சிலிண்டர் வெடித்து குடிசை வீடு சேதம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பச்சையம்மாள் உயிர் தப்பி விட்டார். ஆனால் அவரின் உறவினரான மணிமாறனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மணிமாறனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]
