நாடு முழுவதும் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசானது கொண்டாடிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இதுவரை 21% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசியானது மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்கள ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாக […]
