ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டிருக்கும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பெரும்பாலான சீன மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.சீன மாணவர்கள் அனைவரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்கார சீன மாணவர்களை அடையாளம் கண்டு ஆஸ்திரேலியா கும்பல் ஒன்று அவர்களை குறிவைத்து கடத்துவதை வழக்கமாக கொண்டு வருகிறது.சீனாவில் உள்ள போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல மாணவர்களை இத்தகைய கும்பல் அலைபேசியில் தொடர்பு கொள்வார்கள். பின்னர், […]
