விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு விபத்து நடந்த ஆலைக்குள் 5 பேர் சிக்கி உள்ளதாகவும், தீயை அணைப்பதற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியிலும் மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
