இந்தியா-அமெரிக்கா இடையே அடிப்படை தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் அமெரிக்க செயற்கைக் கோள்களில் இருந்து துல்லியமான தரவுகளையும் நிலப்பரப்பு படங்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்க உள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவில் இருந்து குறிப்பிடத்தக்க ராணுவ பயன்பாடுகளைக் கொண்ட முக்கியமான தகவல்களை இந்தியா அணுக முடியும். இதுகுறித்து டெல்லியில் விளக்கமளித்த ராஜ்நாத்சிங் கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளைக் கையாளவும், கண்காணிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று தெரிவித்தார். […]
