திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மன் கோவிலுக்கு நுழைந்த மர்ம நபர்கள் அம்மன் சிலையை உடைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் உவரி அடுத்துள்ள குட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆனந்தவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் பூசாரி கோவிலை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கோவிலுக்கு வந்து பார்த்தபோது அம்மனின் கண்மலர் கீழே கிடந்துள்ளது. மேலும் அம்மன் சிலையில் பல இடங்களில் […]
