அமெரிக்க நாட்டில் பணியின் போது உயிரிழந்த சீக்கிய அதிகாரியின் பெயரை தபால் அலுவலகத்திற்கு சூட்டி, கவுரவித்துள்ளனர். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் பணிபுரிந்த சந்தீப் சிங் என்பவர் இந்தியாவை சேர்ந்த சீக்கிய காவல் அதிகாரி. இவர் தான் அமெரிக்க காவல்துறை வரலாற்றிலேயே பணியின்போது தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட முதல் சீக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், கடந்த 2019 -ஆம் வருடத்தில் போக்குவரத்து தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஒரு வாகனத்தை நிறுத்திய போது […]
