சீன பிராந்திய கடல் எல்லைக்குள் அமெரிக்காவின் பென்ஃபோல்ட் போர்க்கப்பல் அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழைந்ததாக சீன ராணுவம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சீன விமானப்படை மற்றும் கடற்படை அமெரிக்க போர்க்கப்பலின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த தூண்டுதல் நடவடிக்கையை அமெரிக்க தரப்பினர் கைவிட வேண்டும் இல்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று சீன ராணுவம் அமெரிக்காவுக்கு நடுக்கடலில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க கடற்படை பாராசெல் தீவின் வெளியே […]
