நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி மாநகரத்தின் மையப் பகுதியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவரின் சிலையை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காதது மாபெரும் கண்டனத்திற்குரியது. நடிப்பின் பல்கலைக்கழகமாக விளங்கிய ஒரு மாபெரும் கலைஞரின் திருவுருவ சிலையை திறக்க அனுமதி கிடைக்காத […]
