சீத்தாப்பழத்தில் அதிக அளவு இனிப்பு சுவைத்தருவது மட்டுமல்லாமல் இது எளிதில் கிடைக்க கூடிய பழமாகும். இந்த பழத்திலுள்ள சத்துக்களினால் ஏற்படும் நன்மைகள் காண்போம்: சீத்தாப் பழத்தில் அதிக அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால் தான் இது அதிக இனிப்பு சுவையை தருவதோடு மட்டுமல்லாமல் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்வதோடு உடலுக்கு வலிமையும் தருகிறது. சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து, நீர்சத்து […]
