காணொளி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரு நாட்டு அதிபர்களும் உரையாற்றினார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நேற்று அதிகாலை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அதிலும் வணிகம், மனித உரிமைகள், தென்சீனக்கடல் பிரச்சனை, தைவான் போன்ற பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றுள்ளது. இது இரு அமர்வுகளாக சுமார் மூன்றரை மணி நேரம் நடந்தது. இதில் அதிபர் ஷி ஜின்பிங் கூறியதை சீன அரசு ஊடக அறிக்கையாக […]
