டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் இதுவரை 39, 980 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,301 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்து 633 பேர் கொரோனோவால் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 682 பேர் குணமடைந்துள்ளனர். முதல்முறையாக ஒரே நாளில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரததைக் கடந்துள்ளது. […]
