தமிழ்நாட்டில் கடந்த 11 மாதங்களில் 141 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை வெளிநாடு உள்பட பல மாநிலங்களிலிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மீட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மே முதல் ஏப்ரல் 2021ஆம் ஆண்டு வரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 80 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 9 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். […]
