சிவமொக்கா பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய மாநிலத்தின் சிவமொக்கா பகுதியில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஒருவர் அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை […]
