கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீன பேராசிரியரை அமெரிக்காவில் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் லியு கொரோனா குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் அவரது வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ரோஸ் காவல்துறை […]
