கோவில் சிலைகளை சேதப்படுத்திய வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள திருவலம் பகுதியில் தீர்த்தகிரி மலை அமைந்துள்ளது. அந்த மலையின் அடிவாரத்தில் ராமர், லட்சுமணர், அம்மன் உள்ளிட்ட 7 சிலைகளை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் திருவலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருவலம் காவல்துறையினர் தனியார் மருத்துவமனையின் கட்டிட பிரிவின் […]
