ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் வகையில் சீனா பங்காற்றுவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சியில் பின்பற்றப்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். மேலும், தலிபான்களை அங்கீகரிப்பதற்கு, மற்ற நாடுகள் தயக்கத்தில் உள்ளது. இந்நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், சீனா பங்காற்றுவதாக கூறியுள்ளனர். இதுதொடர்பில், தலிபான்களின் செய்தி தொடர்பாளரான, சுஹைல் ஷாஹீன், […]
