சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் சிலர் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தரப்பிலிருந்து மீண்டும் அதிமுகவிற்கு வருவோரை சேர்த்துக் கொள்ளவோ, அவர்களுக்கு பொறுப்பு வழங்குவோ கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர். பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்தால் தான் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியும். அதிமுகவை பலப்படுத்த முடியுமென […]
