மருந்துகளின் மூலப் பொருள்களுக்கு அண்டைய நாடான சீனாவை மட்டுமே நம்பி இருப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வின்கேம் ஆய்வகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதிய மருந்துகள் கண்டுபிடிக்க அரசு முறையாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மனுதாரர் நிறுவனத்திற்கு நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை […]
