Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

97 1/2 லட்ச ரூபாய் மோசடி…. நிதி நிறுவன அதிபர் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

97 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக நிதி நிறுவன அதிபர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பாரதி நகரில் ராமையா(48) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2000-ஆம் ஆண்டு ராமையாவுக்கு அறிமுகமான ஒருவர் காரைக்குடி நவரத்தின நகரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பிய ராமையா தனது பணம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட கலெக்டருக்கு கிடைத்த தகவல்…. கிளினிக் நடத்தியவர் கைது…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த நபர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிதம்பரநாதபுரம் பகுதியில் ராமன்(42) என்பவர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவர் அக்குபஞ்சர் சிகிச்சை படித்துவிட்டு பொதுமக்களுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை கொடுத்து சிகிச்சை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி தேவகோட்டை மருத்துவ அதிகாரி டாக்டர் செங்கதிர், சிவகங்கை மருத்துவம் மற்றும் ஊரக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேசிய ஊட்டச்சத்து மாதம்…. குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை…. “1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு”….!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது குறித்து கூறியுள்ளதாவது, தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு மாவட்ட முழுவதும் இருக்கும் ஐந்து வயது உட்பட்ட 73 ஆயிரம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு கூடுதலாக ஊட்டச்சத்து உருண்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#Breaking: இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை …!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இளையான்குடி, காரைக்குடி பகுதியில் கன மழை”…. அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள்…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!!!!

இளையான்குடி மற்றும் காரைக்குடி பகுதியில் கன மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில் மதியம் 2 மணிக்கு மேல் திடீரென கனமழை பெய்தது. இந்த மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் இளையான்குடி, கண்மாய்க்கரை, வாள்மேல் நடந்த அம்மன் கோவில் பகுதி, பஜார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மாணவர்களுக்கு பாடத்தை எவ்வாறு எளிதாக புரிய வைப்பது…?” அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்…!!!!!

சிவகங்கையில் அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாமானது நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே இருக்கும் அமராவதி புதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாமானது நடந்தது. இப்பயிற்சி முகாமிற்கு கல்லூரி இயக்குனர் மீனலோச்சனி வரவேற்க கல்லூரியின் செயலர் யதீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா, யதீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா உள்ளிட்டோர் ஆசியுரை வழங்கினார்கள். மேலும் இக்கூட்டத்தில் பள்ளி மாணவர்களிடம் இயற்பியல் பாடத்தை எவ்வாறு எளிதாக புரிய வைப்பது என்பது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கிரிக்கெட் பேட்டால் பெண்ணை தாக்கிய நபர்”…. கைது செய்த போலீசார்….!!!!!

கிரிக்கெட் பேட்டால் பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே இருக்கும் கல்லல் மங்கம்மா சாலை இந்திரா நகரை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மனைவி தேவிகா. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். முருகானந்தத்திற்கும் அவரது அண்ணன் குமாரவேலுக்கும் முன் விரோதம் இருக்கின்றது. இந்த நிலையில் குமாரவேலு வளர்க்கும் கோழிகள் முருகானந்தம் வீட்டிற்குள் சென்று அசுத்தம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் தேவிகா குமாரவேலுவிடம் கேட்ட பொழுது அவர் ஆத்திரமடைந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சிவகங்கை அருகே தாழ்வாகப் பறந்த விமானம்”….. திரண்டு நின்று வேடிக்கை பார்த்த மக்கள்….!!!!!

தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலவாணியங்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை தனியார் பயணிகள் விமானம் ஒன்று தாழ்வாக பரந்தபடியே சென்றது. பின் சிறிது நேரத்தில் அவ்வழியாக அந்த விமானம் மீண்டும் தாழ்வாக பறந்து சென்றது. இவ்வாறு தொடர்ந்து மூன்று முறை பறந்தது. பின் மதுரையை நோக்கிச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு நின்று வேடிக்கை பார்த்தார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. தாயை தகாத வார்த்தைகளால் பேசிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சிறுமியின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டரமாணிக்கம் பகுதியில் பாண்டி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டிக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிறுமியின் தாய் பாண்டியை கண்டித்துள்ளார். அப்போது பாண்டி சிறுமியின் தாயை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வழக்கை ரத்து செய்ய 20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்”….. அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார்…!!!!!

ஒரு பிரச்சினைக்கு இரண்டு முறை வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அதில் ஒரு வழக்கை ரத்து செய்வதற்கு ரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் கைது செய்தார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள கருங்காலங்குடியை சேர்ந்தவர் ஹக்கீம். இவர் மீது இடப்பிரச்சனை சார்பாக மதுரை மாவட்ட போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு பிரச்சனை சம்பந்தமாக ஒரு வழக்கு […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தையே உலுக்கிய படுகொலை…! 27பேருக்கு 3ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

கச்ச நத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் தண்டனையானது விதிக்கப்பட்டு இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் இந்த மூவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு பிரிவினரால் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கிணைப்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜூலை 27ஆம் தேதி இந்த வழக்கிற்க்கான தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகன்களுடன் சென்ற தந்தை…. மின்வேலியில் சிக்கி இறந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்…!!

மின்வேலியில் சிக்கி தந்தை, மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிராமத்தில் அய்யனார்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(25), சுகந்திர பாண்டி(22) என்ற மகன்கள் இருந்துள்ளனர். இதில் அஜித் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலக்ஷ்மி என்ற மனைவி உள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அஜித்திற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அய்யனார் தனது மகன்களுடன் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் மாரநாடு வயல் பகுதிக்கு முயல் வேட்டைக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான மூர்த்தி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செல்வி மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து மூர்த்தி கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மூர்த்தி அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெண் இன்ஜினியரிடம் 9 பவுன் நகை கொள்ளை…. 3 பெண் கைவரிசை…. ரயில்வே போலீசார் அதிரடி….!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி வள்ளி வினோதினி(25) என்ஜினியர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி மதுரையிலிருந்து பெங்களூருக்கு செல்ல நாகர்கோவில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு மறுநாள் அதிகாலை ரயில் வந்தது. அதன் பிறகு தர்மபுரி நோக்கி ரயிலில் சென்ற போது வள்ளி வினோதினி தனது பையில் வைத்திருந்த நகையை பார்த்த போது 9 பவுன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தச்சு தொழிலாளியை ஓட ஓட வெட்டி கொலை…. கொடூர சம்பவம்…. பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை….!!!

சிவகங்கை காளவாசல் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்கிறார்m இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவில் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை போல காளவாசல் பகுதியிலும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை பார்க்க வந்த பரமசிவத்தை நள்ளிரவு 1 மணிக்கு பின்தொடர்ந்த மர்ம கும்பல் அவரை விரட்டி ஓட ஓட வெட்டிக் கொடூரமாக கொலை செய்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலில் நடந்த சம்பவம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவபுரிபட்டி கிராமத்தில் தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் தண்ணாயிரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த கவின்(21), சேதுபதி(21) ஆகிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்…. உடனே இத பண்ணுங்க…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு வருடம் தோறும் அரசு தரப்பிலிருந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. என் நிலையில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பாக 2022-2023 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களும் கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவி தொகை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா”…. கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!!!!

முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் முறையூர் கிராமத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ள நிலையில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ஆனி தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று ஆனி மாத தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது பத்து நாட்கள் நடைபெறுகின்ற நிலையில் நேற்று காலை குருக்கள் சுரேஷ் தலைமையில் ஏழு பேர் கொண்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சென்னை அருகே பயங்கரம்…. வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. 20 லட்சம் கொள்ளை…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்ணமங்கலம் என்னும் பகுதியை  சேர்ந்த சிவபாலன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். அடிக்கடி சென்னை வந்து அண்ணா சாலையில் உள்ள கம்பெனி ஒன்றில் மருத்துவ உபகரணங்களை வாங்கி செல்வார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அரை எடுத்து தங்கி உள்ளார். அதன் பின் இரவு 8:30 மணியளவில் அவர் தனது நண்பரின் பைக்கில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மெக்கானிக் குத்தி கொலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!

மெக்கானிக் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஜீவா நகரில் சுரேஷ்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கும் அவரது மனைவி மலைச்செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று சுரேஷ் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் கடைக்கு சென்ற மலை செல்வியின் சகோதரர் கணேசன், சித்தி மகன் கார்த்திக் ஆகியோர் சுரேஷிடம் தகராறு செய்துள்ளனர். இதில் கோபமடைந்த வாலிபர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி வடக்கு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவரை பிரிந்து ஒரு பெண் தனது 11-ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 11-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான அருண்பாண்டி(23) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடப்பாவமே!…. எஸ்.ஐ. மண்டையை உடைத்த போலிஸ்காரர்…. சிவகங்கையில் பயங்கரம்….!!!!

சிவகங்கை மாவட்ட கீழப்பூவந்தியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவரின் மகன் முத்துப்பாண்டி(32). இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். முத்துப்பாண்டி நேற்று முன்தினம் கடைவீதியில் உள்ள சலூன் கடைக்காரர் பாஸ்கரன் என்பவரிடம் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஸ்கரன் போர்வண்டி சோதனை சாவடியில் நின்று கொண்டிருந்த எஸ்.ஐ. பரமசிவதிடம் போய் கூறி உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.ஐ. தகராறில் ஈடுபட்ட முத்துப்பாண்டி எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினார். இதனையடுத்து நேற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. 2-வது முறையாக சிக்கிய வாலிபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் பிரகதீஸ்வரன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகதீஸ்வரன் புகையிலை பொருட்களை கடையில் விற்பனை செய்த குற்றத்திற்காக அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இந்நிலையில் மீண்டும் அவரது கடையில் புகையிலை விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உணவு பாதுகாப்புத்துறை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி…. மின்னல் தாக்கியதால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கீழராங்கியம் காலனியில் விவசாயியான கரந்தமலை(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மழை பெய்த நேரத்தில் வயல்வெளியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதால் கரந்தமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளித்த சிறுமி….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்களது மூத்த மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வீட்டிற்கு அருகே இருக்கும் இடத்தில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லோடு…. கவனிக்காமல் வந்த ஓட்டுநர்…. பொதுமக்களின் சிறப்பான செயல்…!!

மின்கம்பியில் உரசி வைக்கோல் லோடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தம்பிபட்டி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக வைக்கோல் மின்கம்பி மீது உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கவனிக்காமல் மினி லாரி ஓட்டுனர் வாகனத்தை இயக்கி வந்துள்ளார். இதனை பார்த்தார் பொதுமக்கள் லாரி ஓட்டுனரிடம் தீப்பிடித்து எரிவதை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலை இல்லாததால் தள்ளிப்போன திருமணம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கம்பனூரில் சிவராமகிருஷ்ணன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிரந்தரமான வேலை இல்லாததால் சிவராம கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் வாழ்க்கையை வெறுத்த சிவராமகிருஷ்ணன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்…. 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி…!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 10 வருட சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அடுத்து இருக்கும் சிறுபாலை கிராமத்தில் வசித்து வரும் மணி பிரசாத் என்பவர் மினி லாரி டிரைவராக இருந்த நிலையில் சென்ற 2014 ஆம் வருடம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாளுடன் நின்ற வாலிபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாளுடன் நின்று பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் மணிகண்டன்(21) என்பவர் வசித்து வடிக்கிறார். இவர் வ.உ.சி சாலையில் இரண்டு அடி நீளமுடைய வாளுடன் நின்று கொண்டிருந்தார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மணிகண்டன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பாம்பன் பாலத்தில் மோட்டார் சைக்கிள்- கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாம்பன் பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அமராவதி புதூர் பகுதியில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸவரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடல் நடுவே உள்ள பாம்பன் ரோடு பாலத்தில் கார் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பல மஞ்சுவிரட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடிய காளை”…. வாகனம் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு…!!!!

பல மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்ட காளை வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் காளாப்பூர் ஊராட்சியில் கட்டப்புளி கருப்பர் கோவில் உள்ள நிலையில் இந்த கோவில் காளை சண்டியரானது பல ஊர்களில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் காளாப்பூர் சாலையில் நேற்று முன்தினம் இரவில் கோவில் காளை சண்டியர் சென்று கொண்டிருந்த போது வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மானாமதுரை அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு”… கோட்டு ஓவியத்தை தொட்டிகல் முனி என வணங்கி வரும் மக்கள்…!!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை அருகே கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே இருக்கும் காளத்தியேந்தல் கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக ஓவியத்துடன் கூடிய ஒரு கல் கிடைத்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சமயகுமார் என்பவர் வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அந்த கல் 300 வருடங்களுக்கு முற்பட்டது என தெரியவந்தது. மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

 மிகவும்  பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேம்பத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆவுடையநாயகி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 88  ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 48-வது நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. இந்நிலையில் சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து மாலை ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார்  மோதி ஆற்றில் விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  திருப்பத்தூரில் நெடுமறம் விருசுளியாற்றின்  பாலத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவர் தனது நண்பர்களான விக்னேஷ், மாரியப்பன், ராம்குமார், அருள் ஆகியோருடன் சேர்ந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி ஆற்றில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆலயம்…. நடைபெற்ற பாஸ்கு விழா…. கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள்….!!!!

திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பாஸ்கு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைகாட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பாஸ்கு விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு நேற்று பாஸ்கு விழா நடைபெற்றது. இந்நிலையில்  நாடக கலைஞர்கள் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்து காட்டினர். இந்த விழாவில் திருச்சி கிழக்கு மாவட்ட எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், ஒன்றிய கவுன்சிலர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பொதுமக்களின் கோரிக்கை…. அதிகாரிகளின் அதிரடி செயல்….!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கடைகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வருமான வரித்துறை அலுவலகம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழியை  சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே   ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை  விடுத்துள்ளனர். இதனையடுத்து நேற்று நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில்  இருந்த கடைகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“குடோனில் இருந்த பொருட்ள்கள்” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடோனின்  பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடி கிரவுன் நகரில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கழனிவாசல் பகுதியில் மின்சார சாதனங்கள்  பழுது பார்க்கும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில்  சண்முகசுந்தரம்  வேலையை முடித்துவிட்டு பொருட்ள்களை அருகில் இருக்கும்  குடோனில் வைத்து பூட்டிவிட்டு  சென்றுள்ளார். இதனையடுத்து   திரும்பி வந்து பார்த்தபோது குடோனின்  கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற மண்டலாபிஷேக விழா…. தரிசனம் செய்த அதிகாரிகள்….!!!!

பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள என்.வயிரவன்பட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிதம்பர விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல  ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 48-வது நாள்  மண்டலாபிஷேக பூஜை   நடைபெற்றது. இந்நிலையில் விநாயகர் மற்றும் வைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படும்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மருத்துவமனைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர்” வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வடக்கு ரத வீதி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 15-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 7 பேர் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பணம் வைத்து சீட்டு விளையாடிய 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊருணிக்கரையில்  சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை  செய்தனர். அந்த சோதனையில்  சிலர்  சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சீட்டு விளையாடிய ஆறுமுகம், ஜோசப், பாலமுருகன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கணவன் இறந்த துக்கம்” மனைவிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவாழ்வு நகரில் சக்திவேல்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சரஸ்வதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர் அவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி  தலைமையில் நடைபெற்றது.இந்நிலையில் இந்தி மொழி திணிப்பு மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறுகின்ற நுழைவு  தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில்  ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் ஈஸ்வரன், ரவி, வசந்தி, பழனிவேல், முக்குடி ஊராட்சி தலைவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“23 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட காளைமாடு” திடீரென நடந்த விபரீதம்…. பெரும் சோகத்தில் கிராம மக்கள்….!!!!

கருப்பசாமி கோவிலுக்கு சொந்தமான காளை  திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  23 ஆண்டுகளுக்கு முன்பு  கிராம மக்கள்  சார்பில் மஞ்சு விரட்டு  காளை   ஒன்று வாங்கப்பட்டது .  இந்த காளை  சிராவயல், அரளிப்பாறை, கண்டிப்பட்டி, நெடு மறம், தேவபட்டு, மகிபாலன்பட்டி   உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று  உடல் நலக்குறைவு காரணமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்” நடைபெற்ற குருபூஜை விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

குன்றக்குடி அடிகளாரின் குருபூஜை விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடியில் வைத்து குன்றக்குடி அடிகளாரின் 27-ஆம்  ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் பேராசிரியர் சாமி தியாகராஜன், ரத்தினம், பிள்ளையார்பட்டி கோவிந்தானந்த  சாமிகள், விஞ்ஞானி பாலகிருஷ்ணன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, சுப்பையா, சுந்தர் ஆவுடையப்பன், கவிஞர் பரமகுரு, அரு. நாகப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம் அருணகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர் சாமி தியாகராஜன், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கோவில் திருவிழாவிற்கு சென்ற பெண்” வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

6 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் பகுதியில் மீனாள்  என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மீனாள்  வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மீனாள்  அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உடனடியாக திரும்ப பெற வேண்டும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தாலுகா செயலாளர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தியும்  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்கம், விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில்  வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தாலுகா கமிட்டி செயலாளர் ராஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு அதனை திரும்ப பெற வேண்டும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை  தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு பவர் கட் ” வெளியான அறிவிப்பு ….!!!!

மின்மாற்றி பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அஞ்சல்வீதி, அகில்மனைத் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தேரோடும் வீதி, தென்மாபட்டு, பெரியார் நகர், காந்தி வீதி, கறிக்கடைசந்து   ஆகிய பகுதிகளில்   நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் செல்லத்துரை கூறியுள்ளார். மேலும் மின்சாரம் செல்லும் பகுதிகளில் மின்மாற்றி  பணிகள் நடைபெறுவதால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பங்குனி பொங்கல் வைக்கும் திருவிழா” கலந்து கொண்ட பக்தர்கள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாடார் பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 11-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற பெண்…. நடந்த கொடூர சம்பவம் …. வாலிபரை தூக்கிய போலீஸ்….!!!!

பெண்ணை  கற்பழித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுகந்திபுரம் கிராமத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகன்யா  கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சாப்பிடுவதற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகன்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் சுகன்யா அதே பகுதியில் அமைந்துள்ள முந்திரி காட்டில் […]

Categories

Tech |