இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (ஐஆர்எம்எஸ்) தேர்வானது வரும் 2023 முதல் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முறையில் நடத்தப்படும் என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தேர்வை யுபிஎஸ்சி நடத்தும் எனத் தெரியவந்துள்ளது. ஐஆர்எம்எஸ் தேர்வு 2 நிலைகளைக் கொண்டுள்ளது. ப்ரிலிமினரி ஸ்கிரீனிங் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள் சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
