவீன தொழில்நுட்பங்களால் மிகப்பழமையான சின்னங்கள் மறுசீரமைக்கப்பட்டு மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவில் உள்ள சிசுவான் என்ற மாகாணத்தில் கடந்த 1920 ஆம் வருடத்தில் சுமார் 12 சதுர கிமீ பரப்பளவில் சான்சிங்டுய் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை உலகிலேயே மிக முக்கிய தொல்ப்பொருள் கண்டுபிடிப்பாகும். அதாவது சுமார் 3000 வருடங்களுக்கு முன் அந்நாட்டை ஆட்சி செய்த ஷூ வம்ச அரசர்களால் கட்டப்பட்ட நகரின் இடிபாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பொருட்கள் சான்சிங்டுய் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த […]

Categories
உலக செய்திகள்

ஆள விட்டா போதும்…. தப்பிக்க முயன்ற பாண்டா கரடி…. வைரல்….!!!!

சீனாவில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் ஒரு பாண்டா கரடி பாதுகாப்பு வேலி மீது ஏறி தப்பிக்க முயற்சி செய்துள்ளது. சீனாவில் உள்ள பீஜிங் விலங்குகள் பூங்காவில் விலங்குகள் விளையாடுவதற்கு விளையாட்டு பொருட்கள் கொடுப்பது வழக்கம். அதேபோன்று 6 வயதுடைய பாண்டா கரடி விளையாடுவதற்காக ஒரு பந்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பந்தின் மீது ஏறி அதிலிருந்து பாதுகாப்பு வேலி மீது ஏறி தப்பித்து செல்ல முயற்சித்துள்ளது. பாண்டா கரடி. அதைப்பார்த்த பூங்கா ஊழியர்கள் பாண்டா கரடிக்கு பிடித்த […]

Categories
உலக செய்திகள்

“சீனாக்காரன் செஞ்சு வச்ச வேலை”…. போட்டி போட்டு பரவும் வைரஸ்கள்…. திணறும் அமெரிக்கா….!!!!

தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 86,000 ஆக உள்ளது. சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த வைரஸால் வல்லரசு நாடான அமெரிக்கா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசு பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியினை தொடங்கியுள்ளது. ஆகையினால் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் பயங்கரம்!”…. டிக்டாக் செயலியால் பலியான உயிர்கள்….. அபாயகரமான சவாலை மேற்கொண்ட மாணவன்…..!!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மாணவன், டிக்டாக் சவால் மேற்கொள்வதற்காக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் கடந்த 2016 ஆம் வருடத்தில் டிக் டாக் என்ற செயலி அறிமுகமானது. அதனைத்தொடர்ந்து, டிக் டாக் உலக அளவில் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றது. மேலும், இதற்கு பலரும் அடிமையாகினர். இதில், சேலஞ்ச் என்ற பெயரில் சில சவால்களை செய்து பதிவிடுவது பிரபலமானது. அதாவது ஒரு நபர் ஏதேனும் ஒரு செயலை செய்து பதிவேற்றம் […]

Categories
உலக செய்திகள்

சீனா : வீரர்கள் தடுப்பூசி போடலனா?…. இது கட்டாயம்…. ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு….!!!!

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ளவிருக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கொரோனா தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கவுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சீன மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிகள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதாவது குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் போட்டிகள் நடைபெறவிருக்கும் மைதானத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி போட்டியாளர்கள் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள்… சீன விண்வெளி நிலையம் வெளியிட்ட புகைப்படம்….!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கட்டமைப்பு பணிகளை செய்து வரும் சீன வீரர்கள் அங்கு உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சீன அரசு தங்களுக்கென்று தனியாக விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான தீவிர பணியில் ஈடுபட்டிருக்கிறது. அதற்காக கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று, சென்ஸோ 13 என்ற விண்கலத்தில் ஜாய் சிகாங், யே குவாங்ஃபு என்ற இரண்டு வீரர்கள் மற்றும் வாங் யாப்பிங் என்ற வீராங்கனை ஆகிய மூவரும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அங்கு அனுப்பப்பட்டனர். விண்வெளியில் மிகக் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவுக்கு நல்ல பாடம் புகட்டுவோம்”…. அடுத்தடுத்த ஆப்பு…. புறக்கணிக்கும் பிரபல நாடுகள்….!!

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அடுத்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று கூறியுள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர் புமியோ கிஷிடா தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து விவகாரங்களையும் தீவிர […]

Categories
உலக செய்திகள்

“சும்மாவே ஆடுவானுங்க இப்போ இதுவேறயா”…. சர்ச்சைக்குரிய சட்டத்தை நிறைவேற்றிய சீனா…. தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா….!!

சீனா நிறைவேற்றியுள்ள சர்ச்சைக்குரிய சட்டம் குறித்து இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது. சீனா எல்லையை விரிவாக்கம் செய்யவும் எல்லையில் மேலாதிக்கம் செலுத்தவும் சர்ச்சைக்குரிய சட்டத்தினை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் ஜனவரி 1 புத்தாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே சீனா தனது படைகளை குவித்து லடாக் கிழக்கு எல்லையின் விதிகளை மதிக்காமல் இருந்து வருகிறது. இந்நிலையில் சீனா இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. எனவே இந்தியா, சீனாவின் இந்த சர்ச்சைக்குரிய சட்டம் குறித்து தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

“மற்றொரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று!”…. சீனா வெளியிட்ட தகவல்….!!

சீனாவில் இன்று மீண்டும் ஒரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்நிலையில் அங்கு கடந்த திங்கட்கிழமை அன்று வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒரு நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் ஒரு நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த மாதம் 27-ஆம் தேதி அன்று வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு முதியவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. எனவே, அவரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தினர். […]

Categories
உலக செய்திகள்

‘யாருமே நினைச்சுக்கூட பாக்கல’…. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து…. மீட்பு பணி தீவிரம்….!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் நன்சாங் என்ற நகரம் உள்ளது. இந்நகரில் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று ஜெர்மன் நாட்டு நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென 3. 40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

“அதான் லவ் பிரேக் அப் ஆயிடுச்சே”…. நம்ம என்ன தக்காளி தொக்கா….? முன்னாள் காதலன் செய்த பலே காரியம்….!!

சீனாவில் லவ் பிரேக் அப் ஆன விரக்தியில் இளைஞர் ஒருவர் செய்த செயலானது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. சீனாவில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த இளம்பெண் ஒருவரும் இளைஞரும் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞர் “அதான் பிரேக் அப் ஆயிடுச்சே இனி அவளுக்கு செலவு பண்ண காசை மட்டும் எதுக்கு சும்மா விடணும்” என்று எண்ணியுள்ளார். பின்னர் ஒரு நாள் இரவு நேரத்தில் தனது முன்னாள் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]

Categories
உலக செய்திகள்

‘பாருடா இவங்களும் கொடுத்துருக்காங்க’…. சீனாவின் மனிதாபிமான செயல்…. நெஞ்சம் மகிழ்ந்த ஆப்கானிஸ்தான்….!!

ஆப்கானியர்களுக்கு குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை சீனா வழங்கியுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்கனவே ஆப்கானிற்கு 5,00,000 தடுப்பூசிகள் மற்றும் அவசர மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்காக இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் அரசு நன்றியையும் தெரிவித்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு குளிர் காலத்திற்கு தேவையான பொருள்களை மனிதாபிமான அடிப்படையில் சீனா வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் 70,000 போர்வைகள் மற்றும் 40,000 கோட்டுகளை சீனா அளித்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் அகதிகள் மற்றும் மறுவாழ்வுத்துறை  இணை அமைச்சரான Arcelo Carotti கூறியதாவது “சீனாவிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

‘ஒன்னுகூடிட்டங்க அய்யா ஒன்னுகூடிட்டங்க’…. சீனாவுடன் கைகோர்க்கும் ரஷ்யா….!!

இரு நாட்டு அதிபர்கள் நாளை ஆலோசனையில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது இராணுவ படைகளை குவித்துள்ளது. இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் காணொளி மூலமாக நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டமானது உக்ரைனிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் பதற்றத்தை தந்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்  வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கூறியதில் “பல்வேறு துறைகள் சார்ந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு, உறவு […]

Categories
உலக செய்திகள்

‘முதல் பாதிப்பை கண்டறிந்த சீனா’…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!

உருமாற்றம் அடைந்த புதிய ஒமைக்ரான் தொற்றானது சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து இது பல்வேறு உலக நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதற்கிடையில் இந்த தொற்றானது டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாற்றம் அடைந்து பரவி வந்தது. இதிலிருந்தே இன்னும் உலக நாடுகள் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த நிலையில் அண்மையில் ஒமைக்ரான் என்ற புதிய உருமாற்றம் அடைந்த […]

Categories
உலக செய்திகள்

‘அநியாயமாக கொல்லப்பட்ட லட்சக்கணக்கானோர்’…. நினைவிடத்தில் குழுமிய இராணுவம்….!!

இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் நினைவிடத்தில் இராணுவம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. சீனாவில் கடந்த 1937ல் நடந்த இரண்டாம் உலகப் போரின் போது நன்ஜிங் நகரில்  ஜப்பானியப் படையினர் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 3,00,000 பேரை கொன்று குவித்துள்ளனர். இந்த சோக சம்பவத்தை கடந்த 2014 ஆம் தேதி சீன அரசு தேசிய நினைவு தினமாக அறிவித்தது. மேலும் இதனை வருடந்தோறும் அனுசரித்தும் வருகிறது. இந்த நிலையில் நேற்று போரில் கொல்லப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு இது தேவையா….? “எங்கள சீண்டி பாத்தா சும்மா விடமாட்டோம்”…. சீனாவின் பகிரங்க எச்சரிக்கை….!!

பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதித்த அமெரிக்காவிற்கு செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் உள்ள சின்ஜியாங் மாநிலத்தில் லட்சக்கணக்கான உய்கர் இன இஸ்லாமிய மக்களை கட்டாயமாக பணிபுரிய வைத்து தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதில் “இந்த தடை உத்தரவை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும். மேலும் சீனாவின் உள் விவரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவுடன் கைகோர்க்கும் பாகிஸ்தான்”…. என்ன விஷயம் தெரியுமா….? வெளியான பரபரப்பு தகவல்….!!

பாகிஸ்தான் AIP ரக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணியை சீனாவின் உதவியுடன் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் அரசு வருகின்ற 2028-ஆம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை 3 பில்லியன் டாலர் மதிப்பில் சீனாவின் உதவியுடன் கட்ட திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவின் வூகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், கராச்சியில் தற்போது மூன்று நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணியை தொடங்கியுள்ளது. சுமார் 77.6 […]

Categories
உலக செய்திகள்

சீனா வேண்டாத வேலை பார்க்குது….! “உலக நாடுகள் உஷாரா இருங்க”…. ஆர்ப்பாட்டத்தில் குதித்த மாணவர்கள்….!!

சுவிட்சர்லாந்தில் திபெத்திய மாணவர்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் திபெத்திய மாணவர்கள் சிலர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் சீன அரசு சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது. எனவே […]

Categories
உலக செய்திகள்

மக்களே இனிமேல் ஜாலி தான்…. ‘தொடங்கப்படும் 5ஜி சேவைகள்’…. பிரபல நாட்டின் அதிரடி திட்டம்….!!

இனி வரும் ஆண்டுகளில் அதிக அளவில் தகவல் தொடர்புத்துறையில் முதலீடுகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சீனா நாட்டில்  டிஜிட்டல் தொழில் நுட்பத்துறையைச் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு அடுத்த முப்பது வருடங்களுக்கு முதன்மைத்துவம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் முக்கிய நகரங்களில் 5ஜி தொழில்நுட்ப சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இ-காமர்ஸ் மற்றும் கணினித்துறையில் அதிக முதலீடுகள் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிலும்  மக்களிடையே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கமானது அதிகரித்திருப்பதாக அந்நாட்டு புள்ளியியல் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா பண்ற சதி தெரியாம ஜால்ரா போடுறீங்க”…. இந்த மாநாடு எதுக்கு….? சர்ச்சையை கிளப்பும் சீனா….!!

அமெரிக்கா ஜனநாயகத்தை பேரழிவின் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாக சீனா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் குறித்த இணையவழி மாநாட்டை இரண்டு நாள்கள் நடத்தியுள்ளார். அந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். இருப்பினும் அந்த மாநாட்டில் ஹங்கேரி, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் “ஜனநாயகம்” என்பது மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதற்காக அமெரிக்கா சாதுரியமாக பயன்படுத்தும் “பேரழிவுக்கான ஆயுதம்” […]

Categories
உலக செய்திகள்

“இதுவரை இந்த மாதிரி சிலைகள் கிடைக்கல”…. சீனாவில் பௌத்த மதம் பரவியதற்கான சான்று இதோ….!!

சீனாவில் 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை ஷாங்சி மாகாணத்தில் மே மாதம் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த கல்லறைக்குள் பித்தளையால் செய்யப்பட்ட இரண்டு புத்தர் சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டு சுமார் 10 1/2 மற்றும் 16 சென்டி மீட்டர் உயரத்தில் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு சீனாவில் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலைகளே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

‘அடடே! இங்கயாப்பா ஆன்லைன் வகுப்பு’…. ஆர்வமுடன் கவனித்த மாணவர்கள்….!!

விண்ணில் உள்ள ஆராய்ச்சி மையத்திலிருந்து மாணவர்களுக்கு நேரலை பாட வகுப்புகள் நடத்தப்பட்டத விண்ணில் சொந்தமாக ஆராய்ச்சி மையம் ஒன்றை சீனா கட்டி வருகிறது. அதற்கு Tianhe என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக Zhai Zhigang, Wang Yaping, Ye Guangfu ஆகிய மூன்று  வீரர்கள் ஆராய்ச்சி மையத்திலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் ஆராய்ச்சி மையத்தில் இருந்து சீன மாணவர்களுக்கு நேரலை பாட வகுப்புகளை எடுத்துள்ளனர்.  மேலும் அவர்கள் மாணவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை : பிரபல நாட்டில் உறுதிசெய்யப்பட்ட அறிகுறியில்லாத கொரோனா…. தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு….!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றால் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அனைத்து நாடுகளிலும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் […]

Categories
உலக செய்திகள்

8 லட்சம் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கிய சீனா…. அமைச்சரின் உருக்கமான கோரிக்கை….!!

ஆப்கானிஸ்தானுக்கு 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசு நன்கொடையாக அளித்துள்ளது. மேலும் காபூல் விமான நிலையம் வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகளை ஆப்கான் சுகாதாரத்துறை அமைச்சர் ஓமரிடம் சீன தூதர் வாங் யூ வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆப்கான் சுகாதாரத்துறை அமைச்சர் ஓமர் போர் தொடுப்பதற்காக தங்கள் நாட்டை நோக்கி டாங்கிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் வந்த நாடுகள் தங்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவவும் முன்வர வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமிய அடிமைகள் தயாரிக்கும் பொருட்கள் எங்களுக்கு வேண்டாம்…. பிரபல நாட்டில் நிறைவேற்றப்பட்ட மசோதா….!!

அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் சபையில் இஸ்லாமிய உய்கர் மக்களை அடிமைகளாக முகாம்களில் தங்க வைத்து சீனா தயாரிக்கும் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் சபையில் முக்கிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது இஸ்லாமிய உய்கர் மக்களை அடிமைகளாக முகாம்களில் தங்க வைத்து சீனா தயாரிக்கும் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோ பைடன் கையெழுத்து வைத்தவுடன் […]

Categories
உலக செய்திகள்

Breaking : “முப்படை தளபதி மரணத்தில் சந்தேகம்”…. இது சீனா செஞ்ச வேலை தானா….? பகீர் தகவலை வெளியிட்ட பாஜக….!!

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது சீனாவின் சதியாக இருக்கலாம் என்ற பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் அதிகாரிகள் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக திட்டமிட்டிருந்தார். அதன்படி டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்த பிபின் ராவித் தன்னுடைய குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேருடன் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை […]

Categories
உலக செய்திகள்

‘நாங்களும் புறக்கணிக்கிறோம்’…. அமெரிக்காவை பின்தொடரும் பிரபல நாடு….!!

அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்துள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் வருகின்ற 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆனால் அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளன. அதாவது சீனாவின் மேற்கில் உள்ள ஜின்ஜியாங்கில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது. இச்சம்பவத்தை முன்னிறுத்தி அமெரிக்கா இந்த போட்டிகளை […]

Categories
உலக செய்திகள்

“குளிர்கால ஒலிம்பிக் போட்டி”… ராஜீய ரீதியில் புறக்கணிப்பு…. கண்டனம் தெரிவித்த பெய்ஜிங்….!!!

அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அமெரிக்காவின் முடிவுக்கு சீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் கூறியதாவது “ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை உய்கர் இனத்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதாக கூறி, சீனாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் அமெரிக்கா புறக்கணிப்பதாக அறிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது ஆகும். உய்கர் இனத்தவர்கள் இன அழிப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

‘இத்தனை குழந்தைகளா பெத்துக்கலாமா’….! அதிரடி சலுகைகள் வழங்கிய பிரபல நாடு….!!

மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனாவாகும். இங்கு அண்மைகாலமாக குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற கட்டுப்பாட்டை அந்நாட்டு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. மேலும்  அவர்கள் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்காக மானியங்கள், வரி குறைப்பு போன்ற பல்வேறு சலுகைகளை  அந்தந்த மாகாண அரசுகள் […]

Categories
உலக செய்திகள்

நாங்க போட்டிக்கு வரல…. பகிரங்கமாக தெரிவித்த அமெரிக்கா…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

அமெரிக்கா சில முக்கிய காரணங்களால் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளது. சீனாவில் சின்சியாங் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் மீது சீனா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த காரணத்தாலும், இன படுகொலையினாலும் அமெரிக்கா சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி சர்வதேச ஒலிம்பிக் கழகம், உலக நாடுகள் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் பாரம்பரிய மருத்துவ முறை!”…. மருத்துவ நிபுணர்கள் புதிய முயற்சி…!!

சீன நாட்டில் மருத்துவ நிபுணர்கள், பாரம்பரிய மருத்துவ முறையில்  மருந்து தயாரிக்கும்  பணியை மேற்கொண்டுள்ளனர். சீன மக்கள் வயிறு மற்றும் மண்ணீரல் தொடர்பான பாதிப்புகளுக்கு மேற்கத்திய மருத்துவ முறை தகுந்த பலனை தருவதில்லை என்று கூறுகிறார்கள். எனவே, சீன அரசாங்கம் பாரம்பரிய மருந்துகளை மீண்டும் தயாரிக்கலாம் என்ற புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, வயிறு வலிக்கு 5 மூலிகைகளை பயன்படுத்தி முக்கோண அமைப்பிலான மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. மேலும், விண்வெளி வீரர்களுக்காகவே சிறப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்காக குளிர்-தடுப்பு ஆடைகள்!”… புதிதாக தயாரித்த சீனா…!!

சீன அரசு சமீபத்தில் புதிதாக குளிர் தாங்கக் கூடிய வகையிலான உடைகளை எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்காக தயாரித்திருக்கிறது. சீன அரசு, தங்கள் நாட்டின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் உயர்ந்த பனி சிரம், பீடபூமி பகுதியில், பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருவதால், அவர்கள் கடுமையான குளிரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, அவர்களுக்காக கோல்டு ரெசிஸ்டன்ட் உடைகளையும் உபகரணங்களையும் தயாரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. சீன பத்திரிக்கை ஒன்று, லாஜிஸ்டிக்ஸ் சப்போர்ட் டிபார்ட்மெண்ட் தயாரித்த பத்து விதமான புதிய ஆடைகளையும் உபகரணங்களையும் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

இந்த விஷயத்துல தப்பு பண்ணிட்டோம்…! சீனாவிடம் வசமாக சிக்கிய பிரபல நாடு…. மன்னிப்பு கோரிய நிதியமைச்சர்….!!

சீனாவிடம் கடன் வாங்கிய பாவத்திற்காக உகாண்டா அரசு சர்வதேச விமான நிலையத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் ஏழ்மையான நாடான உகாண்டா கடந்த 2015-ஆம் ஆண்டில் சீனாவின் எக்ஸிம் பொதுத்துறை வங்கியிடம் கடனாக ரூ.1,500 கோடியை வாங்கியுள்ளது. மேலும் 20 ஆண்டிற்குள் அந்த கடனை 2 சதவீதம் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கூடுதல் அவகாசமாக ஏழு ஆண்டுகள் வழங்கப்படும் என்ற விதிமுறையும் இருந்துள்ளது. அதேபோல் உகாண்டா அரசு அந்நாட்டில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

சீனாவிடம் மண்டியிடுகிராதா உலக சுகாதார அமைப்பு….?? புதிய வகை கொரோனாவுக்கு பெயர் வைக்கும் விவகாரத்தில் தொடரும் சர்ச்சை….

புதிய வகை கொரோனா வைரஸ்க்கு பெயர் வைத்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சையை சந்தித்து வருகிறது உலக சுகாதார அமைப்பு. உலக சுகாதார அமைப்பானது புதிய கொரோனா வைரஸ்க்கு கிரேக்க எழுத்துகளைத் தவிர்த்து omicron என பெயர் சூட்டியுள்ளது. ஆனால் புதிய கொரோனா மாறுபாட்டுக்கு xi என்றே பெயர் வைத்து இருக்க வேண்டும். ஆனால் xi என்பது சீன ஜனாதிபதியின் பெயர் என்பதால் அந்த பெயரை புதிய கொரோனா வைரஸ்க்கு வைக்கவில்லை. இதனால் உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் […]

Categories
உலக செய்திகள்

சிக்னலை மதிக்காமல் சென்ற வாகன ஓட்டி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பிரபல நாட்டில் விபத்து….!!

சீனாவில் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் ஓட்டி சென்றவர் மீது மோதிய விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் ஷெங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சிக்னலில் ஒளிர்ந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கையும் மீறி ஷெங் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பக்கவாட்டு திசையில் வேகமாக வந்த லாரி ஒன்று ஷெங் மீது மோதியது. இதனால் ஷெங் லாரியின் சக்கரங்களில் உரசியபடி அதிர்ஷ்டவசமாக […]

Categories
உலக செய்திகள்

“சேமிப்பில் உள்ள கச்சா எண்ணையை வழங்க முடிவு!”.. ஜப்பான் அரசு அறிவிப்பு..!!

அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஏற்ப ஜப்பான் அரசு, தங்கள் சேமிப்பில் உள்ள கச்சா எண்ணெயை பயன்பாட்டிற்கு கொடுக்க தீர்மானித்திருக்கிறது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 80.40 டாலர்களாக அதிகரித்தது. இது இந்திய மதிப்பில் 6,435 ரூபாய். எனவே, அமெரிக்கா, இந்த விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த, ஒபெக் மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க கோரியது. ஆனால் ஒபெக் நாடுகள் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், அமெரிக்க அரசு, கச்சா […]

Categories
உலக செய்திகள்

“துணிகளை எடுக்கச் சென்ற மூதாட்டி!”.. 18-ஆவது மாடியில் தலைகீழாக தொங்கிய அதிர்ச்சி வீடியோ..!!

சீனாவில் 18 ஆவது மாடியில் தலைகீழாக தொங்கிய மூதாட்டியை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சீனாவில் உள்ள ஜியாங்கு மாகாணத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 83 வயது மூதாட்டி, துணிகளை எடுப்பதற்காக 18வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவரின் கால் தடுக்கி, துணி போடும் கம்பியில் சிக்கி தலைகீழாக தொங்கினார். எனவே, இது தொடர்பில் தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. An 82-year-old woman was […]

Categories
உலக செய்திகள்

சீனா இந்த முயற்சியை ஒருபோதும் கையில் எடுக்காது..! மாநாட்டில் பேசிய அதிபர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜின்பிங் தங்கள் நாடு தென்கிழக்கு ஆசியா மீது அதிகாரத்தை செலுத்தாது என்று கூறியுள்ளார். சீனா, தென்கிழக்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து வருவதாக ஏனைய நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் மற்ற நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே தென்சீன கடல் விவகாரத்தில் பல வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவுக்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்திற்கும் இடையே காணொளி காட்சி […]

Categories
உலக செய்திகள்

“500 கோடி ரூபாய் செலவில் விண்வெளி சுற்றுலா!”.. சீன தொழிலதிபர், உதவியாளருடன் செல்கிறார்..!!

ஜப்பான் நாட்டின் தொழிலதிபர் 500 கோடி ரூபாய் செலவில் விண்வெளியில் சுற்றுலா செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். கஜகஸ்தானில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலமாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த யுசகு மேசவா என்ற பிரபல தொழிலதிபர், விண்வெளி சுற்றுலாவிற்கு முன் பதிவு செய்திருக்கிறார். அவரின் உதவியாளரான, யோசோ ஹிரோனோவும், அவருடன் விண்வெளி சுற்றுலாவிற்கு செல்லவிருக்கிறார். எனவே, இவர்கள் இருவருக்கும், கஜகஸ்தானில், ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸாண்டர் மிஷர்கின் பயிற்சி கொடுத்து வருகிறார். யுசகு மேசவா, […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் அச்சறுத்தலை எதிர்கொள்ள இந்தியா திட்டம்!”.. ரஷ்யாவிலிருந்து வந்திறங்கிய ஏவுகணைகள்..!!

இந்திய அரசு, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரஷ்யாவிடமிருந்து பெற்ற எஸ்-400 வகை ஏவுகணையை அடுத்த வருட தொடக்கத்தில் பயன்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே சமீப வருடங்களாக தொடர்ந்து எல்லை பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்திய எல்லை பகுதியில் சீனா பல ஆயுதங்களை குவித்திருக்கிறது. சீனாவின் மிரட்டல்களை எதிர்கொள்ள இந்தியாவின் முப்படைகள் தயாராக இருக்கிறது. எல்லையில் நடக்கும் மோதலை தடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அரசு, தனது இராணுவ படைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

டென்னிஸ் வீராங்கனை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காமியுங்கள்…. விருப்பம் தெரிவித்த அமெரிக்கா….!!

சீன நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரின் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை வைத்த முதலிலிருந்தே டென்னிஸ் வீராங்கனை மாயமானதையடுத்து தற்போது அமெரிக்கா அந்நாட்டை வலியுறுத்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் வசித்துவந்த பெங்க் சூவாய் என்னும் பெண்மணி அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். இதனையடுத்து டென்னிஸ் வீராங்கனையான சூவாய் அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமரின் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் முன்னாள் பிரதமரின் மீது டென்னிஸ் வீராங்கனையான சூவாய் பாலியல் […]

Categories
உலக செய்திகள்

பல நன்மைகளைத் தரும் செயற்கைக்கோள்…. வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா…. வெளியான முக்கிய தகவல்….!!

சீனா தங்கள் நாட்டிலுள்ள செயற்கைக் கோள்களை ஏவும் பகுதியிலிருந்து லாங்க் மார்ச் 4b கேரியர் என்னும் ராக்கெட்டின் மூலம் விண்வெளியில் செயற்கை கோள் ஒன்றை தற்போது ஏவியுள்ளது. சீனாவில் தையுவான் என்னும் செயற்கை கோள்களை ஏவும் பகுதி ஒன்று அமைந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவுடன் போட்டி போடும் நோக்கில் சீனா பலவகையான ராக்கெட்டுகளை விண்வெளியில் ஏவி வருகிறது. இந்நிலையில் தற்போதும் மேல் குறிப்பிட்டுள்ள தைவான் என்னும் செயற்கை கோள்களை ஏவும் பகுதியிலிருந்து சீனா பயிர் விளைச்சல்களை மதிப்பீடு செய்வது […]

Categories
உலக செய்திகள்

டிக்டாக் செயலி மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. பாகிஸ்தான் அரசு அறிவிப்பு..!!

பாகிஸ்தான் அரசு, ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்படுவதாக கூறி டிக் டாக்கை தடை செய்திருந்த நிலையில், தற்போது தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில், டிக் டாக் செயலில் ஆபாச வீடியோக்கள் பதிவிடப்படுகிறது என்று புகார்கள் எழுந்தது. எனவே, கடந்த ஜூலை மாதத்தில் பாகிஸ்தானின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, டிக் டாக் செயலிக்கு தடை அறிவித்தது. இந்நிலையில், டிக் டாக் நிறுவனம் உத்தரவாதம் அளித்ததால், அறிவித்த தடையை நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், இதற்கு முன்பு அருவருக்கும் வகையில் வீடியோக்களை […]

Categories
உலக செய்திகள்

“600 வருடங்களில் முதல் முறை!”.. அதிக நேரத்திற்கு தோன்றிய பகுதியளவு சந்திரகிரகணம்..!!

600 வருடங்களில் முதல் தடவையாக அதிக நேரம் பார்க்கும் பகுதியளவு சந்திரகிரகணம் தோன்றியுள்ளது. சீன மக்கள், 600 வருடங்களில் முதல் தடவையாக பகுதியளவு சந்திரகிரகணம். அதிக நேரத்திற்கு காணப்பட்டதை மிகுந்த ஆர்வதத்துடன் பார்த்து ரசித்துள்ளனர். இரவு நேரத்தில், வானில் அழகாக சந்திரகிரகணம் தோன்றியது. இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை, படம் பிடிப்பதற்காக மாலை நேரத்தில் இருந்து சீனாவை சேர்ந்த வானியல் நிபுணர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அந்நாட்டில் உள்ள பீஜிங் என்ற பகுதியில், பகுதி அளவு சந்திரகிரகணமானது மூன்றரை மணி […]

Categories
உலக செய்திகள்

பொழுதுபோக்கிற்காக விளையாடிய…. சீன விண்வெளி வீரர்கள்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

பொழுதுபோக்கிற்காக விண்வெளி வீரர்கள் விளையாடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில் உள்ள கோபி பாலைவன பகுதியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி விண்கலம் மூலம் விண்ணிற்கு சீன வீரர்கள் அனுப்பப்பட்டனர். இவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அங்கேயே  தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். மேலும் விண்வெளியில் உள்ள அவர்கள் பொழுதுபோக்கிற்காக ‘லாட்ஸ்கி’ என்னும் சீன புதிர் விளையாட்டை விளையாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

‘சோசலிசத்தை மேம்படுத்தும் சீன அதிபர்’…. பல மொழிகளில்…. வெளியிடப்பட்ட புத்தகம்….!!

சீனாவை நவீனமயமாக்குவதற்கான கொள்கை குறித்த புத்தகமானது பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவை நவீனமயமாக்குவதற்கான கொள்கையை விவரிக்கும் புத்தகம் ஒன்றை அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் எழுதியுள்ளார். இந்த புத்தகமானது ஹிந்தி மற்றும் மத்திய ஆசிய நாடுகள் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் தொகுதியானது ‘ஷி ஜின்பிங்: சீனாவின் ஆட்சிமுறை’ என்பதாகும். இது இந்தி,பாஷ்டோ, டாரி,சிங்களம், உஸ்பெக் போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சீன தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிகழ்ச்சியில் இந்த புத்தகமானது வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

‘எங்களுக்கு சந்தேகமாக உள்ளது’…. டென்னிஸ் வீராங்கனை அனுப்பிய மின்னஞ்சல்…. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரம்….!!

காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை அனுப்பிய மின்னஞ்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் புகழ்பெற்ற சீன டென்னிஸ் வீராங்கனையான பெங் சூவாய் கடந்த 2013ல் விம்பிள்டன் கிராண்ட் சிலாம் மற்றும் 2014ல்  பிரெஞ்சு ஓபன் போன்ற பட்டங்களை தைவானைச் சேர்ந்த ஹசீ சூ வெய்யுடன் இணைந்து வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் சீனாவின் முன்னாள் துணைப்பிரதமரும் தற்பொழுது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜாங் கோலி குறித்து சமூக ஊடகத்தில் பாலியல் குற்றச்சாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை பாதுகாப்பது யார்?…. ரந்தீப் சிங் டுவிட் பதிவு….!!

பூடான் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 100 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பூடான் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அங்கு 4 கிராமங்களை உருவாகி வருகிறது. இதனால் இந்தியாவின் தேசப்பாதுகாப்பிற்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சனை கடந்த மே மாதத்திலிருந்து நடந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? […]

Categories
உலக செய்திகள்

“பஃபேயில் அனைத்து உணவுகளையும் தின்று தீர்த்த நபர்!”.. புலம்பும் உணவக உரிமையாளர்.. சீனாவில் ருசிகர சம்பவம்..!!

சீனாவில் இருக்கும் பிரபல உணவகத்தில் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்த நபரை இனி உணவகத்திற்குள் வரக்கூடாது என்று உணவக உரிமையாளர் கருப்பு பட்டியலில் இணைத்துள்ளார். சீன உணவகங்களில் பஃபே என்ற முறையில் ஒரு நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு அங்கிருக்கும் பல வகை உணவுகளை அளவின்றி உண்ணலாம். இந்நிலையில் அங்குள்ள பிரபல  உணவகத்திற்கு காங் என்ற யூடியூபர் வழக்கமாக செல்வாராம். இவர் அதிகமாக சாப்பிடக் கூடியவர். இந்நிலையில், சமீபத்தில் அந்த உணவகத்திற்கு சென்ற காங், அதிகமான உணவு வகைகளை […]

Categories
உலக செய்திகள்

“பூட்டானின் எல்லைப்பகுதியை ஆக்கிரமித்த சீனா!”.. செயற்கைக்கோள் புகைப்படங்களில் வெளிவந்த தகவல்..!!

சீன அரசு, பூட்டான் நாட்டிற்குரிய எல்லைப்பகுதியை ஆக்கிரமித்து புதிதாக 4 கிராமங்களை அமைத்துள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்களினால் தெரியவந்திருக்கிறது. The little lab-ல் ஆராய்ச்சியாளராக இருக்கும் நிபுணர், செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த 2020 ஆம் வருடம் மே மாதம் தொடங்கி தற்போது வரை சுமார் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட புதிய கிராமங்களை சீனா உருவாக்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சீனா, ஆக்கிரமித்துள்ள பகுதிகள் கடந்த 2017 ஆம் வருடத்தில் இந்தியா மற்றும் சீன படைகளுக்கு […]

Categories

Tech |