கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை வழக்கில் தொடர்புடைய சங்ககிரியை […]
