Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பம்…. திடீரென நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்துடன்  சேர்ந்து சாமி கும்பிடுவதுதற்காக வந்தனர். இந்நிலையில்  அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக  சென்றுள்ளார். அப்போது திடீரென விக்னேஷின் மகனான  5 வயதுடைய  கார்த்திக் திடீரென  தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற பூச்சொரிதல் திருவிழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிம்ம வாகன அலங்காரத்தில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து   விரதம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தங்கக்கொடி கிராமத்தில் சண்முகம்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுவாசினிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி தனது மகள் சுவாசினிகாவை  மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு  கண்ணங்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராணியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறிக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மருத்துவ முகாம்…. தொடங்கி வைத்த வட்டார மருத்துவ அலுவலர்…. பயன்பெற்ற பொதுமக்கள்….!!

சிறப்பு மருத்துவ  முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் வைத்து அழகப்பா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் கல்லூரி முதல்வர் பெத்தா லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசு, ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த ராசு, மருத்துவர் பிரியங்கா, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் விஜயதாமரை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்பரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க இன்னும் வாங்கலையா?…. கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

பயனாளர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள லாடனேந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வைத்து நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவாப்  பப்ளிசிட்டீஸ் தலைவர் புவனேந்திரன், சங்க செயலாளர் செல்வம், நிர்வாகிகள், பயனாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சிவகங்கை கோவாப் பப்ளிசிட்டீஸ்   தலைவர் புவனேந்திரன் நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கி  வாழ்த்துக்களை […]

Categories
Uncategorized சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்விக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கலைச்செல்வி வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கலைச்செல்வியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிக்கன் சாப்பிட வந்த தொழிலாளி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீதளி கீழ்கரை  பகுதியில் முகமதுரியாசுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைக்கு சிக்கன் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளி முகமது யாசின் என்பவரது முகத்துக்கு நேராக சிகரெட் பிடித்து புகையை விட்டுள்ளார். இதனால்  இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆத்திரம் அடைந்த முகமது ரியாசுதீன் கத்தியை கொண்டு முகமதுயாசினை  சரமாரியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற புத்தாக்க பயிற்சி…. காட்சிப்படுத்தப்பட்ட பாரம்பரிய உணவுகள்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

புத்தாக்க பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் புத்தாக்க பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார்,  ஊராட்சி மன்ற தலைவர் சிராஜூதீன், ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள், வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஊராட்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இரிடியம் வேண்டுமா உங்களுக்கு” தொழிலதிபருக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டம்….!!

தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆனந்தவல்லி பகுதியில் தொழிலதிபரான ராஜிவ்காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் பல பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோகன்தாஸ்  என்பவர் ராஜீவ்காந்தியிடம்  நான் இரிடியம்  வாங்கி விற்பனை செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜீவ்காந்தி பலரிடம் இருந்து வாங்கிய  3 1/2 கோடி ரூபாய் பணத்தை மோகன்தாஸிடம்  வழங்கியுள்ளார். இதனை பெற்று கொண்ட மோகன்தாஸ் தலைமறைவாகி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் முக்கிய நோக்கம்…. நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மனித கடத்தல், குடும்ப வன்முறை, பாலியல் சுரண்டல் குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா, போக்சோ நீதிபதி பாபுலால், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி, சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயா, பாதுகாப்பு அலுவலர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி செந்தில்குமார் என்பவர் 48 மதுபாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற  கோவிலில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில்  பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சித்தருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், திருநீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வராகி  அம்மன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்…. மேற்கொள்ளப்பட்ட பணிகள்…. பரிசுகளை வழங்கிய நகர்மன்ற தலைவர்….!!

துப்பரவு பணி செய்யும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அமுதப்பெருவிழா என்னும் சிறப்பு துப்பரவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, நகராட்சி ஆணையர் லெட்சுமணன், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி இன்ஜினியர் கோவிந்தராஜன், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை  தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் அருணாச்சலம் செட்டியார் பகுதியில் அமைந்துள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எனக்கு பெண் கிடைக்க வில்லை…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய் பொட்டல் பகுதியில் பாண்டிமீனாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பாண்டிமீனால்  பல இடங்களில் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். ஆனால் பெண்  கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்லப்பாண்டி வீட்டில் வைத்து தங்க நகை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் அமிலத்தை மதுவுடன் கலந்து குடித்துவிட்டு மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். மையம் சென்ற பெண்…. வாலிபரின் செயல்…. போலீஸ் விசாரணை….!!

நகையை  திருட முயன்ற   வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்பாள்புரம்  பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வைரக்கல் பதித்த 2 3/4 பவுன் தங்க நகையை  கடைக்கு சென்று மாற்றுவதற்காக தனது தங்கையுடன் அம்பேத்கார் சிலை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ஏ.டி.எம். மையத்திற்கு  பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நகையை வைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

உரிய ஆவணம் இன்றி  மது பாட்டில்கள் கொண்டு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி சத்திரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்   ராஜபிரபு என்பவர் உரிய ஆவணம் இன்றி   48 மதுபாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் உரிய ஆவணம் இன்றி  மது பாட்டில்களை  கொண்டு வந்த ராஜாபிரபுவை  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற நகர்மன்ற கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட நகராட்சி தலைவர் …. கலந்து கொண்ட அதிகாரிகள் ….!!

அனைத்து வார்டுகளிலும் துப்பரவு செய்யும்  பணிகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி தலைவராக பதவியேற்ற சுந்தரலிங்கம் தேவகோட்டையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின்படி தேவகோட்டை மாநகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் அமைந்துள்ள கண்மாய், குளம் போன்ற பகுதிகளில் இயந்திரம் மூலம் துப்பரவு செய்யும் பணி நடைபெற்றது. இதனை நகராட்சித் தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்துள்ளார். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நகை கடன் பெற்றவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிக்கை…!!!!!

மண்டல கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மண்டல கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் கோ. ஜினு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் அமைந்துள்ள  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்,பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பயிற்சி முகாம்…. கலந்து கொண்ட பிரதிநிதிகள்…. பயிற்சி அளித்த அதிகாரிகள்….!!

பேரூராட்சி மன்ற பிரநிதிகளுக்கு  பயிற்சி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து பேரூராட்சி தலைவர்கள் , துணைத்தலைவர் மற்றும்  உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமனராஜ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா, ஊராட்சி தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம் ….!!

முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தயாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 16-ஆம்  தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி திருவிழா  நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று காப்பு கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகனத்தை  திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் விளக்கு பகுதியில் சசிகுமார் -முனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தங்கள் குடும்பத்துடன்  மதுரையில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில்  நேற்று திரும்பி வந்த சசிகுமாரின்  குடும்பத்தினர் இருசக்கர வாகனத்தை  மர்ம நபர்கள் திருடி சென்றதை  பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்  . இதுகுறித்து சசிகுமார் காவல்நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற மகன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

2 மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சாத்தமால் என்பவர் மாடு முட்டி அனுமதிக்கப்பட்டார். இவரது மகனான குபேரன் என்பவர் தாயை பார்ப்பதற்காக சிங்கம்புணரி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென குபேரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குபேரன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஜவுளிக்கடை வியாபாரிக்கு வந்த செய்தி…. நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

ஜவுளிக்கடை வியாபாரியிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை செந்தில் நகரில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை  வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கணேஷ்குமாரின்  வாட்ஸப் மூலம் கடந்த 9-ஆம் தேதி தொடர்பு கொண்டு  பேசிய மர்ம நபர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய கணேஷ்குமார் மர்ம […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம்…. பெறப்பட்ட மனுக்கள்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழநிலை, காரேந்தல்ப்பட்டி, திருக்களாப்பட்டி ஆகிய பகுதிகளில் பட்டா கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது. இதில் டாஸ்மார்க் துணை ஆட்சியர் வேலுசாமி, மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் வள்ளிமயில், ஊராட்சி மன்ற செயலாளர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ்வரி, வார்டு உறுப்பினர் ஆறுமுகம், சிவசங்கரி, அழகம்மாள், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்…. இந்தியபள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

இந்தியபள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர்….!!

நடைபெற்ற மீன்பிடித் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு மீன்களை பிடித்து சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோளக்குடி கிராமத்தில் பெரிய கண்மாய் என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய்  கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கண்மாய்  நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில்  மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.  அதைப்போல் நேற்று கிராமத்தில்  மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த  திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான   பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பொதுமக்கள் ஊத்தா, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடனடியாக சரி செய்ய வேண்டும்…. அவதிப்பட்டு வரும் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பல பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கி  செல்வோர் என அனைவரும் வந்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை சில நாட்களுக்கு முன்பு  சரிந்து விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் என அனைவரும் சுட்டெரிக்கும் வெயிலில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பேருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை…. தொடக்கி வைத்த முன்னாள் அமைச்சர்… கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

முன்னாள் அமைச்சர் தென்னவன்  தார்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி  வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலனி பகுதியில் தார்ச்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு  தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழ் சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சின்னதுறை, யூனியன் ஆணையாளர் சேவகன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்ரமணியனின் நிதியில் இருந்து 40 லட்ச ரூபாய் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோட்டில் சென்று கொண்டிருந்த வேன்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வேனில்  பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரஸ்தா பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள கடைகளுக்கு   வியாபார சரக்குகளை விற்பனை  செய்வது வழக்கம். அதே போல் நேற்றும் அருண்குமார் வியாபார சரக்குகளோடு  செஞ்சி சாலையில் வேனில்  வந்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென வேன்  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண்குமார் உடனடியாக வேனில் இருந்து கீழே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எனக்கு இந்த பொண்ண பிடிக்கல…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண் பிடிக்காததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவிடையார்பட்டி கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித்தொழிலாளியானா  நாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நகராஜிக்கு  பெற்றோர் திருமணம் செய்வதற்காக பெண் பார்க்க அழைத்து சென்றுள்ளனர். ஆனால்  நாகராஜன் அந்த  பெண்ணை  பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. உறவினர்களின் போராட்டம் ….!!

பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனி பகுதியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு   6 வயதுடைய விஜின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜன்  பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி வேனில்  வந்துள்ளார். அப்போது விஜின்  வேனில் இருந்து இறங்கி  வீட்டிற்கு செல்லும் சாலையை   கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து விஜின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜின் சம்பவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் செய்யவில்லை?…. ஊராட்சி மன்ற தலைவரின் கோரிக்கை…. பொதுமக்கள் போராட்டம் ….!!

ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரணசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஞானசேகரன் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் எங்கள்  கிராமத்தின் முக்கிய பிரதான சாலைகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு பல கால்நடைகள் உயிரிழந்தனர். மேலும் கிராமத்தில் நீர்நிலை கால்வாய்களையும் சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நான் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பணம் கொடுத்த வாலிபர்…. நண்பர்களின் செயல்…. போலீஸார் தீவிர விசாரணை ….!!

நண்பரிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிய 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  புதுவயல் கிராமத்தில் வீரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பரான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தென்னந்தோப்பு வைப்பதற்காக தனது நண்பர்  பிரபு என்பவரின் சொத்தை அடமானம் வைத்து பணம் தரும்படி வீரசேகரிடம்  கேட்டுள்ளார். இதனை நம்பிய வீரசேகர் தனது நண்பர்களிடம் இருந்து 17 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில்சுந்தரமூர்த்திபணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்கள் ஏன் ஹிஜாப் அணியக்கூடாது?…. முஸ்லிம்களின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ஐகோர்ட் உத்தரவை கண்டித்து முஸ்லிம்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய  தடை விதித்த ஹைகோர்ட் உத்தரவை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பல முஸ்லீம் அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட  முஸ்லிம்கள்  கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடனடியாக நியமிக்க வேண்டும்…. ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினரின்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்கள் அனைத்தையும் தேர்வாணையம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்ட நிர்வாக நிதியை காலதாமதம் இல்லாமல் அனைத்து வட்டாரங்களிலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னை ஏன் யாரும் பாக்க வரல?…. ஆயுள் தண்டனை கைதியின் விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை….!!

சிறைக்கைதி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடி  உடைப்பு திறந்தவெளி சிறையில் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கொலை வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில்  4 ஆண்டுகளாக கருப்பசாமியின் உறவினர்கள் யாரும் கருப்பசாமியை பார்க்க வரவில்லை. இதனையடுத்து  கருப்பசாமி சிறைச்சாலை அதிகாரிகளிடம் பரோலில் வெளியே செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கருப்பசாமி சிறைச்சாலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சமயபுரமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தீ. ஊரணி கைலாச விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. கடன் உதவி வழங்கிய அதிகாரி….!!

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து வாழ்வாதார திட்ட இயக்கத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் இயக்கத்தின் கூடுதல் இயக்குனர் முத்துமீனாள், திட்ட இயக்குனர் வானதி, வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கயற்கண்ணி,மேலாளர் ராஜேந்திரன், வட்டார இயக்க மேலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூடுதல் இயக்குனர் முத்துமீனாள் எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டில் பேசிக்கொண்டிருந்த குடும்பம்…. வாலிபர்களின் வெறிச்செயல் …. போலீஸ் விசாரணை ….!!

  வீட்டில் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினரை தாக்கிய மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் குமரகுரு-விஜயஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்  குமரகுரு  வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்  அவரது எதிர் வீட்டை சேர்ந்த கணபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கணபதி சிலருடன் சேர்ந்து குமரகுரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து குமாரகுரு மற்றும் அவரது மனைவியை  சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது இதனை தடுப்பதற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ராகு-கேது பெயர்ச்சி…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!

ராகு- கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூரில்   பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்ஆண்டுதோறும்  ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் தெப்பக்குளத்திற்கு முன்பு யாகம் வளர்க்கப்பட்டு ராகு, கேதுவுக்கு சந்தனம், பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களைக் கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் வாடகை செலுத்த வில்லை?…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!

வாடகை பணம் செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமாக  பல கடைகள் உள்ளது. இந்த கடைகளை வியாபாரிகள்  வாடகைக்கு எடுத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 20 கடைகள் 6 கோடி  ரூபாய் வாடகையை பாக்கி வைத்துள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் பலமுறை வாடகை செலுத்துமாறு கடையின் உரிமையாளர்களிடம்  அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்த வில்லை. இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. நிவாரண தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்….!!

ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பொதுமக்களிடமிருந்து  வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் உதவித்தொகை , வங்கி கடன் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய 310 மனுக்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் அணியக்கூடாது?…. இஸ்லாமியர்களின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ஹிஜாப் அணிய தடை விதித்ததை  கண்டித்து இஸ்லாமிய   அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி வால் மேல்  நடந்த அம்மன் திருக்கோவில் மைதானத்தில் வைத்து பள்ளி-கல்லூரிகளில் மாணவிகள்  ஹிஜாப் அணிவதை தடை விதித்த கர்நாடக ஐகோர்ட் உத்தரவை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய இயக்கம், கட்சிகள் கூட்டமைப்பு, ஜமாத்துல் உலமா சபை, ஐக்கிய ஜமாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கமலி, மாவட்ட உலமா  இப்ராஹிம் வைஜி, பாசித், பெண்கள் ஆண்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

ஆயுதங்களுடன்  சுற்றித்திரிந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் நகரில் சில வாலிபர்கள் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர்களை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில்   சட்டவிரோதமாக விஜய், பிரபாகரன், ஆனந்த், பாலா என்பவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு…. நிர்வாக அலுவலர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்திய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைபட்டி கிராமத்தில் வைத்து தமிழ்நாடு  ஏறுதழுவுதல் நல சங்கத்தின் சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதியின்றி நடைபெற்றதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் சபரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மஞ்சுவிரட்டு  நிகழ்ச்சியை அனுமதியின்றி  நடத்திய கார்த்திக், சாமிநாதன், ரகுபதி, பாலகிருஷ்ணன், கணேசன் உள்ளிட்ட 5 பேர் மீது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்னைக்கு கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் உட்கோட்ட  துணை மின் நிலையங்களுக்கு   உட்பட்ட மீன் மார்க்கெட், மதுரை ரோடு, காலேஜ் ரோடு, அஞ்சலக விதி, நன்கு ரோடு, கணேஷ் நகர், கே.வைரவன்பட்டி, தென்கரை, மண்மேல் பட்டி, தம்பிபட்டி, புதுப்பட்டி, அய்யப்பன் கோவில், சிராவயல், மருதங்குடி, பிள்ளையார்பட்டி, என். வைரபட்டி, மாதவராயர் பட்டி,  திருக்கோஷ்டியூர், கருவேல்குறிச்சி, மடக்கரைபட்டி, ஓலைக்குடிபட்டி, அண்ணா நகர், கோட்டையிருப்பு, சுண்ணாம்பிருப்பு, பிராமணம்பட்டி, மேலயான்பட்டி, குண்டேந்தல்பட்டி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதனை கட்டாயமாக ஒழிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொத்தடிமைகள் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை  மேற்கொண்டு வருகிறது. அதைப்போல் நமது மாவட்டத்திலும் கொத்தடிமைகளை கண்டுபிடித்து மீட்பதற்கு மாவட்ட அளவில் கொத்தடிமை கண்காணிப்பு குழு இயங்கி வருகிறது. இதனால் தேசிய மனித உரிமை ஆணையத்தின் காட்டுதலின் படி கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 18004252650 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கொத்தடிமை தொழிலாளர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடனடியாக அமைக்க வேண்டும்…. பொதுமக்களின் சிரமம் …. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர், புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, கரிசல்பட்டி உள்ளிட்ட   கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. இதனால் முதியவர், சிறு குழந்தைகள், பெண்கள் என  அனைவரும் பெரிதும்  சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக  மின்னழுத்தம் குறைவு ஏற்படும் கிராமங்களில்  கூடுதல் டிரான்ஸ்பார்மர்  அமைக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவர்களுக்குத்தான் பொறுப்புகள்…. நடைபெற்ற பிராமண சங்க கிளை தொடக்க விழா…. கலந்து கொண்ட உறுப்பினர்கள்….!!

தமிழ்நாடு பிராமணர் சங்க கிளையின்  தொடக்க  விழா  நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  நேமத்தான் பட்டி பகுதியில் அமைந்துள்ள பெரிய கோவில் வளாகத்தில் வைத்து தமிழ்நாடு சங்க பிராமணர் கூட்டத்தின் கானாடுகாத்தான் கிளை தொடக்க விழா  நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராமசுவாமி, துணை தலைவர் முத்துசாமி, புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாஷ், திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கானாடுகாத்தான் கிளையின் கவுரவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் கதவை பூட்டிவிட்டு சென்ற பூசாரி…. காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோவில்  பூட்டை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வழங்காவயல்  கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிங்கமுகம் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில்  இரவு  கோவில் பூசாரி  கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு  பூசாரி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் உண்டியலில் வைத்திருந்த 2 ஆயிரம்  ரூபாய் பணத்தை […]

Categories

Tech |