மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அதைப் பெறுவதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. சமையல் எரிவாயு நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் இந்த மானியம் கிடைக்க போவது கிடையாது. அதற்கு மாறாக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே ரூபாய் 200 மானியம் கிடைக்கும். இவர்கள் மட்டுமே அதைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். […]
