தொடர்ந்து பெய்து வரும் மழையால் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 48 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் ராசிபுரத்தில் 48 மி.மீட்டர் மழை பதிவான நிலையில் திருச்செங்கோடு 26, குமாரபாளையம் 26 மி. மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மங்களபுரம், எருமப்பட்டி, புதுசத்திரம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் […]
