Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா..? சோதனையில் சிக்கிய மருந்தகம்… அதிரடியாக “சீல்” வைத்த அதிகாரிகள்..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்து விநியோகம் செய்து கொண்டிருந்த மருந்தக கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவில் கொரோனா விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்கிறார்களா ? என தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அப்போது அங்கு மருத்துவர் பரிந்துரை இன்றி சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்புறம் உள்ள மருந்து கடையில் மருந்துகள் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு வந்த தகவல்… சட்டவிரோத செயலால் சிக்கிய டிராக்டர்… காவல்துறையினர் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே மரக்கட்டைகளை டிராக்டரில் கடத்த முயன்ற போது காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவேகம்பத்தூர் உடையாகுளம் கண்மாயில் அரசுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. அங்கு உள்ள மரங்களை சிலர் வெட்டி கடத்துவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி பிரசன்னா மற்றும் உதவியாளர் ஜோசப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரம் கடத்தலை தடுத்தனர். இருப்பினும் மரங்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம நடத்திருக்காங்க..! விதிமுறைகளை மீறிய ஆர்ப்பாட்டம்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கு வங்காள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக உலகம்பட்டி காவல்துறையினர் எஸ்.புதூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சின்னையா, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க..! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 148 பேருக்கு சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தன்மைகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் தயாரா இருக்கு..! தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி காரைக்குடி, சிவகங்கையில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா நோயாளிகளுக்கு 500 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று நிருபர்களிடம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது இன்னும் ஒரு வார காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பயன்பாட்டிற்கு வந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கட்டுப்படுத்த வேண்டும்..! அதிகரித்து வரும் பாதிப்புகள்… மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தினமும் 125 பேருக்கு சராசரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவிய நாள் முதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்றவர்கள்… சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே துக்கவீட்டை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.வைரவன்பட்டியில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய இறுதி சடங்கில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கொரோனாகால கட்டத்தில் கூடியதை அறிந்து மருத்துவ அலுவலர் செந்தில்குமாரிடம் ஊராட்சி மன்ற தலைவர் சிவமணி அந்த கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்தார். அதன்படி கொரோனா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 135 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 135 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் 756 பேர் தற்போது சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது தான் காரணமாக..? தூக்கில் பிணமாக தொங்கிய டிராவல்ஸ் அதிபர்… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே டிராவல்ஸ் அதிபர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சங்கந்திடல் கண்மாய் பகுதியில் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காரைக்குடி காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெற்றி பெற்ற சந்தோசம்… தடையை மீறி கொண்டாட்டம்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே தி.மு.க.வினர் மீது தடையை மீறி பட்டாசு வெடித்ததற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டுகுடிபட்டியில் உலகம்பட்டி காவல்துறை துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கட்டுகுடிபட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், திருவாழ்ந்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாதவன் மற்றும் சிலர் திமுக கட்சியின் வெற்றியை தடையை மீறி பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அதனை தொடர்ந்து செந்தில்குமார், மாதவன் மற்றும் சிலர் மீது உலகம்பட்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 112 பேருக்கு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு… கோடை வெயிலை தணிக்க வந்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, கே.புதுப்பட்டி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சூறை காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த மழை பெய்துள்ளது. அதேபோல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சோதனையில் உறுதியான தொற்று… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகவர்கள்… முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் முகவர்கள் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வேட்பாளர்கள், அரசியல் கட்சி முகவர்கள், அரசு அலுவலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் கம்பனூரை சேர்ந்த ஒருவருக்கும், திருப்பத்தூர் நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், மல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், தாலுகா அலுவலகத்தில் பணிபுரிய கூடிய ஊழியர் ஒருவருக்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடையை மீறி நடத்திட்டாங்க..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியது தொடர்பாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த மாணிக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 20-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி சுவாமி புறப்பாடு கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடைபெறும் பால்குடம் எடுத்தல், தேர் திருவிழா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடப்பாவி இப்படி பண்ணிடானே..! மூதாட்டியை தள்ளிவிட்டு… மர்மநபர் செய்த செயல்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி சிவராமன் நகரில் பர்குணன் ( 70 ) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள் ( 65 ) என்ற மனைவி உள்ளார். இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சின்னம்மாளிடம் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெத்த பிள்ளைகளை இப்படி கொண்ணுட்டாளே..! கண்ணீர் மல்க கணவர் உருக்கம்… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் பெற்ற தாயே பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி ( 30 ) என்பவருக்கும், இளையான்குடியை அடுத்து உள்ள குயவர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரபுவுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு பிரசந்தா ( 4 ), பிருந்தா ( 7 ) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை அனைவரும் உணர வேண்டும்..! கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும்… தடையை மீறி திறக்கப்பட்ட கடைகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் அரசு அறிவித்துள்ள தடை உத்தரவை மீறி வியாபாரிகள் இறைச்சி கடைகளை திறந்தனர். அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கும், தினமும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமையில் இறைச்சி கடைகளில் கூட்டமாக குவிந்தனர். அதனை தொடர்ந்து இறைச்சி கடைகள் சனிக்கிழமை அன்று செயல்பட அரசு தடைவிதித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, சிவகங்கை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால நீர்வளமே கேள்விக்குறியாகிவிடும்..! எங்க கிராமத்துல இதை வைக்காதீங்க… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே கிராம மக்கள் வேறு கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செங்கற்கோவில் கிராமத்தில் நீர் வளம் நன்றாக உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் ஆழமான அளவில் கிராவல் மண் எடுக்கப்பட்டதால் நீரின் அளவு குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லங்குடி ஊராட்சிக்கு இந்த கிராமத்தில் இருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… சட்டவிரோதமான செயலால் சிக்கியவர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள திருமாஞ்சோலை கிராமம் பூவந்தி போலீஸ் சங்கத்தை சேர்ந்தது ஆகும். இந்த கிராமத்தில் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்பேரில் மாணிக்கம், லட்சுமிகாந்தன், சுவித்துராஜா, தங்கமணி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 110 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் முககவசம் அணியாமல் சென்ற 60 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தாலுகாவில் கொரோனா தொற்று ஒழிப்பு பணிக்காக திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் நகர் பகுதிகளான பெரியகடைவீதி, அஞ்சலக வீதி, நீதிமன்ற வளாகம், அண்ணா சிலை, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க், சிறு வணிக நிறுவனங்கள், கார், மோட்டார்சைக்கிள், பேருந்துகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தற்போது ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்பின் அகரத்திலும், கொந்தகையிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 2 குழிகள் தோண்டப்பட்ட போது சிறிய, பெரிய நத்தை கூடுகள், மண்பாண்ட ஓடுகள், சேதமடைந்த பானைகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மனித மண்டை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இரண்டு நாட்கள் விடுமுறை… மொத்தமா வாங்கிட்டு போணும்… சாக்கு பையுடன் குவிந்த மது பிரியர்கள்..!!

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரண்டு நாட்கள் மது கடைகளுக்கு விடுமுறை என்பதால் மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மது ரகங்களை சாக்குப்பையில் மொத்தமாக வாங்கி சென்றனர். தமிழகத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும், இரவு நேர முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மது கடைகளுக்கு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளில் நேற்று மாலையில் மது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அநியாயமா இப்படி செத்துட்டாரு..! நஷ்ட ஈடு கோரிய குடும்பம்… அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நீதிமன்றம் விபத்தில் பலியான டிராக்டர் டிரைவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 18 லட்சம் நஷ்ட ஈடு வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் டிராக்டர் டிரைவரான தர்மராஜ் ( 48 ) வசித்து வந்தார். இவர் அதே ஊரில் வசித்து வரும் பந்தல் காண்டிராக்டரனா திருநாவுக்கரசுவிடம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி திருவொற்றியூரிலிருந்து தேவகோட்டைக்கு பந்தல் சாமான்களை ஏற்றி கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா 2-வது அலை அச்சுறுத்தல்… நேற்று முன்தினம் ஒரேநாளில்… அரசியல் முகவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் பங்கேற்கும் அரசியல் முகவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அனைவரும் கொரோனா இரண்டாவது அலை பரவலை கருத்தில் கொண்டு கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனையை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றக்கூடிய அனைவரும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பத்திரிகையாளர்கள், அரசியல் முகவர்கள், அரசு அலுவலர்களுக்கான பரிசோதனை அரசு மருத்துவமனை மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிக்கணும்..! மீறினால் நடவடிக்கை பாயும்… அதிகாரிகள் எச்சரிக்கை..!!

சிவகங்கையில் நகராட்சி ஆணையாளர் வர்த்தக நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா ? என்று ஆய்வுகள் மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் அய்யப்பன் தலைமையில் ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது அதிக மக்களை வர்த்தக நிறுவனங்களில் அனுமதிக்கக்கூடாது. கடைகளில் ஏ.சி.க்களை செயல்பாட்டில் வைக்கக்கூடாது. கைகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடையை மீறி நடத்தப்பட்டவை… உற்சாகமாக கொண்டாடிய வீரர்கள்… கண்டு ரசித்த பார்வையாளர்கள்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடையை மீறி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த மாணிக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 20-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி சுவாமி புறப்பாடு கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடைபெறும் பால்குடம் எடுத்தல், தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 6 மாசம்தான் ஆகுது..! இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாலையில் நடந்து சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கழனிவாசல் புகழேந்தி தெருவில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாதனா ( 29 ) என்ற மனைவி உள்ளார். இவர் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சாதனா கர்ப்பமாகி இருப்பதாகவும் அதை பரிசோதனை செய்து வருகிறேன் என்றும் தனது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒரு மணிநேரம் கண்காணிப்பில் இருப்பார்கள்..! தினமும் போடப்படும் தடுப்பூசிகள்… மருத்துவர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தினமும் 50 பேருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பு நடவடிக்கையாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தினமும் 40 முதல் 50 பேருக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோடைக்காலம் தொடங்கியாச்சு..! ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா… கோலாகலமாக கொண்டாடிய கிராம மக்கள்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கிராம மக்கள் மீன்பிடி திருவிழா கொண்டாடினர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வருடம் நன்றாக பருவமழை பெய்ததால் ஏராளமான ஏரிகள், கண்மாய்கள் ஆகிய நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. இந்த நீரை கிராமமக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தினர். மேலும் ஊருணிகள் மற்றும் கண்மாய்களில் இனப்பெருக்கத்திற்காக ஏராளமான மீன் குஞ்சுகள் விடப்பட்டது. தற்போது பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாயில் கோடை காலம் தொடங்கி விட்டதால் தண்ணீர் வற்ற தொடங்கியது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் மீன்பிடி திருவிழா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனில் நடந்த வாக்குவாதம்… வாலிபரை ஆபாசமாக வீடியோ எடுத்த நண்பர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாலிபரை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி காளவாய்பொட்டல் பகுதியில் மணிகண்டன் ( 20 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனை சாலையில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், சத்யா நகரில் வசித்து வரும் ரூபன் என்பவருக்கும் இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரூபனின் நண்பர்களையும் மணிகண்டன் திட்டியதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? அதிகரித்து வரும் பாதிப்புகள்… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 85 பேருக்கு சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விளையாட்டுத்தனமாக செய்த செயல்… 4 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 4 வயது சிறுமி ஊருணியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கருங்குளம் கிராமத்தை அடுத்து உள்ள தனிவீரனேந்தல் கிராமத்தில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனனி ( 4 ), சாலினி ( 5 ) என இரண்டு மகள்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மதியம் பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுடன் ஊருணியில் இருந்து தூக்கு வாளியில் தண்ணீர் எடுப்பதற்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம நடத்துறாங்க..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 19 பேர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ஐந்து விளக்கு அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் மன்றம் சார்பில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அபிநயா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கொரோனா பரவி வரும் காலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்கள்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியில் சேதமுற்ற நிலையில் மண்பானை கண்டெடுக்கப்பட்டுள் ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு முதலில் இரண்டு குழிகள் தோண்டப்பட்ட போது மணிகள், பாசி, சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய கருப்பு கலர் உடைய மண் தட்டு, மண் கிண்ணங்கள், குடிதண்ணீர் பானைக்கு கீழே வைக்கும் மண்ணாலான பிரிமனை உட்பட பல பொருள்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி இப்படி நடக்காம தவிர்க்கணும்..! பள்ளத்தில் சிக்கிய பேருந்து… பொதுமக்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசு பேருந்து ஒன்று பராமரிக்கப்படாத சாலை பள்ளத்தில் சிக்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி-திண்டுக்கல் தேசிய சாலையில் நெடுஞ்சாலையாக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கிராமப்புறங்களிலும் மாநில நெடுஞ்சாலையாக சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு 90 சதவீதம் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதிலும் குறிப்பாக மருதிப்பட்டியில் இருந்து கிருஷ்ணாபுரம் வரையிலும் அரசினம் பட்டியில் இருந்து சூரக்குடி வரையிலும் வேங்கை பட்டிலிருந்து பிரான்மலை வரையிலும் உள்ள பல சாலைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு… அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை… தாசில்தார் ஆய்வு..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு கோரானோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வன்மையாக கண்டிக்கிறோம்..! தமிழ் மக்கள் மன்றத்தின் சார்பில்… சிவகங்கையில் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் மன்றத்தினர் பரபரப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக மக்கள் மன்றத்தின் சார்பில் காரைக்குடி ஐந்து விலக்கு அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பசுமை தமிழகம் மாவட்ட அமைப்பாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும்..! காற்று வளம் காக்கும் முயற்சியாக… மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் மரங்களும் சமூகத்தின் ஒரு அங்கம் என்ற எண்ணத்தை மாணவர்களின் மனதில் பள்ளி பருவத்தில் இருந்தே விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நமது உரிமை பாதுகாப்பு இயக்கம், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நீர்வளம், நிலவளம் காக்க கண்மாய் கரையோரங்களில் 10,000 பனை விதைகளை விதைத்தனர். அதன்பின்னர் ஆக்ஸிஜனை அதிகளவு தரக்கூடிய அரச மரக்கன்றுகளை காற்று வளம் காக்கும் முயற்சியாக பள்ளி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நான் அதுக்கு வர மாட்டேன்..! அலுவலர்களிடம் ஆட்டம் காட்டிய மாணவன்… அலேக்காக தூக்கிய அதிகாரிகள்..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவனை அலுவலர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வந்த போது அச்சத்தில் அந்த மாணவன் அவர்களிடமிருந்து தப்பி ஓடி வயல் பகுதியில் சுற்றி திரிந்துள்ளான். அந்த மாணவனை கிராம உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தேவகோட்டை தாசில்தார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? அதிகரித்து வரும் பாதிப்புகள்… கொரோனாவின் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக சிங்கம்புணரி, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருவிழா… கோவிலில் நடப்பட்ட மரக்கன்றுகள்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொட்டகுடி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரக்கன்று நடும் விழா மற்றும் நுழைவுவாயில் கும்பாபிஷேக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் நுழைவு வாயிலைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதற்கு முன்னதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால ரொம்ப பாதிக்கப்பட்டோம்..! எங்களுக்கு அனுமதி குடுங்க… மாவட்ட ஆட்சியருக்கு பரபரப்பு மனு..!!

சிவகங்கை மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் முடிதிருத்துவோர் சார்பில் மாவட்ட மருத்துவ சமுதாய பேரவை மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமையில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான உடற்பயிற்சி நிலையங்கள், பெரிய மால்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்களை முழுமையாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள் வைத்து நடத்தி வருபவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்திற்கு… இதை கட்டாயம் கொண்டு வரணும்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, வாக்கு எண்ணும் மையத்திற்கு வருவோர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முகவர்கள், வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் சுகாதாரத் துறையினர் மற்றும் குடும்ப […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை நம்பி தான் இருக்காங்க..! அவங்களுக்கு அனுமதி குடுங்க… கிராம மக்கள் கோரிக்கை..!!

ஊரக வளர்ச்சித்துறை 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சிவகங்கை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வியாதியஸ்தர்கள் மற்றும் 55 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை வேலையில் ஈடுபடுத்த வேண்டாம், இருமல், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை குடிச்சா கொரோனா வராது..! 1000 பயனாளிகளுக்கு… கபசுர குடிநீர் நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி காளையார்கோவில் வாரச்சந்தை வாசல் அருகே நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் வாரச்சந்தை வாசல் அருகே காளையார்கோவில் செஞ்சிலுவை சங்க கிளை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்றும் முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காளையார்கோவில் தாசில்தார் ஜெய நிர்மலா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் செஞ்சிலுவை சங்கத்தலைவர் தெய்வீக சேவியர், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகுத்தனர். இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நல்லுணர்வுடன் தொடங்கப்பட்ட அமைப்பு… ராணுவ வீரர்கள்… ரத்த தானம் நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைகை பட்டாளம் என்ற அமைப்பின் மூலம் 15 ராணுவ வீரர்கள் ரத்ததானம் வழங்கினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைகை பட்டாளம் என்ற அமைப்பை ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தற்போது நிலவி வரும் கொரோனா காலத்தில் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு சர்க்கஸ் கலைஞர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அந்த அமைப்பின் மூலம் இளையான்குடி பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி… சட்டென்று நடந்த விபரீதம்… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள முதுவந்திடல் கிராமத்தில் லிங்கசாமி (40) என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடியுடன் மின்னல் அவரை தாக்கியுள்ளது. அதில் லிங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் லிங்கசாமியின் உடலை கைப்பற்றி திருபுவனம் அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… அதிகரித்து வரும் பாதிப்புகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 80 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக சிங்கம்புணரி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் கவிழ்ந்த வாகனம்… பொதுமக்கள் பரபரப்பு தகவல்… காவல்துறையினர் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சரக்கு வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரேஷன் அரிசி மூடைகள் சிதறி கிடந்தன. சிவகங்கை மாவட்டத்தில் சரக்கு வாகனம் ஒன்று மானாமதுரையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த வாகனம் பாப்பான்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் வாகனத்தில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி விழுந்தன. அந்த வாகனத்தின் டிரைவர் சங்கரபாண்டியன் (24) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம நடத்துறாங்க..! போலீசுக்கு வந்த தகவல்… அலறியடித்து ஓடிய மாடுபிடி வீரர்கள்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தி கொண்டிருந்த மாடுபிடி வீரர்கள் காவல்துறையினரை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் சிறப்பு வாய்ந்த பூங்குன்றநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு நூற்றுக்கணக்கான காளை மாட்டினை உரிமையாளர்கள் கோவில்பட்டி […]

Categories

Tech |