விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை ஒட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும். பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை என்றும். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. […]
