பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அதிமுக சட்டமன்றத்தில் ஆண்மையுடன் செயல்படவில்லை என்று பேசினார். இந்த பேச்சானது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக வட்டாரத்தில் நயினார் நாகேந்திரனின் பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று பாஜக சீட் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதில் நயினார் நாகேந்திரன் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுக, பாஜக கேட்ட சீட்டுகளை வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. […]
