அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற சிற்றுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் என்சினோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று அகதிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சிற்றுந்து சென்றுள்ளது. இந்த நிலையில் ஓட்டுனர் சிற்றுந்தை வளைவில் திருப்பியுள்ளார். அப்போது சிற்றுந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 10 பேர் சம்பவ இடத்துலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து […]
