நாம் ஏதேனும் ஒன்று நமக்கு வேண்டும் என்று நினைத்தால் அதனை இறைவனிடம் கேட்போம். அதேபோன்று ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் நேரடியாக கோவிலுக்கு சென்று இறைவனிடம் முறையிடுவோம். ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் சிவபெருமானிடம் கடிதத்தின் மூலமாக தனக்கு வேண்டியவற்றை கேட்டுள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கிபி பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு வெங்கடேசன் எனும் பக்தர் தினமும் கடிதம் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அவரது முகவரியை அவர் […]
