Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளியேறிய கரும்புகை…. பீதியடைந்த மக்கள்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ரசாயன தொழிற்சாலையில் கரும்புகை வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோவிலூர் ரசாயன தொழிற்சாலையில் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த தொழிற்சாலையில் கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு கூடினர். இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தார், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை அமைதிப்படுத்தினர். அதன்பின் ரசாயன தொழிற்சாலைக்குள் அதிகாரிகள் சென்று அங்குள்ளவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் ஆலை தரப்பினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி” கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள்…. ஆராய்ச்சியாளர்களின் தகவல்….!!

கீழடியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் உறைகிணறு, முதுமக்கள் தாழி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் கீழடியில் ஏழாம் கட்டட ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆராய்ச்சியில் பாசி மணிகள், பெண்கள் காதில் அணியும் ஆபரணங்கள், மற்றும் சுடுமண் கிண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சுடுமண்ணால் ஆன மூன்று அடுக்கு உறை கிணறும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட சதுரவடிவிலான வெள்ளி  நாணயத்தில் இருபுறமும் சூரியன், விலங்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை யாரு பண்ணிருப்பா….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனாம்பேட்டை பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகி பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.  இதனையடுத்து நேற்றிரவு அந்த கோவிலில் உள்ள உண்டியலை மர்ம நபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர். இதனைப்பார்த்த கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுல ஏதோ மர்மம் இருக்கு…. மனைவிக்கு கிடைத்த தகவல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கணவர் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்லல் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2  மகள்களும், மகன்களும் உள்ளனர். இந்நிலையில்  தர்மலிங்கத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே தர்மலிங்கம் கடந்த 30 வருடங்களாக சின்னதேவபட்டியில் வசிக்கும் தனது அக்காவான பஞ்சவர்ணம் என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய இருவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசியம் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இளையான்குடி பகுதியில் நஜிமுதீன் என்பவர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அதனைப்பார்த்த காவல்துறையினர் நஜிமுதீனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று சாத்தணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சமையல் செய்து கொண்டிருக்கும்போது…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராமலட்சுமி சமையல் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதனால் ராமலட்சுமியின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் தீக்காயத்துடன் கிடந்த ராஜலட்சுமியை உடனடியாக மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது…. முதியவருக்கு நடந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டு  தலை துண்டிக்கப்பட்டு கை, கால்கள் உடைந்த நிலையில் முதியவரின் சடலம் ஒன்று கிடந்தது. இது பற்றி தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருக்கும்போது…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பந்தல் போடும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கோவிலூரில் உள்ள தனது மகன் சீனி என்பவர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அதன்பின் காரைக்குடிக்கு மீண்டும் திரும்புவதற்காக கோவிலூர் பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது  பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டில் யாருமில்லாத சமயத்தில்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சிவகங்கையில் பரபரப்பு….!!

தீ குளித்து பெண் தற்கோலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை பகுதியில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிற்பங்களை செதுக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. கடந்த சில நாட்களாக கலைச்செல்விக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென கலைச்செல்வி தன் உடல் மீது மண்ணெண்ணெய் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் அந்த தள ஓட மாட்டல….? கூலி தொழிலாளிக்கு நடந்த கொடுமை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

முகப்பு ஓடுகளை மாட்டாததால் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் லோகநாதன் என்பவரின் வீட்டிற்கு பன்னீர்செல்வம் ஓடுகளை மாட்டி கொடுத்துள்ளார். இதில் பன்னீர் செல்வம் வீட்டின் முகப்பு ஓட்டை மாட்டாததால் இவருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மிகவும் ஆத்திரம் அடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் விற்கலாமா” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்றபனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் சாகுல் ஹமீது, லியாத் அலி ஆகிய இருவரும் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சோதனையில் பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பிக் கேட்டது தப்பா….? சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் சுதந்திர ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுதந்திர ராஜ்குமார் தனது நண்பர் சந்தோஷிடம் மோதிரம் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்பின் சந்தோஷிடம் சுதந்திர ராஜ்குமார் மோதிரத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கிடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களான காளீஸ்வரன், மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து மானாமதுரை ரயில்நிலையத்தில் காரில் நின்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வெறிச்சோடி போயின”…. எதிர்பார்த்த லாபம் இல்லை…. வியாபாரிகளின் வேதனை….!!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மீன் சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் மீன் சந்தைகள் வாடிக்கையாளர்களின் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இது குறித்து வியாபாரிகள் கூறும்போது ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் வாடிக்கையாளர்கள் யாரும் மீன் வாங்க வரவில்லை என்றும், ஆடி மாதத்தில் பெண்கள் விரதத்தை பின்பற்றுவதால் மாதம் முழுவதும் இப்படித்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும்பாலான வியாபாரிகள் சரியாக வியாபாரம் இல்லாததால் சீக்கிரமாக கடையை அடைத்துவிட்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கண்டித்தது தப்பா….? தம்பியின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

அண்ணனை உருட்டு கட்டையால் அடித்துக்கொன்ற தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்லல் பகுதியில் புவனேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதியழகன் என்ற சகோதரர் இருக்கின்றார். இந்நிலையில் மதியழகன் கடந்த 10 வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகின்றார். இதனையடுத்து வீட்டில் சத்தமாக பேசிய மதியழகனை புவனேந்திரன் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மதியழகன் உருட்டு கட்டையை எடுத்து புவனேந்திரனின் மண்டையில் பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த புவனேந்திரனை அவரது உறவினர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கிடைத்த அரும் பொருள்” நடைபெற்ற அகழ்வாராய்ச்சி…. ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பு….!!

அகழ்வாராய்ச்சியில் முது மக்களின் தாழி முழு உருவத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆராய்ச்சியில் முதுமக்களின் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் முது மக்களின் தாழி சேதாரமில்லாமல் முழு உருவத்தில் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அழகிய சுடுமண் குடம் ஒன்றும் கிடைத்துள்ளது. இது முது மக்களின் அரும் பொருளாக கருதப்படுகிறது. மேலும் ஆராய்ச்சியில் இன்னும் அதிகமான பொருள்கள் கிடைக்கும் என்றும், அவை விரைவில் மக்களின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சோலார் சைக்கிள்” மாணவர்களின் வியக்க வைக்கும் திறமை…. குவியும் பாராட்டுக்கள்….!!

சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைத்த சகோதரர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீர குருஹரிகிருஷ்ணன், சம்பத் கிருஷ்ணன் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைக்க முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இணையதளத்தில் உள்ள தகவல்கள் மூலமாகவும், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலமாகவும் சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை இவர்கள் வடிவமைத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் கூறும்போது, சோலார் சைக்கிளானது சூரிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீ இந்த வழியா போகக்கூடாது…. குடும்பத்தினரின் தகறாறு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

நிலத்தகராறு பிரச்சினையில் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் அப்துல்லத்தீப் என்பவர் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் அன்சார் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நஸ்ரின் பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்துல்லத்தீப்க்கும், அன்சார் அலிக்கும் சொந்தமான பூர்வீக நிலம் மேலாயூர் கிராமத்தில் உள்ளது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே பாதை சம்பந்தமாக நிலத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் அப்துல்லத்தீப் அந்த வழியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தலையில் அடிச்சு உடைச்சிட்டாங்க…. ரகளை செய்த வாலிபர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

டாஸ்மாக் கடை விற்பனையாளரை மது பாட்டிலால் தாக்கி தப்பி ஓடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. அந்தக் கடையில் பில்லூரில் வசிக்கும் பார்த்திபமூர்த்தி என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டாஸ்மாக்கிற்கு 3 வாலிபர்கள் மது பாட்டில் வாங்க சென்றுள்ளனர். அப்போது விற்பனையாளர்களிடம் அந்த 3 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மது வாங்க வந்த 3 வாலிபர்களும் பார்திபமூர்த்தியின் தலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏதோ மர்மமா இருக்கு…. வாயில்லா ஜீவன்களுக்கு நேர்ந்த சோகம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மர்ம நோயால் கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்களது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கால்நடைகளை ஏதோ ஒரு மர்மநோய் தாக்கி வருவதால் அவைகள் சரியாக தீவனம் சாப்பிடுவதில்லை. மேலும் ஆடுகள் சில நாட்களில் இறந்து விடுகின்றன. இந்நிலையில் வன்னிகுடி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாயில் கவ்வியிருந்த மீனால்…. வாலிபருக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

வாயில் கவ்வியிருந்த மீன் தொண்டையில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் ஒன்றாக இணைந்து சின்னக்குன்றங்குடி கண்மாயில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் மான்கொம்பு பகுதியில் வசிக்கும் இளையராஜா என்பவரும் அவர்களுடன் சேர்ந்து மீன்பிடிக்க கண்மாயில் இறங்கியுள்ளார். இதனையடுத்து இளையராஜா ஒரு மீனை பிடித்து தனது வாயில் கவ்விக்கொண்டு மற்ற மீன்களை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது வாயில் கவ்வியிருந்த மீனானது இளையராஜாவின் தொண்டைக்குள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதே வாடிக்கையா போச்சு…. வாலிபர் செய்த செயல்…. சோதனையில் சிக்கிய பொருள்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் ரியாஸ்கான் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரியாஸ்கான் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் ரியாஸ்கான் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரியாஸ்கான் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரியாஸ்கானை சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஏன் இப்படி செய்யணும்” கண்ணில் குத்திய கண்ணாடி…. ஓட்டுனரின் பரபரப்பு புகார்….!!

அரசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் மதுரையிலிருந்து தேவக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ராம் நகர் பகுதிக்கு பேருந்தை  இயக்கியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென பேருந்தின் கண்ணாடி நோக்கி கல்லை வீசி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எப்ப பாரு இதே வாடிக்கையாக போச்சு” கிடைத்த ரகசிய தகவல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குமார் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து தப்பி ஓட முயன்ற குமாரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஐயோ வசமாக மாட்டிக்கிட்டோமே” மடக்கி பிடித்த பொதுமக்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வெள்ளாட்டை திருட முயன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கலுங்குப்பட்டி கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூரணபாக்கியம் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் இவர் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து பூரண பாக்கியம் தனது வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் வெள்ளாட்டை திருடிச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளார்கள். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பு அலங்கார பூஜைகளுடன்…. வெள்ளி கவசத்தில் காட்சியளித்த சித்தர் முத்துவடுகநாதர்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்….!!

வெள்ளி கவசத்தில் காட்சியளித்த சித்தர் முத்துவடுகநாதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து சித்தர் முத்துவடுகநாதருக்கு பழம், பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சித்தர் முத்துவடுகநாதருக்கு புதிய பட்டாடையுடன், பல வண்ண மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டு, வெள்ளிக் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெறும் 17 மணி நேரம் மட்டுமே…. தலைகீழாக எழுதப்பட்ட திருக்குறள்…. நடைபெற்ற பாராட்டு விழா….!!

திருக்குறளை தலைகீழாக எழுதிய ஓட்டுநருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் சோழன் புத்தக நிறுவனம் மற்றும் வள்ளுவர் பேரவை சார்பில் திருக்குறளை தலைகீழாக எழுதும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாட்டுசேரிப் பகுதியில் வசிக்கும் கார் ஓட்டுநரான கார்த்தியமூர்த்தி என்பவர் கலந்து கொண்டுள்ளார். இதில் கார்த்தியமூர்த்தி 1330 திருக்குறளையும் தலைகீழாக 17 மணிநேரம் 19 நிமிடங்களில் எழுதி சாதனை படைத்துள்ளார். அதன்பின் அவருக்கு நடைபெற்ற பாராட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலைகுலைந்த குடும்பம்…. மனைவியின் கோரிக்கை…. அளிக்கப்பட்ட நிதியுதவி….!!

 தமிழ் அமைப்பு நிறுவனத்தினர் சார்பில் சவுதி அரேபியாவில்உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ராஜேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஸ்வரன் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து சவுதி அரேபியாவில் இருந்த ராஜேஸ்வரன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். இது குறித்து ராஜேஸ்வரனின் மனைவி சவுந்தர்யா விபத்தில் உயிரிழந்த தனது கணவர் உடலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அங்கதான் இருந்துச்சா….? கண்டுபிடித்த அதிகாரிகள்…. சோதனையில் சிக்கிய பொருள்….!!

அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் சப்ளை தாசில்தாரான பாலகிருஷ்ணன் என்பவர் பள்ளத்தூர் பகுதியில்  திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு நவீன அரிசி ஆலையில் 1டன் எடையுள்ள 23 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அதிகாரிகள் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். இந்நிலையில் உணவு கடத்தல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அதன் மதிப்பு 4.6 லட்சம்” நடைபெற்ற திறப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

நடைபெற்ற குடிநீர் தொட்டி திறப்பு விழாவிற்கு பல்வேறு அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுவயல் ,முத்துப்பட்டினம், நேமம் ஆகிய கிராமத்தில் மாவட்ட கவுன்சில் நிதியிலிருந்து சுமார் 4.6 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி, குளியல் தொட்டி போன்றவை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் திறப்பு விழாவானது  நடைபெற்றுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு மாவட்ட கவுன்சிலரான திரு. ராதாபாலசுப்ரமணியன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியை சேர்ந்த ரவி, ஊராட்சி மன்ற தலைவர்களான மலர்மாணிக்கம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அடித்து நொறுக்கப்பட்ட கண்ணாடி” வாலிபர்களின் வெறிச்செயல்…. காவல்துறையினரின் விசாரணை….!!

காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய 15 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் சந்துரு-வாணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் குடும்பத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் அழகர்சாமி என்பவரின் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து முன்விரோதம் காரணமாக அழகர்சாமியின் மகன்களான அஜித், பிரபு மற்றும் அவர்களின் உறவினர்கள் கூட்டமாக சென்று வாணியின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இது குறித்து வாணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மிகவும் குறுகிய வளைவு…. அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மிகவும் குறுகிய வளைவுகளால் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தட்சனேந்தல் விலக்கு பகுதியில் குறுகிய வளைவுகள் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் வசிக்கும் மார்க்ஸ் மகாதேவன் என்ற பாதிரியார் தட்சனேந்தல் வளைவு பகுதியில் காரில் வந்து கொண்டிருந்த போது காரானது விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது. இதில் லேசான காயங்களுடன் மார்க்ஸ் மகாதேவன் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்போ முடிவடையும்….? தீவிரமாக நடைபெறும் பணிகள்…. மாவட்ட ஆட்சியரின் தீடிர் ஆய்வு….!!

கீழடியில் நடைபெறும் அருங்காட்சியகத்தின் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் கிடைக்கும் அரிய வகை பொருள்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு விரைவில் வைக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கீழடி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அருங்காட்சியக கட்டிட பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றது என சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சத்தம் கேட்டு போயிருக்கக் கூடாதா…. உயிரிழந்த மாடுகள்…. சிவகங்கையில் பரிதாபம்….!!

ரயில் மோதியதால் 6 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரயில் சென்றுள்ளது. அப்போது காரைக்குடி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் மாடுகள் நின்று கொண்டிருந்தன. அதனை கவனித்த ரயில் என்ஜின் டிரைவர் தொடர்ந்து அலாரம் அடித்துக்கொண்டு ரயிலின் வேகத்தை குறைத்துள்ளார். ஆனால் மாடுகள் அலாரம் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்து நகராமல் இருந்தது. இதனால் ரயில் தண்டவாளத்தில் நின்ற மாடுகள் மீது மோதியுள்ளது. இதனையடுத்து தண்டவாளத்தில் நின்ற ஆறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நாங்களும் கொடுப்போம்” நடைபெற்ற முகாம்…. காவல்துறையினரின் சிறப்பான செயல்….!!

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் 68 காவல்துறையினர் இரத்ததானம் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் மாவட்ட காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மேலும் இந்த முகாமானது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவல்துறையினரை  மருத்துவ கல்லூரியின் முதல்வர் வரவேற்றுள்ளார். இந்த ரத்ததான நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது…. தொல்லியல் துறையினர் கண்டெடுத்த பொருள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உறைகிணறை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழர்கள் பழமை வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தொல்லியல் துறையினர் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட அகழாய்வில் பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம், பாசிமணிகள், பானைகள் போன்ற பழமையான பொருட்களை கண்டறிந்தனர். தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் 7 – ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிய போனது தப்பா….? அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். பாண்டியராஜன் டெல்லியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருக்கிறார். இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரேணுகா வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து  திரும்பி வந்த ரேணுகா வீட்டின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அந்த நேரம் யாருமே இல்ல…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரன் பெரியார் நகர் பகுதியில் இருக்கும் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். மேலும் அங்கு மகேஸ்வரன் மட்டுமே குளித்துக் கொண்டிருந்ததால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது யாருக்கும் தெரியவில்லை. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதுக்காக தான் இங்க இருக்கீங்களா….? மடக்கி பிடித்த காவல்துறையினர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

ஆயுதங்களுடன் நடமாடிய 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை காவல்துறையினருக்கு காரைக்குடி பகுதியில் சிலர்  பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காட்டுப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஒரு கும்பல் வாள், பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மது அருந்திக் கொண்டிருப்பதை பார்த்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில் அந்த நபர்கள் விளாரிக்காட்டு பகுதியில் வசிக்கும் கருப்பசாமி, அழகர், தேவா, மணிகண்டன், சின்ராசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னது காலாவதியாகிட்டா….? தாசில்தாருக்கு நடந்த சோகம்…. அதிகாரிகளிடம் புகார் மனு….!!

காலாவதியான மருந்தை உடலில் செலுத்தியதால் முன்னாள் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்து நகர் பகுதியில் தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராமதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அவரது குடும்பத்தினர் ராமதாசை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து ராமதாசுக்கு செவிலியர்கள் குளுக்கோஸ் மருந்து பாட்டிலை ஏற்றினார்கள். அப்போது அவரது மகனான வெங்கடேஷ் எதார்த்தமாக குளுக்கோஸ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை…. சாலைகளில் பெருக்கெடுத்த நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தாக்கத்தின் காரணமாக மக்கள் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது தப்புனு தெரியாதா…. வசமா மாட்டிய 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த சீட்டை பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூவந்தி காவல் சரகத்திற்கு உட்பட்ட மணல்மேடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அருகில் பணம் வைத்து சூதாடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன், சீமை சாமி, கண்ணன், இளையராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்ததோடு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வைக்க கூடாது…. பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பயன்படுத்திய பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர் கவிதா தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது பற்றி ஆய்வுசெய்துள்ளனர். அப்போது வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பயன்பாட்டில் இருந்த பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடுஅதை பயன்படுத்திவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழவயல் கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் பக்கத்து ஊருக்கு சென்றபோது எஸ்.புதூர் மின்வாரிய அலுவலகம் அருகில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து பலத்த காயமடைந்த ராஜாங்கம் ஆம்புலன்ஸ் மூலம் பொன்னமராவதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் வைத்து திருட்டு…. வசமா சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு தப்பி ஓடிய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் ஒரு ஆட்டுக்குட்டியுடன் சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் காவல்துறையினர் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியபோது திடீரென அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மற்ற 2 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி நடத்தலாம்…. உங்களுக்கு அனுமதி கொடுக்கல…. 10 பேர் மீது வழக்குப்பதிவு….!!

இளையான்குடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதிரியாராக பணிபுரிந்த ஸ்டேட் சுவாமி சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சரியாக குடிநீர் வழங்காததால் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு தாலுகா பொருளாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். அதன்பின் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை… முதியவருக்கு நடந்த சோகம்…கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்னல்  தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரக்குளம் பகுதியில் வேலு என்பவர் வசித்துள்ளார். இந்நிலையில் வேலு ஈச்சங்காடு பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இதனையடுத்து செல்வராஜ் புளியமரத்திற்கு  அடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல்  தாக்கியதால் செல்வராஜ்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்பதான் நிம்மதியா இருக்கு… உற்சாகத்தில் பக்தர்கள்… கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம்…!!

சில நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமியை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் வழிபாட்டு தலங்கள் திறப்பு உட்பட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வழிமுறைகள் விதிக்கப்பட்டன.  இதனையடுத்து கோவிலின் நுழைவாயிலில் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்து அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்… இறுதியில் தெரிந்த வந்த உண்மை…கால்நடை மருத்துவர்களின் தகவல்…!!

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 40 ஆடுகள் நிமோனியாவால்  பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 40 ஆடுகள் அடுத்தடுத்த நாட்களில் இறந்துள்ளன. இச்சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து  காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஆடுகளை பரிசோதித்துள்ளனர். இதில் ஆடுகளுக்கு நிமோனியா சளி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இறுதியில் ஆடுகள் நிமோனியா நோயினால் தான் இறந்துள்ளன […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதன் மதிப்பு 3 லட்சமா…? சட்டவிரோதமான செயல்… காவல்துறையினரின் அதிரடி சோதனை…!!

சட்டவிரோதமாக   தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்திருந்த  வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் பல்பொருள் தொழிற்சாலையில் குற்ற திற்காக சொந்தமான குடோனில்  திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் தடை செய்யப்பட்ட சுமார் 3 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா, பாலிதீன் பைகள் ஆகியவை சிக்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரணத்தை கண்டுபிடிச்சிட்டாங்க…கால்நடை மருத்துவர்களின் ஆய்வு…தெரிய வந்த உண்மை…!!

ஒரே கிராமத்தில் ஏரளமான ஆடுகள் இறந்ததால் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில்  சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் குறித்து நேற்று மானாமதுரை கவுன்சிலர் அண்ணாதுரை அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அம்மனுவின் அடிப்படையில் இன்று கால்நடை மருத்துவர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் இறந்தவ ஆடுகளுக்கு சளி இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் ஆடு வளர்ப்பவர்கள் தாங்களாகவே மருந்து வாங்கிக் கொடுத்ததன் […]

Categories

Tech |