மின்சாரம் தாக்கியதில் தந்தை-மகன் 2 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவியார்பாளையத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு கவின் என்ற மகனும், பிரீத்தி என்ற மகளும் இருந்தனர். இவர்களில் கவின் பி.காம். பட்டதாரியாக இருந்துள்ளார். இதனையடுத்து மகேந்திரன் 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பங்கி செடி சாகுபடி செய்திருந்தார். இதனால் தந்தைக்கு உதவியாக அவரது மகன் கவின் என்பவரும் தோட்ட வேலை செய்து வந்தார். […]
