இந்தியாவில் கடந்த ஆண்டு (2021) சீட்டு பெல்ட் அணியாததால் 16,397 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 8,438 பேர் ஓட்டுநர்கள். மீதமுள்ள 7,959 பேர் பயணிகள் என மத்திய போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்கி 46,593 பேர் பலியாகி உள்ளனர். 39,763 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 4,12,432 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து சாலை விபத்துகளில் 3,84,448 […]
