பொகாடோ சர்வதேச விமான நிலையத்தின் வழியே மெக்சிகோவுக்கு கடத்தி செல்ல இருந்த 140 சிலந்திகளை கொலம்பிய அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதாவது அங்கு உள்ள சரக்குப் பெட்டிகளை சோதனை மேற்கொள்ளும் போது வெளிநாட்டு பொருட்கள் உள்ளதாக பார்சல் நிறுவனத்திடமிருந்து வந்த குறிப்பினை பார்த்த அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். இந்நிலையில் அந்த பெட்டியில் 140 பிளாஸ்டிக் பைகளில் சிலந்திகள் தனித்தனியே அடைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த சிலந்திகளை பறிமுதல் செய்தனர். அதில் […]
