பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், தற்போது மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக் கட்டணம் செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
