நடிகர் மணிகண்டனின் திறமையை பார்த்து உலகநாயகன் கமலஹாசன் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார். நடிகர் மணிகண்டன் தற்போது வெளியான ஜெய்பீம் படத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். இப்படத்திற்கு பிறகு நடிகர் மணிகண்டன் பிசியாக நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தின் நடிப்பில் பின்னி இருக்கிறார். இம்மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் நன்றாக இருந்தால் பாராட்டும் குணம் உடையவர் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள். […]
