பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவிருக்கை கிராமத்தில் கூலி தொழிலாளி சுப்பையா- சந்திரா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விறகு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி கடந்த 2012 ஆம் ஆண்டு இருவரும் வெட்டிய விறகை கிருபாலன் என்பவர் திருடி சென்றுள்ளார். இதனை பார்த்ததும் சுப்பையா- சந்திரா தம்பதியினர் கிருபாலணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த கிருபாலன் […]
