Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்ட சோதனை… இரட்டை இலக்காக உருமாறிய கொரோனா… பொதுமக்கள் பீதி..!!

சிவகங்கையில் வேகமெடுத்து பரவிவரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் சென்ற வருடம் ஏப்ரல் கொரோனா பரவியது. இதையடுத்து கொரோனா படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதன்பின் சிறிது நாட்களாக குறைந்திருந்த கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனா தோற்றால் கடந்த 18-ஆம் தேதி அன்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கனும்… சிவகங்கையில் விழிப்புணர்வு..!!

சிவகங்கை சங்கராபுரம் பகுதியில் ஊராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த விழிப்புணர்வில் பொதுமக்களிடம் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சணமுகம் தலைமை தாங்கியுள்ளார். இதில் பொது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இருக்குறதையும் இழக்க நாங்க தயாராயில்லை… இதுக்கு ஒரு நியாயம் வேணும்… உண்ணாவிரதத்தில் இறங்கிய கிராம மக்கள்..!!

சிவகங்கையில் கிராம மக்கள் காரைக்குடி-மேலூர் வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் கூலி வேலை மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் காரைக்குடியிலிருந்து மேலூர் பகுதி வரை பைபாஸ் சாலை அமைப்பதற்காக சர்வே அளக்கப்பட்டு பணியும் விரைவாக நடைபெற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் அலுவலகத்திற்கு வந்த தகவல்… வசமாக சிக்கிய அ.தி.மு.க. பிரமுகர்… அதிகாரிகள் தீவிர விசாரணை..!!

சிவகங்கை கல்லல் பகுதியில் அ.தி.மு.க. பிரமுகரின் வீட்டில் சோதனையின்போது ரூ.70,000 பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் உள்ள ஆளவந்தான்பட்டியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவி உள்ளார். நாகராஜன் செவரக்கோட்டை ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அ.தி.மு.க. பிரமுகர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக இவருடைய வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன்… பங்குனி மாதத்தையொட்டி… சந்தானலட்சுமி சிறப்பு அலங்காரம்..!!

சிவகங்கை தேவகோட்டை அருகே பங்குனி மாதத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் சாமியாடி பெரியகருப்பன் தெருவில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும். அதேபோல் இந்த வருடமும் பங்குனி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் வண்ண பூக்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமயபுரம் மாரியம்மனுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கியாச்சு… எந்த அசம்பாவிதமும் நடந்துற கூடாது… வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு..!!

சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பாதுகாப்பு முன்னேற்பாடாக தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… அனைவரும் தடுப்பூசி போட்டுக்கோங்க… வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தல்..!!

கொரோனா வேகமெடுத்து பரவி வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சிவகங்கையில் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வேகமெடுத்து வரும் கொரோனாவால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்கள் ஆகியவ இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் நம் முன்னோர்கள் பயன்படுத்தியது… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு… அதிகாரிகள் தகவல்..!!

சிவகங்கை மாவட்டம் அகரத்தில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சிதைந்த நிலையில் தானியங்கள் சேமித்து வைக்கும் கலன் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி கொந்தகையிலும், கீழடியிலும், அகரத்திலும் நடைபெற்று வருகிறது. கீழடியில் தோண்டப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஒரு குழியில் சில்லுவட்டுக்கள், பாசிமணிகள், பானை ஓடுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இதே போன்று கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சேதமுற்ற முதுமக்கள் தாழிகள் மற்றும் முதுமக்கள் தாழி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அகரத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எச்சரிகையா இருங்க… மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… மறு உத்தரவு வரும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்..!!

சிவகங்கை கல்லல் அருகே ஒரே வகுப்பை சேர்ந்த 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வேகமெடுத்து பரவிய கொரோனா சமீபகாலத்தில் குறைந்திருந்தது. இதையடுத்து சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வருகின்ற 22-ஆம் தேதி முதல் மறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர முன்னேற்பாடு… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி என 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளது. காரைக்குடி தொகுதியில் 443 பூத்கள் உள்ளது. இங்கு 1640 மின்னணு வாக்குப்பதிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது ரொம்ப மோசமா இருக்கு… சாலையை மறித்த கல்லூரி மாணவர்கள்… அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை..!!

சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் தரமான உணவு பொருட்களை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராஜாதுரைசிங்கம் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பிற்பட்டோர் விடுதி கல்லூரி அருகே உள்ளது. இந்த விடுதியில் முப்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் புளித்த மற்றும் கெட்டுப்போன இட்டிலியையும், தரமற்ற உணவுகளையும் மாணவர்களுக்கு வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவர்கள் பல முறை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்றவருக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள ராம்நகர் ஆறாவது வீதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கண்மணி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திகேயன் வேலைக்கு சென்றுவிட்டார். கண்மணி அமராவதிபுதூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சந்தைக்கு செல்பவர்கள்… இதை கட்டாயம் கடைப்பிடிக்கணும்… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!!

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சந்தைக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுப்பட்டி கல்லல் பகுதியில் வியாழக்கிழமையும், சொக்கநாத புரத்தில் செவ்வாய்க்கிழமையும், பாகனேரியில் புதன்கிழமையும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைகளில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு வந்த ரகசிய தகவல்… வாகன சோதனையில் சிக்கியவை… 14 பேர் மீது வழக்குப்பதிவு..!!

சிவகங்கை அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தவர்களிடம் ரூ.15 ஆயிரம் பறிமுதல்  செய்யப்பட்டதோடு 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி-திருப்பூர் சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தலை நிலை கண்காணிப்புக்குழுவினர், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுப்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணனுக்கு கிடைத்த தகவலின் பேரில் வாகன சோதனையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம்… விவசாயி மனு… மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை தேவகோட்டை அருகே 223 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி அருகே கடம்பாகுடி, கே.சிறுவனூர் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை ஒட்டியுள்ள 223 ஏக்கர் வனக்காடுகள் வனத்துறைக்கு சொந்தமானது. இது ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த போது அந்த வனகாடுகள் அருகே ஓடுகின்ற ஆறுகளில் மணல் அரிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக 1976-ஆம் ஆண்டு தென்னை வளர்ப்பு செய்து கொள்ள பலருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்க பையன் சாவில் மர்மம் இருக்கு..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… போலீசார் தீவிர விசாரணை..!!

சிவகங்கை தேவகோட்டையில் கார் டிரைவர் மர்மமான முறையில் நீரில் மூழ்கி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். கார்திக்கிற்கு திருமணம் ஆகவில்லை. இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திக் சிலம்பணி ஊருணியில் நீரில் மூழ்கி சடலமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறை கைது..!!

சிவகங்கை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தாயமங்கலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகனை காணாமல் தவித்த பெற்றோர்… மர்மமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

சிவகங்கை அருகே டிரைவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி வாசக சாலை வீதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்தி வெளியில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவில்… மாசி திருவிழா… கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் சிறப்பு வாய்ந்த புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அருணகிரிநாதர், அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் உள்ளது. சிவபெருமானுடைய 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் இந்த கோவிலில் நடைபெற்றது. இந்த கோவிலில் வருடம்தோறும் 11 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறுவது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… காங்கிரஸ் கட்சி வேட்பாளர்… கவுன்சிலர் பதவி ராஜினாமா..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேவகோட்டை அருகே நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகனான கருமாணிக்கம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 3-வது வார்டு கவுன்சிலராக கண்ணங்குடி யூனியனில் இருந்தார். இந்நிலையில் வருகின்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில்… மாசி-பங்குனி திருவிழா… அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா..!!

சிவகங்கை அருகே மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி-பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்வேறு கோவில்களில் மாசி-பங்குனி மாதத்தை முன்னிட்டு திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் சிறப்பு வாய்ந்த மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசித் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம் சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை அருகே எலக்ட்ரீசியன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பரமக்குடியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்தார். அபிஷேக் எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சாலை விபத்து ஒன்றில் உயிருக்கு போராடிய நிலையில் கச்சாத்தநல்லூர் கிராமம் அருகே சாலையோரத்தில் கிடந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை மீறிட்டாங்க… கிராம நிர்வாக அலுவலர் புகார்… 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

சிவகங்கை இளையான்குடி அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தனியார் திருமண மஹால் ஒன்று உள்ளது. அந்த மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கண்டனி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன், சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.விற்கு சென்ற பெருமச்சேரி பகுதியில் வசித்துவரும் முருகன், கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த சைமன் ஆகியோர் சென்றனர். மேலும் இளையான்குடியில் உள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மனநிலை சரியில்லாதது தான் காரணமா..? சிவகங்கையில் நடந்த கொடூரம்… போலீசார் விசாரணை..!!

சிவகங்கை காரைக்குடி அருகே மனநிலை பாதிக்கப்பட்டவர் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா நகரில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவர் மனநிலை சரி இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அபார்ட்மெண்டில் உள்ள மொட்டை மாடியில் யாரும் இல்லாத சூழ்நிலையில் 100 அடி உயரத்தில் அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் முருகனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட அக்கம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… இதை கண்டிப்பாக போட்டு தான் ஆகணும்… மீறினால் அபராதம்..!!

சிவகங்கை சிங்கம்புணரியில் முககவசம் அணியாமல் சென்ற 14 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் பல்வேறு இடங்களில் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரியில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இளையான்குடியில் மாசி களரி திருவிழா… சிறப்பாக நடைபெற்ற அலங்கார பூஜைகள்… பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை இளையான்குடி அருகே மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் மாசிகளரி திருவிழா கோட்டையூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தல், அருள்வாக்கு பெறுதல், சாமி பாரி வேட்டை நடத்தி அருளாசியுடன் குறிகேட்டல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் இருளப்பன், கருப்பணசாமி, இருளாயி முனியசாமி, ராக்கச்சி, சோனையா ஆகிய தெய்வங்களுக்கு அலங்கார […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையோரம் சென்றவரிடம் வழிப்பறி… சிவகங்கையில் பரபரப்பு புகார்… 2 பேர் கைது..!!

சிவகங்கை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதி அருகே உள்ள டி.வேலாங்குளம் கிராமத்தில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் படமாத்தூர் செல்லும் சாலைக்கு திருப்பாச்சேத்தியிலிருந்து சென்றுள்ளார். அப்போது கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், வல்லரசு ஆகியோர் நான்கு வழி சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து அங்கு வந்த குருநாதன் வழிமறித்து உள்ளனர். மேலும் அவருடைய சட்டை பாக்கெட்டில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் சிக்கியவர்கள்… காவல்துறை கைது… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மானாமதுரையில் கொள்ளையடிப்பதற்காக திட்டம் போட்டு கொண்டிருந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஐந்து நபர்கள் சந்தேகம் படும்படியாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒருவர் கிளாங்காடூர் பகுதியை சேர்ந்த ரவுடி அன்பழகன் என்பது தெரியவந்தது. அன்பழகன் அப்பகுதியில் பதில் இருந்ததும் தெரிந்தது. அவருடன் இருந்தவர்கள் கிளாங்காடூர் பகுதியை சேர்ந்த அமர்நாத், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியல் அடையாளம்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை கொந்தகையில் நடைபெற்ற ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் 5 கட்டங்களாக தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கீழடியிலும் அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளிலும் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் சென்ற வருடம் நடைபெற்றது. அதில் 2500 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய அடையாளங்களாக பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி… இரண்டாம் இடத்தை பிடித்த… காரைக்குடி பள்ளி மாணவி..!!

மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் காரைக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மாநில அளவிலான சப்-ஜூனியர் தரவரிசை இறகுப்பந்து, சென்னை மாவட்ட இறகுப்பந்து கழகம் மற்றும் தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் சார்பில் சென்னையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 13 வயதிற்கு உட்பட்ட 200 மாணவிகள் இந்த இறகுப்பந்து போட்டியில் கலந்து கொண்டனர். இந்த இறகுப்பந்து போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை சேர்ந்த மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி கலந்து கொண்டார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க… தீவிரம் காட்டும் மாவட்ட நிர்வாகம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று சில இடங்களில் வேகமெடுத்து பரவி வருவதால் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முககவசம் அணியாமல் பொது இடங்களில் செல்பவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்துள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்றால் ரூ.500, பொது இடங்களில் எச்சில் துப்பினான் ரூ. 500, அரசினால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா..? பெட்ரோல் பங்க் நடத்தியவரின் விபரீத முடிவு… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கையில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வந்தவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடிப்பட்டி கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்தார். இவர் பூவந்தி போலீஸ் சரகம் அருகே உள்ள படமாத்தூர் பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த பெட்ரோல் பங்க் குத்தகையில் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் முருகானந்தம் சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பெட்ரோல் பங்கிற்கு பின்புறம் அறை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை மீறிய அ.தி.மு.க… சிவகங்கையில் பரபரப்பு புகார்… காவல்துறை வழக்குப்பதிவு..!!

சிவகங்கையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அ.தி.மு.க.வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஆயிரவைசிய திருமண மகால் உள்ளது. இந்த மகாலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய தலைவர்கள் ராஜபிரதீப், சிலம்பரசன் ஆகியோர் சின்னங்கள் மற்றும் கட்சி கொடிகள் அடங்கிய வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி கூட்டமாக நின்றுள்ளனர். மேலும் அவர்கள் கொரோனா தொற்று நடைமுறை மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளனர். இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் வடக்கு குரூப் கிராம நிர்வாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டாயம் போட்டுக்கோங்க… மீறினால் அபராதம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கையில் முகவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்புவனம் பகுதியில் உள்ள நரிக்குடி ரோடு, நான்குவழிச் சாலை, திருப்புவனம் நகரில் உள்ள மெயின்ரோடு, வைகை ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த செயல்… தாய் மகனுக்கு நேர்ந்த கொடுமை… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை இளையான்குடி அருகே தாய், மகன் இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலத்துறையூர் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் முத்துசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபி, கண்ணப்பன், முத்துசாமி மகன் அக்னிச்சாமி மற்றும் நிவாஸ், வசந்த் உள்ளிட்ட 7 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க இருக்கோம்… அச்சமில்லாமல் வாக்களியுங்கள்… ராணுவ படை கொடி அணிவகுப்பு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிவகங்கை மானாமதுரையில் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் காவல் துறையினரும், பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… திடீரென வந்த தேனீக்கள்… மூச்சை விட்ட முதியவர்..!!

சிவகங்கை அருகே தேனீக்கள் கொட்டி முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் சின்னையா, சோலையன், சரோஜா ல், செல்லத்துரை ஆகியோர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று தேடி கூட்டிலிருந்து கூட்டமாக வந்த தேனீக்கள் இவர்கள் நான்கு பேரையும் மோசமாக கொட்டியுள்ளது. இதனால் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சின்னைய்யா (வயது 70) மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றுவந்த சிறைகைதி… திடீரென நடந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை திருப்பத்தூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாப்பா ஊரணி பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திருப்பத்தூரில் உள்ள சிறையில் தண்டனை பெற்று வந்தார். இந்நிலையில் இவருக்கு முழங்காலில் பிரச்சினை இருந்ததாகவும், அதனால் அதிக வலி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை காவல்துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறை கைது..!!

சிவகங்கை இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இளையான்குடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இளையான்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் புலியூர் கிராமத்தில் வசித்து வரும் பூமி என்பது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள்… எதிர்பாரமல் நடந்த விபரீதம்… 3 பேர் படுகாயம்..!!

சிவகங்கை காரைக்குடி அருகே பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோவிலூர் பகுதியில் பிரகாஷ், சோலை, செந்தில் ஆகிய மூன்று பேர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று வேப்பங்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இவர்கள் 3 பேரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது கல்லல் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு […]

Categories
அரசியல் சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடி சட்ட மன்ற தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள், குறைபாடுகள்…!!!

செட்டிநாடு என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கரைக்குடி. தமிழர்கள் கட்டிட கலையை உலகறிய செய்யும் காலை நயமிக்க நகரத்தார் பங்களாக்கள் உலகிலேயே தாய் மொழிக்காக கம்பன் கழகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ் தாய் கோவில் ஆகியவை இந்த தொகுதியின் சிறப்பு அம்சங்கள். சுதந்திரத்திற்கு பின்னர் 1952லிருந்து 15 சட்ட மன்ற தேர்தல்களை எதிர் கொண்டுள்ள காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ்,அதிமுக தலா 4 முறையும், திமுக 3 முறையும், சுதந்திரா கட்சி 2 முறையும், தமிழில் மாநில காங்கிரஸ், பாஜக […]

Categories
அரசியல் சிவகங்கை மாவட்ட செய்திகள்

மானாமதுரை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

தமிழரின் தொன்மையான நாகரிகத்தை உலகிற்கு பறைசாற்றி கொண்டிருக்கும் கீழடியை உள்ளடக்கியது மானாமதுரை சட்ட மன்ற தொகுதி. கலிமண் பொம்மைகள், கடம் இசைக்கருவி  உள்ளிட்டவை இந்த தொகுதியின் சிறப்பு அம்சங்களாகும். சுதந்திரத்திற்கு பின்னர் 1952 லிருந்து 15 சட்ட மன்ற தேர்தல் மற்றும் 1 இடை தேர்தலை மானாமதுரை எதிர் கொண்டுள்ளது. 1977லிருந்து தற்போது வரை மானாமதுரை தனித்தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் 6 முறை அதிமுகவும், 3 முறை  பெற்றுள்ளன. திமுக, சுதந்திரா காட்சிகள் தலா 2 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திறந்தவெளி சிறைச்சாலையில்… கைதி திடீர் மரணம்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை காளையார்கோவில் அருகே திறந்தவெளி சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீரென மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்தார். தமிழ்ச்செல்வன் மதுரை சிறையில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கியதன் காரணமாக தண்டனை பெற்று வந்தார். சிவகங்கை காளையார்கோயில் அருகே புரசடிஉடைப்பு கிராமத்தில் திறந்தவெளி சிறைச்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின் தமிழ்ச்செல்வன் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். திடீரென நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வனுக்கு உடல் நல […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எந்திரம் மூலம் நிலக்கடலை பயிரிடுவது எப்படி..? தமிழக வேளாண்மை துறை மூலம் செயல் விளக்கம்..!!

சிவகங்கை எஸ்.புதூரில் எந்திரம் மூலம் நிலக்கடலை பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் எந்திரம் மூலம் எவ்வாறு நிலக்கடலை விதைப்பு செய்யலாம் என்று செயல்விளக்கம் நடைபெற்றது. இந்த செயல் விளக்கம் தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் இணைந்து மின்னமலைப்பட்டி கிராமத்தில் எந்திர மூலம் நிலக்கடலை விவசாயம் செய்வது குறித்து செயல்விளக்கம் நடத்தியது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை பழையனூர் சுந்தரமகாலிங்கம் கோவில்… கோலாகலமாக நடைபெற்ற தேர்த் திருவிழா… பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை பழையனூர் சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று முன்தினம் தேர் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் சந்தன கருப்பண சாமி, அங்காள ஈஸ்வரி உடனமர் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து நாட்கள் கோலாகலமாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் தொடங்கியது. அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்கள் மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை… சிறப்பு முகாமில் வழங்கப்பட்டது… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 659 வாக்காளர்களுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாமில் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருக்கும் 659 வாக்காளர்களுக்கு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யப்பட்டு சிறப்பு முகாமில் வழங்கப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். புதிய புகைப்பட அடையாள அட்டைகள் e-EPIC செயலி மூலம் சிறப்பு முகாமில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில்… மாசி பங்குனி திருவிழா… பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!

சிவகங்கை மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி-பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே பிரசித்தி பெற்ற மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி-பங்குனி திருவிழா தற்போது சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினால் நினைத்தது நடக்கும் என்பது வழக்கம். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு… போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு..!!

திருப்பத்தூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வாக்குச்சாவடி மையங்களை போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை? என்பது குறித்தும் காவல்துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுமுகம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் பகுதியில் ரணசிங்கபுரம், தென்மாபட்டு, பாபா அமீர்பாதுஷா மேல்நிலைப்பள்ளி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

களமிறங்கிய துணை ராணுவப்படை… ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… 24 மணிநேர தீவிர சோதனை..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கையில் துணை ராணுவ படையினர் காவல்துறையினருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை,.மானாமதுரை, திருப்பத்தூர் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 12-ஆம் தேதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொட்டியத்து கருப்பர் சேவுகப்பெருமாள் அய்யனார்… மகா சிவராத்திரியை முன்னிட்டு… பால்குட விழா..!!

சிவகங்கை கல்லல் அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு தொட்டியத்து கருப்பர் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அருகே சொக்கநாதபுரம் சேவுகப்பெருமாள் அய்யனார் தொட்டியத்து கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காவடி எடுத்தல், பால்குட விழாவும் மாசி மகாசிவராத்திரி முன்னிட்டு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காவடி, பால்குடம், சந்தனகுடம் எடுத்து நேரத்தி கடனை செலுத்தியுள்ளனர். இதையடுத்து தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இந்த கோவில் […]

Categories

Tech |