கோவிட் 19 தொற்றுக்கான லேசான அறிகுறி உள்ளவர்கள் சி.டி. ஸ்கேன் எடுப்பதால் எந்த பயனுமில்லை என்றும் அடிக்கடி சி.டி.ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது என டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். நாட்டில் கோவிட் 19 நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் லேசான அறிகுறி இருந்தாலும் உடனடியாக சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது. பலர் லேசான […]
